பழைய கத்தோலிக்க தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் – Old christian Songs Book

வருகைப் பாடல்கள்
1.   சீர் இயேசு நாதனுக்கு

ஜெய மங்களம் அதி … (2)

திரு ஏக நாதனுக்கு

சுப மங்களம்!

 

பார் ஏரு மீதனுக்கு

பரம பொர்பாதனுக்கு … (2)

மேர் ஏரு போதனுக்கு

நித்திய சங்கீதனுக்கு!

சீர் இயேசு..

 

ஆதி சர்வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்

அகில பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் .. (2)

நீதி பரம்பாளனுக்கு நித்திய குணாலனுக்கு

போதும் மனு பூலனுக்குஉயர் மனுவேலனுக்கு!

சீர் இயேசு..

 

வானாபிமானனுக்கு, வானனுக்கு மங்களம்

வளர் கலை தியாயனுக்கு நியானனுக்கு மங்களம்

தானல் தேயனுக்கு கன்னி மரி சேயனுக்கு

ஓனார் சகாயனுக்கு உரு பெத்தலேயனுக்கு

சீர் இயேசு..

 

2.   வரம் கேட்டு வருகின்றேன் இறைவா – என்

குரல் கேட்டு அருளாயோ தலைவா

 

பகை சூழும் இதயத்தின் சுவரை யெல்லாம் – என்

பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன்

புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் – உன்

பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

 

நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் – இனி

நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன்

பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் – என்

பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்

 

3.   அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே   

அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே _ 2

 

ஒரு மனத் தோராய் அனைவரும் வாழ்வோம்

அருள் ஒளி வீசும் ஒருவழி போவோம்

பிரிவினை மாய்த்து திருமறை காப்போம்  _2

இருமையில் இறைவன் திருவுளம் காண்போம்

__ அன்பினில்

 

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி

பெருமை செய்தாரே புனித பேரன்பை

பிறந்த நம்வாழ்வின் பயன்பெற வேண்டும் –2

பிறரையும் நம்மைப்போல் நினைத்திட வேண்டும்

__ அன்பினில்

 

4.   நாம் மகிழ்வோம் – தினம்

நாம் வளர்வோம்

திருப்பலி வழங்கும் வரம் – பல பெற்றிட

நாம் மகிழ்வோம்.

 

தூயவன் அருளை துனையாய் கொண்டு

துயரின் பிடியில் திடமாய் அகன்று

இறைவனில் இணைந்து …. இன்பத்தில் நிலைத்து

உள்ளம் மகிழ்வோம் உவகையில் நிறைவோம்.

 

இறைவனின் இதயம் இனிதே திறக்க

அவர்தம் கரங்கள் அன்பாய் அழைக்க

பலியினில் இணைந்து … பலன்பல பெறுவோம்

இதயங்கள் இணைப்போம் இறைவனில் உயிர்ப்போம்.

 

5.   புது வானம் ஒன்றும் புது வையம் ஒன்றும் – இந்தப்

பூமியில் மலர்ந்திடக் கண்டேன்

புது வாழ்வு ஒன்றும் புது ஆட்சி ஒன்றும் – இந்தப்

பொழுதினில் புலர்ந்திடக் கண்டேன்

 

எங்கும் இளமை இளமை இளமை

எங்கும் வளமை வளமை வளமை

எங்கும் புதுமை எங்கும் இனிமை

 

போவதோ பெரும் பயணங்கள் – நம்

பாதையில் பல தீபங்கள்

நாவினில் இன்பக்கீதங்கள் – நம்

நெஞ்சினில் நன்றி உணர்வுகள்

 

கண்டதோ என்றும் நன்மைகள் – நாம்

கூறுவோம் இன்று நன்றிகள்

வென்றதோ பல உள்ளங்கள் – தெய்வம்

வாழ்ந்திடும் அன்பு உள்ளங்கள்

 

6.   மகிழ்வினை விதைத்திட

மனங்களை உயர்த்திட

உறவினராய் வருவோம்

மன்னவன் இயேசுவின் பொன்வழி நடந்திட

அன்பினில் வாழ்ந்திடுவோம்

இறை அன்பினில் வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை

 

இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய்

பூமியில் ஒன்றுமில்லை — 2

இறைவழி வாழ்ந்திடும் முறை இது தெரிந்தால்
பகைமையில் தொல்லை இல்லை – 2

பிரித்திடும் சுயநல வேர்களை அறுப்போம்

புதுவழி படைத்திடுவோம் — 2

நாம் இறைவழி வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை

 

மனிதனின் உரிமைகள் மறுத்திடும் சமூகம்

இறைவனின் குடும்பமில்லை – 2

எளியவர் வாழ்வுகள் அழிவது தொடர்ந்தால்

இறைவனும் உயிர்ப்பதில்லை — 2

அனைவரும் வாழ்ந்திட நம்மையே அளிப்போம்

புதுவழி படைத்திடுவோம் — 2

நாம் இறைவழி  வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை

 

7.   வாருங்கள் அன்பு மாந்தரே

பலி செலுத்த வாருங்கள்

பண் இசைத்துப் பாடுங்கள்

வாருங்கள் அன்பு மாந்தரே

 

இயேசு என்னும் ஆதவன் கதிர் விரிக்கக் காணுங்கள்

இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள்

ஆசை என்ற இருள் மறைந்து அன்பு உதயமாகவே

அருள் வளங்கள் இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள்

 

8.   வாருங்கள் நம் இறைவன் இல்லம் வாருங்கள்

கூடுங்கள் நல் சமூகமாக கூடுங்கள்

நம் மீட்பராய் நல் நேசராய் (2)

உறவுகொள்ள வாருங்கள், பலிபொருளாய் மாறுங்கள்

வாருங்கள் இறைவன் இல்லம் வாருங்கள்

கூடுங்கள் நல் சமூகமாக கூடுங்கள்

 

எங்கும் பொங்கும் அவரின் அன்பு இல்லம் சேர வாருங்கள்

தாங்கும் கரங்கள் நம்மை என்றும் இறுக பற்ற வாருங்கள்

அழைக்கும் தேவன் அவன் குரலினை கேளுங்கள்

அமைதியின் வாழ்வினையே அழைத்திட வாருங்கள்

நன்மை கோரி நலம் செழிக்க நாடி வாருங்கள்

நலன்கள் யாவும் தந்தவரை புகழ்ந்து பாடுங்கள் (2)

 

உண்மை அன்பு உழைப்பு நேர்மை ஓங்கி செழிக்க வாருங்கள்

கருணை பொங்கும் அவரின் ஆட்சி நிலைத்து நிற்க வாருங்கள்

புனிதம் மலர்ந்திடவே புரட்சி குரல் கொடுங்கள்

புதியதோர் சமுதாயம் படைத்திட வாருங்கள்

புவியில் இறைவன் ஆட்சி மலர ஓடி வாருங்கள்

புதுமை செய்யும் இறைவனையே பாடி வாருங்கள் (2)

 

9.   இறைவனைப் புகழ்வோம் வாருங்களே

இணையில்லா அன்பில் இணைந்திடுவோம்

இந்நாளில் நம்மை அழைக்கின்றார்

எல்லோரும் ஒன்றாய் கூடிடுவோம்

 

இருகரம் நீட்டி அழைக்கின்றார்

இதயத்தை திறந்து அழைக்கின்றார்

உதயத்தை தேடி அலைவோரின்

உள்ளத்தை தேடி அழைக்கின்றார்

புதிய வாழ்வில் புனிதம் பெறுவோம்

புனிதன் இயேசு கொடுக்கின்றார்

 

10. வாருங்கள் நம் இறைவன் இல்லம் வாருங்கள்

கூடுங்கள் நல் சமூகமாக கூடுங்கள்

நம் மீட்பராய் நல் நேசராய் (2)

உறவுகொள்ள வாருங்கள், பலிபொருளாய் மாறுங்கள்

வாருங்கள் இறைவன் இல்லம் வாருங்கள்

கூடுங்கள் நல் சமூகமாக கூடுங்கள்

 

எங்கும் பொங்கும் அவரின் அன்பு இல்லம் சேர வாருங்கள்

தாங்கும் கரங்கள் நம்மை என்றும் இறுக பற்ற வாருங்கள்

அழைக்கும் தேவன் அவன் குரலினை கேளுங்கள்

அமைதியின் வாழ்வினையே அழைத்திட வாருங்கள்

நன்மை கோரி நலம் செழிக்க நாடி வாருங்கள்

நலன்கள் யாவும் தந்தவரை புகழ்ந்து பாடுங்கள் (2)

 

உண்மை அன்பு உழைப்பு நேர்மை ஓங்கி செழிக்க வாருங்கள்

கருணை பொங்கும் அவரின் ஆட்சி நிலைத்து நிற்க வாருங்கள்

புனிதம் மலர்ந்திடவே புரட்சி குரல் கொடுங்கள்

புதியதோர் சமுதாயம் படைத்திட வாருங்கள்

புவியில் இறைவன் ஆட்சி மலர ஓடி வாருங்கள்

புதுமை செய்யும் இறைவனையே பாடி வாருங்கள் (2)

 

11. தமிழால் உன் புகழ் பாடி

தேவா நான் தினம் வாழ

வருவாயே திருநாயகா – வரம்

தருவாயே உருவானவா

 

எனை ஆழும் துன்பங்கள் கணையாக வரும்போது

துணையாக எனையாள்பவா

மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு

குணமாக்க வருவாயப்பா – எனை

உனதாக்கி அருள்வாயப்பா

 

உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்

வழிகாட்டும் ஒளியானவா

நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே

நாதா உன் புகைழ் பாடுவேன் – எனை

நாளெல்லாம் நீ ஆளுவாய்

 

12. தலைவா உனை வணங்க – என்

தலைமேல் கரம் குவித்தேன்

வரமே உனைக் கேட்க – நான்

சிரமே தாள் பணிந்தேன்.

 

அகல்போல் எரியும் அன்பு – அது

பகல்போல் மணம் பரவும்

நிலையாய் உனை நினைத்தால் – நான்

மலையாய் உயர்வடைவேன் – 2

 

நீர்போல் தூய்மையையும் – என்

நினைவில் ஓடச் செய்யும்

சேற்றினில் நான் விழுந்தால் – என்னைச்

சீக்கிரம் தூக்கிவிடும் – 2.

 

13. சங்கமம் இனிய சங்கமம்

ஆண்டவன் நம்மில் சங்கமம்

சங்கமம் இனிய சங்கமம்

நாம் அன்புடன் வாழ்ந்தால் சங்கமம் ….2

அன்புடன் நட்புடன் அனைவரும் வாழ்ந்தால்

ஆண்டவன் நம்மில் சங்கமம்

உண்மையும் அறமும் உறவினில் மலர்ந்தால்

உலகத்தில் இறைவன் சங்கமம் …..சங்கமம்

 

ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்தால்

சங்கமம் இனிய சங்கமம்

ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ்ந்தால்

சங்கமம் இனிய சங்கமம் ….2

உடமைகளெல்லாம் பகிர்ந்து வாழ்ந்தால்

சங்கமம் இனிய சங்கமம்

உளமதில் அன்பை உரமாய் கொண்டால்

சங்கமம் இனிய சங்கமம்

உலகத்தில் அமையும் இறைவனின் அரசு

சங்கமம் இனிய சங்கமம் …..சங்கமம்

 

உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதங்கள் அழித்தால்

சங்கமம் இனிய சங்கமம்

உறவினில் பகைமை இல்லையென்றால்

சங்கமம் இனிய சங்கமம் — 2

இனவெறி அழித்து இன்பமாய் வாழ்ந்தால்

சங்கமம் இனிய சங்கமம்

இறைவார்த்தைகளே வழித்துணையானால்

சங்கமம் இனிய சங்கமம்

இகமதில் அமையும் இறைவனின் அரசு

சங்கமம் இனிய சங்கமம் ….சங்கமம்

 

14. நிழல் தேடி அலைகின்ற நெஞ்சங்களே

இளைப்பாற இடமுண்டு வாருங்களே அது அன்பாலயம் நல்ல பண்பாலயம்

நம் சரணாலயம் அது தேவாலயம் 2

 

பூப்போன்ற ஒரு வாசம் விசுவாசமே

பொன் போன்ற மனம் தன்னில் உருவாகுமே 2

விசுவாசமாய் நாம் வேண்டினால்

வழிகளைத் தருபவர் நம் யேசுவே

 

வாழ்வென்று துணையென்று நாம் நாடினோம்

வாழ்வாகி வழியாகி எமைத் தேற்றினாய் 2

நாம் வாழவும் நாம் செல்லவும்

வழிகளைத் தருபவர் நம் யேசுவே

 

15. இறைவனுன் புகழ்பாட – இங்கே

இதயங்கள் பல கோடி

துறையெல்லாம் கடந்தவனே – உன்

துணையொன்றே நாம் தேடி

 

மறைபொருள் ஆனவனே – உன்னை

மனங்களில் சிறை வைத்தோம்

குறையுள்ள கோயிலிலே – உன்னைக்

கொண்டு நாம் குடி வைத்தோம்

 

அன்பு உன் பேர் அறிவோம் – தூய

அறிவென்றும் நாம் தெரிவோம்

இன்பம் நீ எனத் தெளிவோம் – நல்ல

இரக்கம் நீ என மொழிவோம்

 

16. உன் இதய வாசல் தேடி வருகின்றேன்

என் இதயம் உறைய என்னில் வாருமே

நீ இல்லையேல் நான் இல்லையேல் – 2

நான் வாழ என்னுள்ளம் வா

 

காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்

காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்

உன்னன்பு என்றென்றும் மாறாதையா

உன் நெஞ்சில் நான் என்றும் வாழ்வேனயா

 

குயில் பாட மறக்கலாம் மயிலாட மறக்கலாம்

பயமுடனே நண்பரும் என்னைவிட்டு பிரியலாம்

உன்னன்பு என்றென்றும் மாறாதையா

உன் நெஞ்கில் நான் என்றும் வாழ்வேனயா

 

 

தியானப் பாடல்கள்

17. உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை

அரவணைத்திடு இறைவா

அந்த இருளிலும் ஒளி சுடரும் – வெண்

தணலிலும் மனம் குளிரும் – உந்தன்

கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை

காத்திடு என் இறைவா

 

பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்

மன்னிப்பில் பனிபோல் கரையும்

கருணையின் மழையில் நனைந்தால் உன்

ஆலயம் புனிதம் அருளும்

 

வலையினில் விழுகின்ற பறவை – அன்று

இழந்தது அழகிய சிறகை

வானதன் அருள்மழை பொழிந்தே நீ

வளர்த்திடு அன்பதன் உறவை

 

18. நீ எந்தன் பாறை என் அரணான யேசுவே

நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே

அணையாத தீபமே இயேசுவே இயேசுவே-2

 

ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ

உன்துணையின் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ

தடைகோடி வரலாம் உளம் தவித்தோடி விடலாம் -2

ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எது

போனாலும் உனில் தஞ்சம் உண்டு

இயேசுவே இயேசுவே – 2

 

இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ

முடிவாக வெல்வதும் நன்மையன்றோ

தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் – 2

என்றென்றும் உன் ஆசி கொண்டு – வரும்

நல்வாழ்வை கண்முன்னே கண்டு

இயேசுவே இயேசுவே -2

 

19. என் ஆன்மா இறைவனையே

ஏற்றி போற்றி மகிழ்கின்றது

எம் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது

 

1. தாழ்நிலை இருந்த தம் அடியவரைத்

தயையுடன் கண்கள் நோக்கினார்            – 2

இந்நாள் முதலாம் தலைமுறைகள்

எனைப் பேருடையாள் என்றிடுமே

— என் ஆன்மா

2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே

எனக்கரும் செயல்பல புரிந்துள்ளார்        – 2

அவர்தம் பெயரும் புனிதமாகும்

அவரில் அஞ்சுவோர்க்கு இரக்கமாகும்

— என் ஆன்மா

 

20. இறைவன் எனது மீட்பராம் – அவரே

எனக்கு ஒளியானார்

அவரைக் கோண்டு நான் வாழ

எவரைக் கண்டு பயமில்லை….

 

வாழ்வின் இறைவன் துணையானார்

வாழும் எமக்கு உயிரானார்

நீயோர் என்னை வதைத்தாலும்

தீமை அணுக விடமாட்டேன் – 2

 

தீயோர் படைபோல் சூழ்ந்தாலும்

தீராப் பகையை கொண்டாலும்

தேவர் அவரைத் திடமாக

தேடும் எனக்கு குறையேது – 2

 

ஒன்றே இறைவன் வேண்டுகிறேன்

ஒன்றே அடியேன் தருகின்றேன்

தேவன் உனது திருமுன்னே

நாளும் வாழ அருள்வாயே – 2

 

21. இயேசுவே உன்னை என் நெஞ்சினில் தாங்கி

எந்நாளும் பிரியாமல் நான் வாழ வேண்டும்-2

இதயத்தில் வாழும் தெய்வம் நீ இருக்க

இமயம் போன்ற துன்பம் இல்லாது மறையும்

இனி எந்தன் வாழ்வில் இன்பமே நிறையும்

 

கண்களில் உன்னை சிறை வைத்தால்  என்றும்

கரைந்திடும் விழிநீரில் கரைந்திடுவாய் – என்று -2

உள்ளத்தில் உன்னையே செதுக்கி வைத்தேன்-2

உயிர் உள்ளவரை உன்னுடன் வாழ்வதற்கே—இயேசுவே

 

பாதத்தில் அமர்ந்து உன் முகம் பார்த்து உந்தன்

உயிருள்ள வார்த்தையை கேட்டிடுவேன்-2

மார்பினில் சாய்ந்து நான் அன்போடு-2

என் இன்ப துன்பங்கள் பகிர்ந்திடுவேன்—இயேசுவே

 

22. இயேசுவே உந்தன் வார்த்தையால்

வாழ்வு வளம் பெறுமே

நாளுமே அன்புப் பாதையில்

கால்கள் நடந்திடுமே

தேவனே உந்தன் பார்வையால் – என்

உள்ளம் மலர்ந்திடுமே

இயேசுவே என் தெய்வமே – உன்

வார்த்தை ஒளிர்ந்திடுமே

 

தீமைகள் தகர்ந்திழிந்திடும் – உன்

வார்த்தை வலிமையிலே

பகைமையும் சுய நலன்களும் – இங்கு

வீழ்ந்து ஒழிந்திடுமே

நீதியும் நல் நேர்மையும்

பொங்கி நிறைந்திடுமே

இயேசுவே என் தெய்வமே – உன்

வார்த்தை ஒளிர்ந்திடுமே

 

23. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்

மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்

இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்

இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்

நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்

நிரந்தரம்…நிரந்தரம்…நீயேநிரந்தரம்-2

 

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்

தாயும் தந்தயும் எமக்கு நீயே நிரந்தரம்

தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்

நான்சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்-2

நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்-2

 

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்

பதவியும் புகளும் தருவது இல்லை நிரந்தரம்

நிலைவாழ்வு என்றும் நிஜமான நீயே நிரந்தரம்

அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்-2

நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்-2

 

24. பாடுங்கள் ஆண்டவருக்கு

புதியதோர் பாடல் பாடுங்கள்

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா

 

ஆண்டவர் தம் திருத் தலத்தில் – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

மாண்புயர் வான் மண்டலத்தில் – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

 

எக்காள தொனி முழங்க – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

வீணையுடன் யாழ் இசைத்து – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

 

முரசொலித்து நடனம் செய்து – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

நரம்பிசைத்து குழல் ஊதி – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

 

25. கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

கண்மலை மீதே கட்டப்படுவோம்

விசுவாசத்தில் உறுதிக் கொள்வோம்

நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் – கர்த்தர்

 

பாவமில்லாதொரு வாழ்க்கையும்

மாயமில்லா மனத்தாழ்மையும்

சாந்தம் நீடிய பொறுமையும் – 2

இரக்கம்… தயவை தரித்திட

 

 

வேத வசனத்தால் நிறையவும்

தேவ சமாதானம் வளரவும்

பேதங்களின்றி வாழவும் – 2

பேரன்பில்… வளர்ந்து பெருகிட

 

26. கலைமான் நீரோடையை

ஆர்வமாய் நாடுதல் போல்

இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை

ஏங்கியே நாடி வருகின்றது

 

உயிருள்ள இறைவனில்

தாகம் கொண்டலைந்தது

இறைவா உன்னை என்று நான் காண்பேன்

கண்ணீரே எந்தன் உணவானது

 

மக்களின் கூட்டத்தோடு

விழாவில் கலந்தேனே

அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க

என் உள்ளம் பாகாய் வடிகின்றது

 

27. என் தேவன் என் வெளிச்சம்

என்னை இரட்சிப்பவரும் அவரே

என் ஜீவனுக்கரணானவர்

நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்

 

1. தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும்

அந்த இயேசென்னை ஏற்றுக் கொள்வார்

என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்

தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார்

–     என் தேவன்

 

2. தீமை செய்கின்ற வர்கள் எனக்கு

தீமை செய்ய விரும்புகையில்

என்தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்

என்னை பகைத்தவர்கள் உடனே அழிந்தார்கள்

–     என் தேவன்

 

28. ஆண்டவர் செயல்களை ஆ…

அனுதினம் சொல்லுவேன் ஆ…

அதனையே நினைத்து நான் ஆ…

ஆனந்தம் பாடுவேன் – 5

 

என்றும் உள்ளது என் இரக்கம்

என்று பகர்ந்த இணையில்லா இறைவா  2

உம் சொல்லுறுதிக்கு வானமே அடித்தளம் – 2

எடுத்து உரைப்பேன்

எனது தலைமுறைக்கும் – 2

ஆனந்தம் பாடுவேன் – 4

 

தலைவனே நீ தந்தையானாய்

மீடபரும் கடவுளும் எனக்கு நீயானாய்  2

மதிலாய் நின்று காக்கும் கோட்டை – 2

உன்னை என்றும்

பணிந்து போற்றிடுவேன் – 2

ஆனந்தம் பாடுவேன் – 4

 

காணிக்கைப் பாடல்கள்

29. நாங்கள் தருகின்ற காணிக்கை

இதை ஏற்றருள் தெய்வமே -2

நாங்கள் தருகின்ற காணிக்கை

 

நிலையற்ற உலகம் நிலையென நினைத்து

நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் -2

கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில்

காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்

 

வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி

பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம் -2

அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை

காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்

 

30. படைத்ததெல்லாம் தர வந்தோம்

பரம்பொருளே உம் திருவடியில்

உம் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்

எம் வாழ்வினிலே ஒளி வீசும்

 

உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்

உன்னதரே உந்தன் மகிமைக்கே

தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய்

தாழ்ந்து பணிந்து தருகின்றோம்

 

வாழ்வினில் வருகின்ற புகழெல்லாம்

வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே

கருணையின் தலைவா ஏற்றிடுவாய்

கனிவாய் உவந்து தருகின்றோம்

 

31. காணிக்கை தந்தோம் கர்த்தாவே

ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே

கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே

காணிக்கை யார் தந்தார் நீ தானே

 

நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகன் கொடுத்தது

மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் -2

ஆகாயம் மாறும் கடவுளின் மகனே

ஆனாலும் உன் அன்பு மாறாது

 

ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருவதேன்

ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே

கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2

கண் கொண்டு பாரும் கடவுளின் மகனே

கண்ணீரின் அர்த்தங்கள் நீ தானே

 

32. படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்

நானும் உந்தன் கைவண்ணம்

குயில்கள் பாடும் கிளிகள் பேசும் என்

வாழ்வு இசைக்கும் உன் ராகமே

 

இயற்கை உனது ஓவியம்

இணையில்லாத காவியம் — 2

அகிலம் என்னும் ஆலயம்

நானும் அதிலோர் ஆகமம் – 2

உள்ளம் எந்தன் உள்ளம்

அது எந்நாளும் உன் இல்லமே – 2

 

33. எனக் கெல்லாம் ஈந்தவனே

எனை தந்தேன் ஏற்றிடுவாய் -2

கல்வாரி மலை மீது -2

எனை மீட்க உனை மாய்த்தாய் -2

எனக் கெல்லாம்

 

அகிலம் முழுதும் உன் கொடையே

அடியேன் காணிக்கை வெறும் உள்ளமே

அன்பே அனலே அருள் மழையே

அடைக்கலம் புகுந்தேன் ஆர்பரித்தேன்

 

கடளும் காற்றும் பணிந்தனவே

கர்த்தனே உந்தன் அர்ப்பனைக்கே

வழியே ஒளியே உயிர் ஊற்றே

எனை தருவேன் சமர்ப்ணமாய்

 

34. எல்லாம் தருகின்றேன் – தந்தாய்

என்னையும் தருகின்றேன்

 

இயற்கை ஈந்த மலர்கள் பறித்துத்

தருவேன் உனக்கு காணிக்கை

உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை

என்னோடு இணைத்தே தருகின்றேன்

 

பிறருக்காக வாழ்வதில் நானும்

என்னையே உம்மிடம் தருகின்றேன்

பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க

என்னையும் தகுதி ஆக்குவாய்

 

35. அடியோர் யாம் தரும் காணிக்கையை

அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே

 

பாவியென்றெம்மைப் பாராமல் – யாம்

பாவத்தின் தீர்வையை அடையாமல்  2

பரிகாரம் என ஏற்றிடுவாய்

பலியாய் எமை நீ மாற்றிடுவாய்

 

மேலொரு வாழ்வு உண்டு என்று – எம்

மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம்  2

மேலும் துன்பங்கள் அடைந்தாலும்

மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்

 

வாழ்வுக்கு ஒரு நாள் முடிவு உண்டு – பின்

வாழ்வினில் எமக்கென்று எது உண்டு 2

என் மனம் அறிந்தவர் பயன் என்னவோ

எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ

 

36. வந்தோம் தந்திடவே

தந்தாய் ஏற்றிடுவாய்

எம் வாழ்வை உமக்கே பலியாய்த் தந்தோம்

அன்பாய் ஏற்றிடுவாய்

 

இறைவா உன்னில் இணையா வாழ்வு

இருந்தும் பயனென்ன

இகத்தில் நீ தந்த வாழ்வைத் தந்தால்

எனக்கு இழப்பென்ன

இனி வாழும் காலம் இனிதாக வேண்டும்

இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும்

 

இறைவா எந்தன் உள்ளம் என்றும்

உன்னை நாடுதே

உன்னில் இணைந்து உயர்வு பெறவே

விரைந்து நாடுதே

உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து

இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும்

 

37. என்னைத் தேர்ந்தது நீங்களில்லை

நாந்தான் உங்களை தேர்ந்து கொண்டேன்

 

1.    நீங்கள் என்னிலும் நானும் உம்மிலும்

கொடியோடிணைந்த நல் கிளைகளாவதால் — 2

நினைப்பது எல்லாம் நடந்திடும் உண்மை – ஆ .. ஆ

நினைப்பது எல்லாம் நடந்திடும் உண்மை

கேட்பது எல்லாம் தந்திடுவார் தந்தை — என்னைத்

 

2.   நண்பன் வாழ்ந்திட உயிரைப் பலியென

தந்த ஒருவனே அன்பின் இலக்கணம்  — 2

எந்தன் அன்பினையே நீங்கள் அறிந்துள்ளீர்  – ஆ .. ஆ

எந்தன் அன்பினையே நீங்கள் அறிந்துள்ளீர்

எங்கும் சென்றிதனை தந்து நீர் பலன் பெறுவீர் — என்னைத்

 

3.  அடிமை செய்பவன் தலைவன் பணியினை

அறிவதென்பது மரபு இல்லையே               — 2

எந்தன் பணிகளெல்லாம் நீங்கள் அறிவதனால் – ஆ .. ஆ

எந்தன் பணிகளெல்லாம் நீங்கள் அறிவதனால்

நண்பர் என்றிடுவேன் ஊழியர் நீங்களில்லை  — என்னைத்

 

38. எதை நான் தருவேன் இறைவா – உன்

இதயத்தின் அன்பிற்கீடாக

எதை நான் தருவேன் இறைவா

 

குறை நான் செய்தேன் இறைவா – பாவக்

குழியில் விழுந்தேன் இறைவா

கறையாம் பாவத்தை நீக்கிடவே – நீ

கல்வாரி மலையில் இறந்தாயோ

 

பாவம் என்றொரு விஷத்தால் – நான்

பாதகம் செய்தேன் இறைவா

தேவனே உன் திருப்பாடுகளால் – என்னைத்

தேற்றிடவோ நீ இறந்தாயோ

 

39. தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து

தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய்

 

வழங்கிட கனியோ உணவோ இன்றி

வாடிடும் வறியோர் பலர் இறைவா } 2

வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி

வேறெதும் இல்லா நிலை இறைவா

 

உனக்கென எம்மை வழங்கிடும் வேளை

உன்னருள் இவர்க்காய் கேட்க்கின்றோம் } 2

எங்கள் மனம் பொருள் ஆற்றல்  அனைத்தையும் இவர்தம்

மனதுயர் நீங்கப் படைக்கின்றோம்

 

40. உன்னிடத்தில் என்னைத் தந்தேன்

என்னிடத்தில் உன்னை வைத்தேன் 2

இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க

ஏதொன்றும் சொத்தும் இல்லை

பாவம் செய்தேன்

எண்ணத்தில் சுத்தம் இல்லை  2

 

கண்களை நான் தருகின்றேன்

கண்களுக்கோ பார்வைகொடு  2

இறைவா உன் பாதத்தில்

உள்ளத்தை நான் வைத்தேன்

உள்ளத்தில் ஞானம் கொடு

காய்ந்தே போனேன் பசுமை தந்து விடு – 2

 

நெஞ்சுக்குள்ளே வந்துவிடு

நிம்மதியை தந்துவிடு 2

நேசிக்க வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய்

நெற்றிக்கு முத்தம் கொடு

நீயே என்னை காணிக்கை பெற்றுக் கொடு – 2

 

திருவிருந்துப் பாடல்கள்

 

41. சம்மதமே இறைவா சம்மதமே தலைவா

உன் மாலையிலே ஒரு மலராகவும்

உன் பாலையிலே சிறு மணலாகவும்

வாழ்ந்திட சம்மதமே இறைவா

மாறிட சம்மதமே

 

தயங்கும் மனதுடைய நான்

உனக்காகவே உன் பணிக்காகவே

வாழ்ந்திட வரம் தருவாய் – 2

கருவாக எனை படைத்து

உயர் கண்மணியாய் எனை வளர்த்து

கரமதிலே உரு பதித்து

கருத்துடனே என்னை காக்கின்றாய்

 

மலையாய் நான் கனித்த

பெரும் காரியமும் உயர் காவியமும்

மறைந்தே போனதே – 2

திருவாக உனை நினைத்து

உயர் உறவாகவே நெஞ்சில் பதித்து

உன் பெயரை சாற்றிடவே

நலம் பெறவே என்னை அணைக்கின்றாய்

 

42. தியாக தீபம் இயேசுவின் திருவுடல் இதுவே

தேடும் நெஞ்சம் தேற்றவரும் திரு உணவிதுவே  -_ 2

அன்பு நெஞ்சம் கொண்டவரே உண்ண வாருங்கள்

உணவை உண்டு தனையளித்து தரணி மாற்றுங்கள்

 

கோதுமை மணியின் பலியினிலே இந்த வெள்ளை அப்பம் பிறக்கின்றது

என்றும் ஏங்கிடும் மாந்தர் வாழ்ந்திட தன்னை தியாகமாய் தருகின்றது

இதை உண்ணும் யாவரும் தன்னை பிறர்க்கென அளித்திட கேட்கின்றது

நம்மையும் உணவென நாம் கொடுப்போம் – பிறர்

நலமுடன் வாழ்ந்திட உயிர் கொடுப்போம்    -_ தியாக தீபம் (2 lines)

 

விருந்தினில் கலந்திடும் பொழுதினிலே நெஞ்சில் வேத உணர்வுகள் வருகின்றன

ஏழ்மை அடிமைகள் உயர்வு தாழ்நிலை என்ற பிரிவுகள் இ¢றக்கின்றன

பிறர் பணிகள் செய்வதே தலைவன் பண்பென்ற படிப்பினைத் தருகின்றது   _ 2

விருந்தினில் கலந்திடும் பொருளுணர்வோம் – பிறர்

பணி செய்து வாழ்வதில் நிறைவடைவோம் ———_ தியாக தீபம் (2 lines)

 

43. பூசை பலிபோல் பாக்ய செல்வம்

புவியில் இல்லையே -_ -2

புவி நிரம்பப் பொன் தந்தாலும் – இப்

பலிக்கு  ஈடில்லையே -_ 2

பரமனே இப்பலிப் பொருளாய் எழுந்தருள்வாரே _ —–2

பக்தி ஆவல் நிரம்பப் பலியை ஒப்புக்கொடுப்போமே_2

 

அள்ள அள்ள குறையா சுரக்கும்

அமுதம் நிரை சுனையே

அன்பில் சிவந்து உயர்ந்து நின்ற கல்வாரிப்பலியே

எல்லையில்லாப் பலன் நிறைந்து ஓங்கும் அருட்பலியே

எங்கள் பாவ நோய்க்கு மருந்தாய் எழுந்திடும் பலியே

 

44. நானே வானினின்று இறங்கி வந்த

உயிருள்ள உணவு – இதை

யாராவது உண்டால் அவன்

என்றுமே வாழ்வான்

 

எனது உணவை உண்ணும் எவறும்

பசியை அறிந்திடார் ஆ..ஆ..ஆ.. – என்றும்

எனது குருதி பருகும் எவரும்

தாகம் தெரிந்திட்டார்

 

அழிந்து போகும் உணவிற்காக

உழைத்திட வேண்டாம் ஆ…ஆ..ஆ.. – என்றும்

அழிந்திடாத வாழ்வு கொடுக்கும்

உணவிற்கே உழைப்பீர்

 

மன்னா உண்ட முன்னோர் எல்லாம்

மடிந்து போயினர் ஆ..ஆ..ஆ..- உங்கள்

மன்னன் என்னை உண்ணும் எவரும்

மடிவதே இல்லை

 

45. நெஞ்சமெனும் ஆலயத்தில்

வரவேண்டும் இறைவா-உனை

தஞ்சமெனத் தேடுமெனில்

வரவேண்டும் இறைவா

 

என்னகம் எழுந்து இருள் ஒழித்து

விண்ணகம் சேர்க்க வர வேண்டும்

மண்ணக இன்ப நினைவழித்து

உன்னதம் காண வர வேண்டும்

 

அன்பின் சின்னம் எனில் வளர

அன்பனே நீயும் வர வேண்டும்

உன்னத வாழ்வில் உனையடைய

என்னகம்  நீயும் வர வேண்டும்

 

பணிவும் பண்பும் பிறரன்பும்

என்னில் நிறைய வர வேண்டும்

பிணியும்  துயரும் அகன்றிடவே

பேரரசே நீ வர வேண்டும்

 

46. நெஞ்சத்திலே தூய்மை யுண்டோ

இயேசு வருகின்றார்

நொருங்குண்ட நெஞ்சத்தயே

இயேசு அழைக்கின்றார்.

 

வருந்தி சுமக்கும் பாவம் – நம்மை

கொடிய இருளில் சேர்க்கும் – 2

செய்த பாவம் இனிபோதும் – 2

அவர் பாதம் வந்து சேரும் – 2

 

குருதி சிந்தும் நெஞ்சம் – நம்மை

கூர்ந்து நோக்கும் கண்கள் – 2

அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் – 2

அவர் பாதம் வந்து சேரும் – 2

 

மாய லோக வாழ்வு – உன்னில்

கோடி இன்பம் காடிடும் – 2

என்னில் வாரும் அன்பர் இயேசு – 2

உன்னில் வாழ இடம் வேண்டும் – 2

 

47. உன் புகழைப் பாடுவது என்

வாழ்வின் இன்பமையா

உன் அருளைப் போற்றுவது என்

வாழ்;வின் செல்வமையா

 

துன்பத்திலும் இன்பத்திலும் நல்

தந்தையாய் நீ இருப்பாய்

கண்ணயரக் காத்திருக்கும் நல்

அன்னையாய் அருகிருப்பாய் 2

 

அன்பு எனும் அமுதத்தினை நான்

அருந்திட எனக்களிப்பாய்

உன்நின்று பிரியாமல்

நீ என்றும் அணைத்திருப்பாய் – 2

பல்லுயிரை படைத்திருப்பாய் நீ

என்னையும் ஏன் படைத்தாய்

பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ

என்னையும் ஏன் அழைத்தாய்     2

 

 

அன்பினுக்கு அடைக்கும் தாள்

ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்

உன் அன்பை மறவாமல்

நான் என்றும் வாழ்;ந்திருப்பேன் – 2

 

48. இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்

மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே – அவர்

மர்¢த்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ

–     இயேசுவின் அன்பை

 

அளவில்லா அன்பு அதிசய அன்பு

ஆழமகல நீள எல்லை காணா அன்பு

களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு

கல்வாரி மலைக் கண்ணீர் சொல்லிடும் அன்பு

 

அலைகடலை விடப் பரந்த பேரன்பு

அன்னைமார் அன்பெல்லாம் திரையிடுமன்பு

மலைபோல் எழுந்தெனை வளைத்திடுமன்பு

சிலையெனப் பிரமையில் நிறுத்திடுமன்பு

 

எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு

எனக்காகத் தன்னையே உணவாக்கும் அன்பு

எனக்காகப் பாடுகள் ஏற்ற பேரன்பு

எனக்காக உயிரையே தந்த தேவன்பு

 

கலைக்கடங்கா அன்பு கதிதருமன்பு

கைதிபோல் இயேசுவை சிறையிடும் அன்பு

விலையில்லாப் பலியாக விலங்கிடும் அன்பு

விவரிக்க விவரிக்க விரிந்திடும் அன்பு

 

49. மகிழ்வோம் மகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம்

தினம் அக மகிழ்வோம் – இயேசு

ராஜன் சொந்தமாகினார் – 2

இந்த பார்த்தலத்தின் சொந்தக்காரர் அவர்

எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் – 2

ஆ… ஆனந்தமே பரமானந்தமே

இது மாபெரும் பாக்கியமே – 2

 

சின்னஞ்சிறு வயதில் என்னை குறித்துவிட்டார்

தூரம் போயினும் கண்டுகோண்டார் – 2

தமது ஜீவனை எனக்கும் அளித்து

ஜீவன் பெற்றுக் கொள் என்றுரைத்தார் – 2

ஆ… ஆனந்தமே….

 

எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று

என்னை பிரிக்காது காத்து கொள்வார்

என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை

அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்

ஆ… ஆனந்தமே….

 

50. ஆனந்த மழையில் நானிலம் மகிழ

மன்னவன் எழுகின்றார்

ஆயிரம் நிலவொளியோ -என்னை

ஆண்டிடும் இறையரசோ

அவனியை மாற்றிடும் அருட்கடலோ

 

மன்னவனே என்னிதயம் பொன்னடி பதிக்கின்றாய்

விண்ணகமே என் இதயம் அன்புடன் அமைக்கின்றாய்

இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிது

பண்பாடவோ என்றும் கொண்டாடவோ

மலர்கின்ற புது வாழ்விலே – இனி

சுகமான புது ராகமே

என்றென்றும் உண்டாகும் பேரின்பமே

பேரின்பமே பேரின்பமே

 

சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தாயோ

காற்றினிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தாயோ

எனில் ஒன்றாகினாய் நான் நன்றாகினேன்

பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்

மலர்கின்ற புது வாழ்விலே .. .. ..

 

51. இயற்கையில் உறைந்திடும்

இணையற்ற இறைவா – என்

இதயத்தில் எழுந்திட வா

என்றும் இங்கு என்னோடு

நின்று என்னை அன்போடு

காத்திடு என் தலைவா 2

 

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்கு

சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ  2

மெழுகாகினேன் திரியாக வா

மலராகினேன் மணமாகவா  2

 

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி

உலகத்தில் எதுவும் நடந்திடுமோ  2

குயிலாகினேன் குரலாகவா

மயிலாகினேன் நடமாடவா  2

 

52. இறை எளிமையின் தேவனின்

இறைகுலப் பனியினில்

இணைந்திடவே இங்கு எழுந்திடுவோம் – 2

அன்பு வழியில் அறநெறியில்

என்றும் வெறுமை இங்கு அகற்றிடுவோம் – 2

– இறை எளிமையின் …

 

மனித மாண்பினில் நிலைப் பெறவே

மனிதம் என்றும் மலர்ந்திடவே

புனிதமாய் நாம் கலந்திடுவோம் – 2

அதில் இனிமை வரும் முழுமை

இறை உணவினில் நாம் இணைவோம் – 2

– இறை எளிமையின் …

 

பாவக் கரைகளை அகற்றிடுவோம்

வாழ்வின் முறைகளை மாற்றிடுவோம்

ஞானம் நிறைவாய் வாழ்ந்திடுவோம் – 2

அதில் இனிமை வரும் முழுமை

இறை உணவினில் நாம் இணைவோம் – 2

– இறை எளிமையின் …

 

53. என்னைத் தேர்ந்தது நீங்களில்லை

நான்தான் உங்களை தேர்ந்து கொண்டேன்

 

நீங்கள் என்னிலும் நானும் உம்மிலும்

கொடியோடிணைந்த நல் கிளைகளாவதால் — 2

நினைப்பது எல்லாம் நடந்திடும் உண்மை – ஆ..ஆ

நினைப்பது எல்லாம் நடந்திடும் உண்மை

கேட்பது எல்லாம் தந்திடுவார் தந்தை — என்னைத்

 

நண்பன் வாழ்ந்திட உயிரைப் பலியென

தந்த ஒருவனே அன்பின் இலக்கணம் —2

எந்தன் அன்பினையே நீங்கள் அறிந்துள்ளீர் – ஆ..ஆ

எந்தன் அன்பினையே நீங்கள் அறிந்துள்ளீர்

எங்கும் சென்றிதனை தந்துநீர் பலன்பெறுவீர் — என்னைத்

 

அடிமை செய்பவன் தலைவன் பணியினை

அறிவதென்பது மரபு இல்லையே –2

எந்தன் பணிகளெல்லாம் நீங்கள் அறிவதனால் – ஆ..ஆ

எந்தன் பணிகளெல்லாம் நீங்கள் அறிவதனால்

நண்பர் என்றிடுவேன் ஊழியர் நீங்களில்லை – என்னைத்

 

54. தேடும் அன்பு தெய்வம் – என்னைத்

தேடி வந்த நேரம் – 2

கோடி நன்மை கூடும் – புவி

வாடும் நிலைகள் மாறும் – 2

இந்த வானதேவன் தந்த வாழ்வுப் பாதை – எந்தன்

வாழும் காலம் போகும் – 2

 

1. வார்த்தையாகி நின்ற இறைவன் – இந்த

வாழ்வைத் தேர்ந்த தலைவன் – 2

பாரில் எங்கும் புதுப்பாதை தந்து – அந்தப்

பாதையில் அழைத்த அறிஞன் – 2

காலம் கடந்த கலைஞன் என் தலைவன் – இந்த

 

2. அடிமை அமைப்பு இங்கு ஒழிய – எங்கும்

புனித மாண்பு நிறைய – 2

புரட்சிக் குரல் கொடுத்துப் அறிய வழி வகுத்துப்

புதுமை செய்த பெரும் புனிதன் – 2

வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன் – இந்த

 

55. நீயே எனது ஒளி நீயே எனது வழி

நீயே எனது வாழ்வு இயேசையா – 2

 

1. நான்கு திசையும் பாதைகள்

சந்திக்கின்ற வேளைகள்

நன்மை என்ன தீமை என்ன

அழியாத கோலங்கள் – 2

நீயே எங்கள் வழியாவாய்

நீதியின் பாதையில் பொருளாவாய் – 2

உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்

அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே

 

2. துன்ப துயர நிகழ்வுகள்

இருளின் ஆட்சிக் கோலங்கள்

தட்டுத் தடுமாறி விழத்

தகுமான சூழல்கள் – 2

நீயே எங்கள் ஒளியாவாய்

நீதியின் பாதையின் சுடராவாய் – 2

உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட

உண்மையின் இறைவா உனதருள் தாரும் – நீயே

 

56. உன்னை நான் மறவேன் யேசுவே

நான் மறவேன்

என் யேசுவே உன்னை நான்

மறவேன் மறவேன்

எந்நாளும் உன் அருளை – நான்

பாடி மகிழ்ந்திருப்பேன்

 

உன் நாமம் என் வாயில் – நல்

தேனாய் இனிக்கின்றது

உன் வாழ்வு என் நெங்சில் – நல்

செய்தியாய் தொனிக்கின்றது

உன் அன்பை நாளும் எண்ணும் போது ஆனந்தம் பிறக்கின்றது

 

உன் நெஞ்சின் கனவுகளை

நிறைவேற்ற நான் உழைப்பேன்

அறிவாகும் பாலங்களை

உலகெங்கும் நான் அமைப்பேன்

இறையாட்சி மலரும் காலம் வரையில்

இனிதாய் எனை அளிப்பேன்.

 

நன்றிப் பாடல்கள்

57. நன்றி சொல்லி பாடிடுவோம்

நன்மை செய்த தேவனையே

நாளெல்லாம் காத்து

நடத்தும்  இறைவனை

நலமெல்லாம் ஈண்டு

பகிரும் நாதனை

நன்றி ..

 

கரத்தில் நமது பெயரைப்பொறித்து

கண்மணியாய் காக்கின்றார்

கல்லிலும் கால்கள் மோதாதபடியே

கரம்பிடித்து நம்மை நடத்துகின்றார்

வலப்புறம் ஆயிரம் விழுந்தாலும்

இடப்புறம் ஆயிரம் விழுந்தாலும்

தீமைகள் அணுகாது காத்திடுவார்

நன்றி ..

58.   உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்

 

“உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்

துலங்கிடும் இறைவா தூயவன் உமக்கே

நன்றி நன்றி நன்றி”

 

உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்

துலங்கிடும் உமக்கே இறைவா

நன்றி நன்றி இறைவா நன்றி

நன்றி கூறுகின்றோம்

 

1. இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு

இணையில்லா பலியில் இறைவணை உண்டு

சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில்

–ஆ..ஆ..ஆ..ஆ (2)

நின்றிட அழைத்தோம் நிற்பாய் தினமும்

 

59. நன்றி நன்றி ஆண்டவர்கு கூறுவோம்

நம் ஆண்டவராம் நல்லவரை பாடுவோம்

இறை வாழ்வினிலே வாழுவோம்

வாழ்வதையே கூறுவோம்

நன்மை பெற்ற மனதினராய் காணுவோம்

 

பலியுமாக உணவுமாக நிறைந்த இயேசு தேவனே

வலிமையோடு உணர்வு கொண்டு பாடுவோம்

பாடுவோம் பாடுவோம்

கூறுவோம் நன்றி கூறுவோம்

நல் வழியில் செல்ல நாளுமே

நடத்தும் நல்ல தேவனே

பழியில்லாத இறையுணர்ந்து புகழ்ந்து பாடுவோம்

 

60. நன்றியால் துதி பாடு – நம் இயேசுவை

நாவாலே என்றும் பாடு

 

வல்லவர் நல்லவர் போதுமானவர்

வார்த்தயில் உண்மை உள்ளவர்

 

எரிக்கோ மதிலும் முன்னே வந்தாலும்

இயேசு உந்தன் முன்னே செல்கிறார்

கலங்கிடாதே திகைத்திடாதே

துதியினால் இடிந்துவிழும்

 

செங்கடல் நம்மை எதிர்த்து வந்தாலும்

சிலுவையின் நிழல் உண்டு

பாடிடுவோம் துதித்துடுவோம்

பாதைகள் கிடைத்துவிடும்

 

61. நன்மையெல்லாம்  செய்தவரே தந்தையே      

இதய நன்றியினால் புகழ்கின்றோம் உம்மையே (2)

நன்மையெல்லாம்  செய்தவரே தந்தையே

 

ஆண்டவரே ஆதியும் நீர் அந்தமும் நீரே(2)

ஆட்கொண்ட ஆவியும் நீர் அரசரும் நீரே(2) – நன்மையெல்லாம்

 

மண் புனல் விண் தணல் காற்றை படைத்தவர் நீரே(2)

மண்டலங்கள் அத்தனையும் தந்தவர் நீரே(2) – நன்மையெல்லாம்

 

கண்ணோடு ஒளி தந்து காண வைத்தீரே(2)

காட்சி எழில் கோடி தரும் கர்த்தரும் நீரே(2) – நன்மையெல்லாம்

 

உணவோடு சுவை படைத்து உண்ண வைத்தீரே(2)

ஊட்டி விட்டு தான் மகிழும் அன்னையும் நீரே(2)

– நன்மையெல்லாம்

 

இன்பம் நிறை விண்ணரசை படைத்தவர் நீரே(2)

எங்களுக்கு வழியாக மகனை தந்தீரே(2) – நன்மையெல்லாம்

 

மனித இனம் மீட்படைய மனது வைத்தீரே(2)

மகனாலே திருச்சபையை தோன்ற வைத்தீரே(2)

– நன்மையெல்லாம்

 

மக்கள் எங்கள் பாவங்களை அறிந்தவர் நீரே(2)

மன்னிப்பும் மீட்பினையும் அளித்தவர்  நீரே(2)

– நன்மையெல்லாம்

 

62. நீ செய்த நன்மை நினைக்கின்றேன் – என்

நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்

இறைவா இறைவா இறைவா இறைவா

 

உண்டிட உணவும் உடையுமே கொடுத்து

ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் – ஒரு

அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து

அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்

 

மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி

மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் – உடன்

உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல்

களைகளை அகற்றிக் காத்து வந்தாய்

 

63. அழகிய கவிதையில் பாடிடுவேன்

அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன்

 

துன்ப சூழல்கள் சூழ்கையிலே

குவலை கறைகள் படர்கையிலே – 2

இருளின் கைகள் வளைக்கையிலே

அமைதியில் நிலைப்பேன் ஆண்டவரே

 

அறிவிலி என்னையே அவர் நினைத்தார்

ஆற்றல் மிகவே எனக்களித்தார் – 2

எதிரியினின்று விடுவித்தார் – எனவே

அவர் என் ஆண்டவரே

64. உன் நாமம் சொல்லச் சொல்ல

என் நெஞ்சம் மகிழுதய்யா

என் வாழ்வில் மெல்ல மெல்ல

உன் இன்பம் பெருகுதய்யா

 

மாணிக்கத் தேரோடு காணிக்கை வந்தாலும்

உனக்கது ஈடாகுமா

உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்

உனக்கது ஈடாகுமா

வான் கொள்ளா பெருஞ்செல்வம் நீயன்றி வேறு

தானுண்டோ என் வாழ்வில் சொல்வாய் என் உயிரே

 

தேனென்பேன் பாகென்பேன் தெவிட்டாத சுவையென்பேன்

உன் நாமம் என்னென்பேன்

நிறை என்பேன் இறையென்பேன் நீங்காத

நினைவென்பேன்

உன் நாமம் என்னென்பேன்

வான் கொள்ளா பெருஞ்செல்வம் நீயன்றி வேறு

தானுண்டோ என் வாழ்வில் சொல்வாய் என் உயிரே

 

65. சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே

சந்தோசம் என்னில் பொங்குதே

அல்லேலுயா இயேசு என்னை இரட்சித்தார்

முற்றும் என்னை மாற்றினார்

சந்தோசம் என்னில் பொங்குதே

 

வழி தப்பி நான் திரிந்தேன் – பாவ

வழி அதை சுமந்தழைந்தேன்

அவர் அன்பு குரலே அழைத்தது என்னையே

அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே.

 

சாத்தான் சோதித்திட – தேவ

உத்தர வுடன் வருவார்

ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்

இந்த நல்ல இயேசு எந்தன் சோந்த மானாரே.

 

66. அழகிய கவிதையில் பாடிடுவேன் – அவனியில்

அவர் புகழ் சாற்றிடுவேன்

 

துன்ப சூழல்கள் சூழ்கையிலே

துயர கறைகள் படர்கையிலே

இருளின் கைகள் வளைக்கையிலே

அமைதியில் நிலைப்பேன் ஆண்டவரில்

 

அறிவிலி எனையே அவர் நினைத்தார்

ஆற்றல் மிகவே எனக்களித்தார்

எதிரியின்றி விடுவித்தார்

எனவே அவர் என் ஆண்டவரே

 

67. இதழால் நன்றி சொன்னால்

இறைவனுக்காகிடுமோ

இதயத்தில் நன்றி சொன்னால்

இயேசுவுக்காகிடுமோ

 

வாழ்வில் காட்டுதலே வானிறை கேட்கும் நன்றி

மனத்தாழ்ச்சியும் தரித்திரமும் தயவும் காட்டும் நன்றி 2

 

உலகை உருவாக்கி உண்மை வாழ்வளித்து

தன்னை பலியாக்கி தந்திடும் இறைவனுக்கு 2

 

ஆறதல் பொழி கூறி அன்பின் வழிகாட்டி

உயிரும் உண்மையுமாய் உறவுகள் தருபவர்க்கு 2

 

மாதா பாடல்கள்

68. ஞானம் நிறை கன்னிகையே

நாதனைத் தாங்கிய ஆலயமே

மாண்புயர் ஏழு தூண்களுமாய்

பலிப் பீடமுமாய் அலங்கரித்தாயே

 

பாவ நிழலே அணுகாப்

பாதுகாத்தான் உன்னையே பரமன்

தாய் உதரம் நீ தரித்திடவே

தனதோர் அமல தளமெனக் கொண்டார்

 

வாழ்வோர் அனைவரின் தாயே

வானுலகை அடையும் வழியே

வாஞ்சையோடணைக்கும் தாரகையே

வாடிய மனிதர் கதியெனக் கொண்டு

 

69. ஆரோக்கிய மாதாவே – உமது

புகழ் பாடித் துதித்திடுவோம் – எந்நாளும்

பாடித் துதித்திடுவோம்.

 

அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே

வசித்திட ஆசை வைத்தாயே – 2

பலவிதக் கலைகளும் பாரினில் சிறந்திட

அனைவர்க்கும் துணை புரிந்தாயே – 2.

– ஆரோக்கிய …

 

தேன் கமழும் சோலை சேர்ந்து விளங்கும்

வேளாங் கன்னியில் அமர்ந்தாயே – 2

வானகமும் இந்த வையகமும்

அருள் ஓங்கிட எங்கும் நிறைந்தாயே – 2

 

– ஆரோக்கிய …

70. உம்மைத் தேடிவந்தேன் சுமை தீருமம்மா

உலகாலும் தாயே அருள் தாருமம்மா – 2

 

முடமான மகனை நடமாட வைத்தாய்

கடல் மீது தவித்த கப்பலைக் காத்தாய் – 2

பால் கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய்

பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் – 2

 

கடல் நீரும் கூட உன் கோவில் காண

அலையாக வந்து உன் பாதம் சேரும் – 2

அருள் தேடி நாங்கள் உம் பாதம் பணிந்தோம்

அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2

71. இனிய உன் நாமம் ஓதிடல் தினமே

அனைவரும் மகிழ்வோமே – 2

தாயினும் மேலாம் தாயுமே நீயே

தமியோர் திரவியமே – 2

அன்பிதே அன்பிதே மாதா

தன்னலமே அற்ற மாதா – 2

தாயினும் மேலாம் தாயுமே நீயே

தமியோர் திரவியமே – 2

 

கலைமொழியால் உனை துதித்திட நாளும்

கவலையும் தீருமம்மா

பலவகை பாலும் தெளிவுரு தேனும்

தெவிட்டா இனிமையம்மா

72. அலையொளிர் அருணனை

அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ

 

வாழ்க்கையின் பேரரசி

வழுவில்லா மாதரசி

கலையெல்லாம் சேர்ந்தெழும் தலைவியும் நீயல்லோ

காலமும் காத்திடுவாய்

 

அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே

பொல்லாத ஊழியன் தொல்லைகள் நீங்கிட

வல்ல உன் மகனிடம் கேள்

73. சகாய தாயின் சித்திரம் நோக்கு

அபாயம் மீட்கும் அன்னையின் வாக்கு

எத்துணை கனிவு எத்துணை தெளிவு

ஏங்கிடும் மனதிற்கு வரும் நிறைவு – 2

 

சகாய தாயின் சித்திரம் நோக்கு…

 

குத்தி பிழிந்திடும் ஈட்டியும் ஆணியும்

கொடூர சிலுவையும் கண்டு மிரண்டு – 2

கத்தி தாய்மேல் பாய்ந்திடும் இயேசுவை

சதாவும் நினைவில் பதித்திடுவாய் -2

 

74. சதா சகாய மாதா

சதா சகாயம் செய்யும் மாதா

தினம் தோறும் யாரும் வேண்டினாலும்

இல்லை என்னாத மாதா 2

 

ஆதி பிதா ஆனவரின்

அன்பான புத்திரியே  2

ஜோதி சுடர் தேவன் திரு

தாயான உத்தமியே

 

பாவிகளின் ஆதரவே

ஆவியின் ஆலயமே  2

நெஞ்சு நிறை ஓவியமே

நித்தமும் ஆனந்தமே

 

75. சதா சகாயத் தாயே சகல மைந்தர்க்குமே

இதய உணர்ச்சி ததும்பும் உன்னையே

தினம் நினைத்தாலே

 

உதய தாரகை இருளில் நீயென

உலகம் கூறிடுமே 2

பதமும் அடைந்தோர்

பாவமும் களைவர் பரம நாயகியே

பயமும் கவலை தீர் பதும அன்னையும் நீ

நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழுவோமே

 

புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே

புனித மாமரியே 2

சுதனும் உனையே தாயென

அழைத்தான் சிலுவை அடியிலே

பயமும் கவலை … … …

76. மாதாவே துணை நீரே உம்மை

வாழ்த்திப் போற்ற வரம் தாரும்

இதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா

எற்றன்பாக எமை பாரும்

 

வானோர் தம் அரசே தாயே எம்

மனறாட்டைத் தயவாய் கேளும்

ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்

எக்காலத்துமே தற்காரும் – மாதாவே

 

ஒன்றே கேட்டிடுவோம் தாயே நாம்

ஓர் சாவான பாவம் தானும்

என்றேனும் செய்திடாமல் காத்து

எம்மை சுத்தர்களாய் பேணும் – மாதாவே

 

77. மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்

நேசமில்லாதவர் நீசரேயாவார்

வாழ்க வாழ்க வாழ்க மரியே

 

மூதாதை தாயார் செய் முற்பவமற்றாய்

ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்

வாழ்க வாழ்க வாழ்க மரியே

 

தாயே நீ ஆனதால் தாபரித் தென்மேல்

நேசம் வைத்தாள்வது நின் கடனாமே

வாழ்க வாழ்க வாழ்க மரியே

 

78. என் ஆன்மா இறைவனையே

ஏற்றி போற்றி மகிழ்கின்றது

எம் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது

 

1. தாழ்நிலை இருந்த தம் அடியவரைத்

தயையுடன் கண்கள் நோக்கினார் – 2

இந்நாள் முதலாம் தலைமுறைகள்

எனைப் பேறுடையாள் என்றிடுமே – என் ஆன்மா

 

2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே

எனக்கரும்      செயல்பல புரிந்துள்ளார் – 2

அவர்தம் பெயரும் புனிதமாகும்

அவரில் அஞ்சுவோர்க்கு இரக்கமாகும் – என் ஆன்மா

 

79. அன்னையின் பெருமைக்கு பாடுவோம் பண்ணாக

அன்புமரி தேவதைக்கு சூடுவோம் பொன்னாக 2

 

தேவனை ஈன்றெடுத்தாள் – அன்பு

தெய்வமாய் கோயில் கொண்டாள் 2

கன்னியும் தாயும் ஆயினவள்

கருவினில் பாவம் நீங்கினவள்  2

பணிந்து சிறந்து அமைந்து வியந்து

கனிந்து உவந்து நின்றவள் நீ

 

 

மாதருள் மாணிக்கம் நீ – இறை

மன்றத்தின் பேரெழில் நீ  2

வாழ்வினில் மகிமை கொண்டவள் நீ

வானகம் ஏறிய தாயவள் நீ  2

வனத்தில் நிகர்ந்த குலத்தில் உதித்த

மணத்தில் மகிழ்ந்த பூமகள் நீ

 

80. அம்மா என்று அழைத்தால்

குழந்தாய் என்று வருவாய்

அபயம் என்று சொன்னால்

அன்பாய் தூக்கி நெஞ்சில் வைத்து

என்னை காத்துக் கொள்வாய்

 

வேடிக்கை உலகம் பின்னால் நான் சென்றேன்

வேண்டியதெல்லாம் தருமென்று நான் சென்றேன்

மீளாத் துன்பம் நானடைந்தேன்

என் நிலை நானுணர்ந்தேன்

அம்மா உனை அழைத்தேன்

 

உலக மாந்தர்க்கு கலங்கரை விளக்கம் நீ

கண்மணியாய் எமை நாளும் காப்பவள் நீ

உன்னை நான் பிரிந்திடேன்

நாழியும் நான் மறவேன்

அம்மா உனை அழைத்தேன்

 

மின்னுவதெல்லாம் பொன்னென்று நான் கொண்டேன்

வெளுத்தவை எல்லாம் பாலென்று நான் உண்டேன்

பொன்னும் தீயானது

பாலும் நஞ்சானது

அம்மா உனை அழைத்தேன்

நிறைவுப் பாடல்கள்

81. எங்கள் காவலாம் சூசை தந்தையின்

மங்களங்கள் எங்குஞ் சொல்லி இங்குப் பாடுவோம்

செங்கை அதிலே தங்க புஷ்பம்

தங்கும் கோலை ஏந்திடும்

 

கன்னித் தாயாரின் பர்த்தா நீ யல்லோ

உன்னதமார் பேறும் மாட்சி

உற்ற பாக்கியனே

சென்னி மகுட முடி புனைந்த

மன்னர் கோத்ர மாதவா

 

இயேசு நாதரின் செல்வத் தாதை நீ

நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே

தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்

ஆசைகொண்டு பாடவே

 

82. இயேசுவின் இருதயமே -என்றும்

எரிந்திடும் அருள்மயமே-உந்தன்

ஆசியும் அருளூம் சேர்ந்து வந்தால்-எங்கள்

ஆனந்தம் நிலைபெறுமே

 

இறைவனுக் கிதயமுண்டு-அந்த

இதயத்தில் இரக்கமுண்டு-என்றும்

இரங்கிடும் இறைவன் இருப்பதனால்-எங்கள்

அனைவருக்கும் வாழ்வு உண்டு

 

பாவிக்குப் பொறுத்தலுண்டு-அந்த

பரலோக வாழ்வு உண்டு-நாங்கள்

கூவிடும் குரலை கேட்பதற்கு-இந்த

கோயிலில் தெய்வம் உண்டு

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா பாடல்கள்

 

83. தேவ  பாலன்  பிறந்தீரே

மனுகோலம் எடுத்தீரே

பரலோகம்  துறந்தீரே யேசுவே

நீர் வாழ்க வாழ்கவே

 

மண்மீதினில் மாண்புடனே

மகிமையாய் உதித்த மன்னவனே

வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம்

தூய உன் நாமத்தையே தேவ பாலன் (1)

காரிருள் வேளையில்

கடும்குளிர் நேரத்தில்

ஏழை கோலமதாய்

பாரினில் வந்தது மன்னவனே உன்

மா தயவே தயவே –

 

விண்ணுலகில் சிம்மாசனத்தில்

தூதர்கள் பாடிடவே

வீற்றிருக்காமல் மானிடனானது

மா  தயவே  தயவே — 2

காரிருள்(1)

 

விண்ணில் தேவனுக்கே மகிமை

மண்ணில் சமாதானம்

மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன்

மா  தயவால் தயவால் — 2

காரிருள்(2)

84. அதிகாலையில் பாலனை தேடி

செல்வோம் நாம் யாவரும் கூடி

அந்த மாடடையும் குடில் நாடி

தேவ பாலனை பணிந்திட பாடி

அதிகாலையில் பாலனை தேடி

வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்- — 2

 

அன்னை மரியின் மடிமேலே

மன்னன் மகவாகவே தூங்க

விண்தூதர்கள் பாடல்கள் பாட

விரைவாக நாம் செல்வோம் கேட்க

அதிகாலையில் பாலனை தேடி

வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்-

 

மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே

அந்த முன்னனை முன்னிலை நின்றே

தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்

நல் காட்சியை கண்டிட நாமும்

— அதிகாலையில்

 

85. இதயம் என்னும் வீணையில்

அன்பை மீட்டும் வேளையில் — 2

வசந்த ராகம் கேட்கவே

ஏழை என்னில் வாருமே – 2

தந்தேன் என்னை தந்தேன் – என்றும்

என் வாழ்வு உன்னோடுதான் — 2

 

பாவிகளை ஏற்றிடவே

பாரினில் உதித்த பரிசுத்தரே — 2

பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்

தூய உன் நாமத்தையே  தேவ பாலன் (2)

 

86. மார்கழி குளிரினில் மன்னவனே

பார்முகம் வந்தாயோ என் சொந்தமே.

தேனிசைப் பாடல் இசைக்கின்றேன் – உன்

குடிலினில் காணிக்கை படைக்கின்றேன் (2)

 

எல்லாமும் நீயென்று தெரிந்திருந்தும்

எதுவும் இல்லாது ஏன் வந்தாய்

முழுமையின் நிறைவே நீயென்றால்

வெறுமையை பூண்டு ஏன் பிறந்தாய்

என்னிடம் உள்ளதை எல்லாமும்

நீ ஏற்றிடு காணிக்கையாக்குகிறேன்

— மார்கழி

 

சொந்தமே நீயென்று தெரிந்திருந்தும்

உறவுகள் இல்லாது நான் வாழ்ந்தேன்

வெறுமையின் நிறைவே நீயென்றால்

வறுமையின் கோலம் ஏன் படைத்தீர்

உள்ளதை எல்லாம் தருகின்றேன்

அந்த வெற்றிடம் நீ வந்து நிறைந்துவிடு

87. மாநிலமே மகிழ்வாய்

மாபரன் பிறந்ததினால்

பண்ணிசை முழங்கிடுவோம் – இன்று

சுடரொளி வந்ததினால் – இன்று

 

வானவர் இசை பாட

ஆயர்கள் உனை வணங்க

வாழ்வாய் வழியாய் ஒளியாய்

தவழ்ந்தாய் புவியில் மனுவாய்

 

சின்ன இருவிழி விரிப்பில்

விண்ணகமே மின்னும்

சிவந்த மலர் இதழ் சிரிப்பில்

கோடி எழில் சிந்தும் – 2

வாயுதிர்க்கும் மழலையிடம்

வாழ்வின் பொருள் பிறக்கும் – வானவர்

 

விண்ணகத்தில் உயர் மகிமை

பூவில் சமாதானம்

விந்தைகவர் மகிழ்செய்தி

கொண்டு வந்தார் வானோர் – 2

காலமெல்லாம் எதிர்பார்த்த

மாமன்னன் பிறந்துள்ளார் – வானவர்

 

88. தூங்கு மன்னவா தெய்வ பாலகா

மண்ணில் வந்தவா விண்ணின் கோமகா – 2

கண்ணே மணியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ

கருணை வடிவே நீயுறங்கு

ஆராரோ ஆரிரரோ

 

விண்ணைத் துறந்தாயோ

மண்ணில் வந்தாயோ – எம்

குறைகள் போக்கவே

குடிலைத் தெரிந்தாயோ -2

குளிரிலும் பனியிலும்

அழுது அயர்ந்தாயோ – 2

 

புதிய வானமும்

புதிய வையமும்

படைக்க வந்தாயோ – எமை

மீட்கப் பிறந்தாயோ  – 2

கண்மணியே பொன்மலரே

கர்த்தனே துயிலாயோ – 2

 

89. விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்

உன்னைத் தாலாட்ட

மண்ணோர் உவந்து பாடும் பாடல்

உன்னை வரவேற்க

ஆ …. ஆ …. ஆ ….

 

தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட

வார்த்தை நீயன்றோ

தேவ வாழ்வின் தூய மேன்மை

ஏன் துறந்தாயோ – எம்

தாழ்ந்த உள்ளம் தன்னில்

நீ வந்தருள்வாயோ

 

மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி

வானவன் அறிவித்தான்

தாவீதின் நகரில் மாமரி மடியில்

மாபரன் பிறந்துள்ளார் – நின்

பாதம் தொழுதிட வந்தோம்

எம் தாகம் தீர்ப்பாயோ

90. கன்னி ஈன்ற செல்வமே – இம்

மண்ணில் வந்த தெய்வமே

கண்ணே மணியே அமுதமே

என் பொன்னே தேனே இன்பமே

எண்ணம் மேவும் வண்ணமே

என்னைத் தேடி வந்ததேன்

ஆரீரோ …ஆராரோ ஆரீரோ… ஆராரோ

 

எங்கும் நிறைந்த இறைவன் நீ

நங்கை உதரம் ஒடுங்கினாய்

ஞாலம் தாங்கும் நாதன் நீ

சீலக் கரத்தில் அடங்கினாய்

தாய் உன் பிள்ளை அல்லவா

சேயாய் மாறும் விந்தை ஏன்

ஆரீரோ …ஆராரோ ஆரீரோ… ஆராரோ

ஆ …  ஆரோ ஆ …  ஆரோ ஆரீரோ ஆராரோ

 

வல்ல தேவ வார்த்தை நீ

வாயில்லாத சிசுவானாய்

ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ

அன்னை துணையை நாடினாய்

இன்ப வாழ்வின் மையம் நீ

துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்

ஆரீரோ …ஆராரோ ஆரீரோ… ஆராரோ

ஆ …  ஆரோ ஆ …  ஆரோ ஆரீரோ ஆராரோ

 

91. மன்னாதி மன்னன் பிறந்தான்

மண்ணில் புகழ் பாடி

மகிழ்ந்தாடும் நெஞ்சம் தேவ – மனு

மைந்தன் மலர்ப்பாதம் கொஞ்சும்

 

தாவீதின் குலமெல்லாம் மகிழ்ந்திடவே

பூமீது மாமன்னன் பிறந்துள்ளார் – 2

முறிந்திட்ட உறவினை இணைத்திடவே

முடிவில்லா மீட்பராய் எழுந்துள்ளார் – மன்னாதி

 

ஏழைக்கு வாழ்வினை வழங்கிடவே

ஏழ்மையின் உருத்தாங்கி வந்துள்ளார் – 2

முறிந்திட்ட உறவினை இணைத்திடவே

முடிவில்லா மீட்பராய் எழுந்துள்ளார் – மன்னாதி

 

92. ஆடிப் பாடி மகிழ்வோம் நாமெல்லாம்

இறை யேசு பாலன் பிறந்த நாளிலே – நம்மை

மீட்க மீட்பர் இங்கு பிறந்தார்

ஆடிப் பாடி போற்றுவோமே – நாம்

 

Happy Birthday to you – Baby Jesus

Happy Birthday to you

Merry Christmas to you – எல்லோருக்கும்

Merry Christmas to you

 

ஆயர் கூட்டம் வெட்ட வெளியிலே – கிடைக்கு

சாமக் காவல் காத்து நின்றாரே

விண்ணவர்க்கு மகிமை என்றும்

மண்ணவர்க்கு அமைதி என்றும்

வானதூதர் பாடக் கேட்டாரே – ஆடிப் பாடி

 

93. பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே

பாடும் தூதர்கூட்டம் பாரில்ஜோதி வீசி பாடும்செய்தி கேளும்

பிறந்தார் பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பாரில் யேசு பிறந்தார்

 

விண்ணில் மாட்சி தோன்ற மண்ணில் மீட்புகாண

மகிமை யாவும் துறந்து யேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பாரில் யேசு பிறந்தார்

 

 

உந்தன் பாவம் நீக்க உள்ளம் தூய்மையாக்க

உலகின் ஜோதியாக யேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பாரில் யேசு பிறந்தார்

 

94. துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்

தூயன்யேசு மானிடனாய் ஜெனித்தார்

ஆரவாரமாய் கீதம் பாடுங்கள்

அன்பர்யேசு மானினாய் ஜெனித்தார்

 

வானமே வையமே வாழ்த்துங்கள் மகிழுங்கள்

தேவாதிதேவன் ராஜதிராஜன்

தாழ்மையின் ரூபமாய் ஜெனித்தார்

 

 

வானதூதர் விண்ணில்நல் வாழ்த்துக்கள் தந்தார்

கான மேய்ப்பர் ஆட்டுக்குட்டி அன்புடன் கொடுத்தார்

ஞானியர்கள் பொன்போளம் தூபமும் படைத்தார்

மானிடர்நம் இதயங்களை தந்திடுவோமே – வானமே

 

 

சிரிஷ்டிகளே சிரிஷ்டிகரைப் போற்றித் துதியுங்கள்

படைப்புக்களே படைத்தவரைப் பாடித் துதியுங்கள்

மீட்கப்பட்ட மானிடரே மகிழ்ந்து துதியுங்கள்

வல்லவர் இரட்சகர் பாரில் ஜெனித்தார் – வானமே

 

95. ராஜாதிராஜன் நீ மண்ணில் வந்தாய்

கேளாத இன்பங்கள் சொல்லித் தந்தாய்

ஊரெங்கும் இன்பங்கள் பொங்கச் செய்தாய்

உள்ளத்தில் நீவந்து தங்கச் செய்தாய் – ராஜாதிராஜன்

 

வாராய் தேவனே எங்கள் பாலகனே – 2

பாலகனே பாலகனே நீயே இரட்சிக்க வந்தாயே

யார்சொல்லி நாம்இந்த மண்ணில் வந்தோம்

 

யாருக்கு நாம் இங்கு கட்டுப்பட்டோம்

பாவத்தின் கையாலே குட்டுப்பட்டோம்

யார்சொல்லி நாம்இந்த மண்ணில் வந்தோம்

 

எம்மை மீட்கவே வந்தாய் பாலகனே

பாலகனே பாலகனே நீயே இரட்சிக்க வந்தாயே

நெஞ்சுக்குள் நின்றாடும் இரத்தினமே

நீ சொன்னதெல்லாமே தத்துவமே

நீ போன பாதையில் நித்தமுமே

நாமின்று போகின்றோம் சத்தியமே

நெஞ்சுக்குள் நின்றாடும் இரத்தினமே

 

 

96. நமக்காய் ஒரு குழந்தை இந்த நானிலம் தவழ்ந்தது

நலிந்த நிலை மாறும் என்னும் நம்பிக்கை மலர்ந்தது

 

ஆராரோ …. கண்ணுறங்கு

உந்தன் ஊரேதோ கண்ணுறங்கு

விண்ணகமோ மண்ணகமோ – இல்லை

இரண்டும் உந்தன் பிறந்தகமோ – நமக்காய்

 

வானின் தூதர்களே இன்று வாழ்த்து பாடுங்களே

விண்ணகத்தில் என்றும் மகிமைதான் – ஆனால்

மண்ணகத்தில் அமைதி எங்கே

மாடடை குடிலில் பிறந்தவனே – இந்த

மானிடர் நடுவே பிறந்தால் என்ன

ஆடுகளே மாடுகளே நீங்கள் மாந்தரினும் சிறந்தவரே – நமக்காய்

 

மாந்தர் மைந்தர்கள் யாம் எங்கள் வாழ்வை எண்ணுகிறோம்

மனித மாண்பு என்னவென்று- முற்றும்

மறந்த கூட்டம் உண்டு இங்கு

மனிதனாய் பிறந்த இறைமகனே எங்கள் மாண்பினை

எமக்கு போர்த்தாயோ

வறுமைநோய் பிளவுகள் இனி வாராதிருக்க செய்யாயோ

– நமக்காய்

 

97. பாடாத ராகங்கள் பாடும்

மீளாத இன்பங்கள் ஆடும் – 2

கேளாத கீதங்கள் கேட்கும்

மேய்ப்பன் வருகை கூறும்

எந்தன் மீட்பர் வருகின்றார் – 3

 

உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலை

தெய்வம் தந்த அழகன்றோ

அன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்

இறைவனின் அழகன்றோ – 2

ஏங்குதென் நெஞ்சமே தாங்கிடும் தஞ்சமே – பாடாத…

 

 

எனக்காய் வந்த இன்பத்தின் நிழலே

இளைப்பை ஆற்றிடுமே

தாகத்தை தீர்க்கும் பேரின்ப ஊற்றே

தாகத்தை தீர்த்திடுமே – 2

அன்பரை காணவே கண்களும் ஏங்குதே

 

98. ஆராதனை ஆராதனை எம் பாலனே ஆராதனை

ஆராதனை ஆராதனை எம் மீட்பரே ஆராதனை – 2

ஆ..ஆ..ஆ   ஆ..ஆ..ஆ  ஆ..ஆ..ஆஆஆ

 

வானமும் பூமியும் படைத்தவா – ஆராதனை

வார்த்தையால் எம்மை நிரப்பவா – ஆராதனை

வல்லமை எம்மில் சேர்க்கவா –  ஆராதனை

வளமும் நலமும் தருபவா –  ஆராதனை

ஆராதனை… ..

ம்..ம்..ம்..ம், ம்..ம்..ம்..ம் ஆ..ஆ..ஆ..ஆஆஆஆ

 

அமைதியில் என்றும் வாழ்பவா – ஆராதனை

அருளை தினமும் பொழிபவா – ஆராதனை

ஆற்றலாய் எம்மில் இருப்பவா – ஆராதனை

ஆனந்த துதியில் மகிழ்பவா – ஆராதனை

ஆராதனை. . . .

99. ஆண்டவரின் நாள் வருகிறது

அகிலமும் புது ஒளி பெறுகிறது

ஆதியிலே அன்று இருந்தது போல

எல்லாம் நலமாகும்

 

வார்த்தை நம்மோடு மனுவாக

வாழ்வில் நம்பிக்கை சுடர் வீசும்

ஆதியிலே அன்று இருந்தது போல

எல்லாம் நலமாகும்

Merry Christmas

Happy New Year

 

பசித்தவரை அவர் நலன் நிரப்பும்

பயப்படுவோர்க்கவர் துணை இருக்கும்

பகுத்தறிவும் பலம் நிறை மனமும்

இறையரசை முழங்கும்

படைத்தவர் நம்மோடு பயணம் செய்ய

பகை விலக்ம் அன்பின் படைகள் எழும்

ஆதியிலே அன்று இருந்தது போல

எல்லாம் நலமாகும்

Merry Christmas

Happy New Year

100.    வான் தந்தையின் சுதனே

விண் மண்ணோடு உறவாடுதே

தேன் சிந்தும் மலரே

கண் தூங்கு தாலாட்டிலே

ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ

ம். . . . ம் . . .

 

தேடி மீட்பளிக்க வந்தாய்

ஈடில்லா ஆனந்தம் தந்தாய்

வீடின்றி குடில் தனில் நீ பிறந்தாய்

வீணான செல்வங்கள் என்றானதோ

உன்னாலே அமைதி உலகெங்கும் நிலவும்

என் வாழ்வில் அருள் மணம் கமழ வைத்தாய் – வான்

 

வஞ்சமில்லாத நெஞ்சம்

மன்னவன் நீ தூங்கும் மஞ்சம்

தஞ்சம் நின் எழில் கொஞ்சும் தாளல்லவா

தாராயோ பொன்னான நல் ஆசியே

குன்றாத வளமும் குறையாத நலமும்

எந்நாளும் வழங்கும் இறைவன் நீயே  – வான்

 

உயிர்ப்பு பெருவிழா பாடல்கள்

 

101.    ஒளியே ஒளியின் ஒளியாம் இறைவொளியை ஏற்றுவோம்

எங்கும் ஏற்றுவோம்

வீடுயெங்கும் எங்கள் வீதியெங்கும்

நாடுயெங்கும் இந்த உலகமெங்கும்

இறையின் அருளால் அருளின் ஒளியை ஏற்றுவோம் (3)

 

 

1. பார்வை வேண்டி ஒளியை தேடும் கண்கள் கோடி இங்கே

போர்வை மூடி உண்மை மறைத்து வாழும் மனங்கள் இங்கே

ஒளி உண்மை நன்மையாம்

ஒளி நீதி நேர்மையாம்     (2)

தனலாய் எரியும் இறையின் ஒளியை ஏற்றுவோம் (3)

 

2. ஒளியில் வாழும் இறைவன் உறவை

மண்ணில் வளரச் செய்வோம்

ஞான கீதம் எங்கும் முழங்க சேர்ந்து பாடிடுவோம்

ஒளி உணவும் உயிருமாய்

ஒளி வாழ்வும் வழியுமாய்       (2)

கதிராய் வீசும் மணமாய் ஒளியை ஏற்றுவோம் (3)

 

3. ஏழை மனதை மகிழச் செய்ய உதவி புரிந்திடுவோம்

இறைவன் அன்பை பரவச் செய்ய முயற்சி செய்திடுவோம்

ஒளி அன்பும் அருளுமாய்

ஒளி அறமும் செயலுமாய்  (2)

மலரும் இறைவனின் அன்பின் ஒளியை ஏற்றுவோம் (3)

102.    ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்

ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்

ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிராம்

ஒவ்வொரு மனிதனும் இன்னொரு ஏசுவாம்

நாம் நம்மையே பலியாய் கொடுப்போம்

இந்த பாரினில் அவராய் வாழ்வோம்

 

பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே

புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய்

நிலைத்ததே

ஏசுவின் பலியில் இறப்பும் உயிர்ப்பும் இனையற்ற சாட்சிகளே(2)

நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் (2)

நாளைய உலகின் விடியலாகவே

 

இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே

இழப்பதை போன்றொரு உயரிய இலட்சியம் எதிலுமே வெல்லுமே

வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைபெறுமே (2)

இதை உணர்வோம்; நம்மை பகிர்வோம் (2)

இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

 

 

103.    இராஜாதி ராஜன் உயிர்த்தெழுந்தார்

அடிமையின் விலங்கினை உடைத்தெரிந்தார்

மரணத்தை வென்றார் மகத்துவம் அடைந்தார்

விடுதலைக் கிடைத்திட உயிர்த்தெழுந்தார்

எழுந்தார் எழுந்தார் உயிர்த்தெழுந்தார்

இறைமகன் யேசு உயிர்த்தெழுந்தார்

 

ஒரு நாள் மறைவேன் மீண்டும் உயிர்ப்பேன்

புதுயுகம் படைப்பேன் என்றார்

இருளகன்றனவே … அல்லேலூயா

ஒளி பிறந்தனவே … அல்லேலூயா

பாறை பிளந்தது, கட்டுகள் அவிழ்ந்தது

கல்லறையிருந்து உயிர்த்தெழுந்தார் – எழுந்தார்

 

மனுமகன் உதிரம் பாவம் போக்கும்

உயிர்களை காக்கும் என்றார் -2

இறைவாக்கினரும் … அல்லேலூயா,

மறைவல்லுனரும் … அல்லேலூயா

அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றிடவே

பிறந்து இறந்து உயிர்த்தெழுந்தார் – எழுந்தார்

 

எனது கைகள் நீங்கள் என்றார், புதுமுகம் புனைவீர் என்றார்

தீமை தகர்த்திடவே … அல்லேலூயா,

அருள் நிறைந்திடவே …அல்லேலூயா

பகைமைகள் ஒழிந்திட, சுயநலம் மாய்த்திட

புதுயுகம் படைக்க நம்மை அழைத்தார் – எழுந்தார்

 

104.    உயிர்த்தார் கிறிஸ்த்து உயிர்த்தார்

இந்த உலகை உயிர்த்துவிட்டார்

வென்றார் கிறிஸ்த்து வென்றார்

இந்த அலகையை வென்றுவிட்டார்

ஆர்ப்பரிப்போமே ஆனந்த்திப்போமே

அல்லேலூயா பாடுவோமே

 

மரணத்தை வென்ற மாவீரன்

மனுக்குலம் மீட்ட இறை மைந்தன்

கல்லறை விட்டு உயிர்த்தெழுந்தார்

கவலைகள் நமக்கு இனி இல்லை

 

மரணத்தை கண்டும் பயமில்லை

மாபரன் இயேசு உயிர்த்துவிட்டார்

பேயின் தலையை மிதித்துவிட்டார்

பிணக்குகள் எல்லாம் போக்கிவிட்டார்

பிற பாடல்கள்

105.    ஆற்றலாலும் அல்ல சக்தியாலுமல்ல

ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே

 

மண்குடம் பொற்குடம் ஆகுமா? ஆகுமே

குறைகுடம் நிறைகுடம் ஆகுமா? ஆகுமே

தண்ணீரும் திராட்சை இரசம்  ஆகுமா? ஆகுமே

திராட்சை இரசம் திரு இரத்தம்  ஆகுமா? ஆகுமே

 

 

செங்கடல் பாதையாய் ஆகுமா? ஆகுமே

செத்தவர் உயிர்த்தெழல் ஆகுமா? ஆகுமே

சிங்கமாடு நட்புறவு ஆகுமா? ஆகுமே

சிறைவாழ்வு திருவாழ்வு ஆகுமா? ஆகுமே

 

 

பாவிகள் மீட்பு பெறல் ஆகுமா? ஆகுமே

பாலைவனம் சோலைவனம் ஆகுமா? ஆகுமே

திருச்சபை ஓர் உடல் ஆகுமா? ஆகுமே

திரு மகன் ஆவியால் ஆகுமா? ஆகுமே

106.    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

திவ்ய மதுரமாமே

அதை தேடிய நாடி ஓடியே வருவேன்

திருச்சபை ஆனோரே – தேன்

 

காசினி தனிலே நேசமாய் தாக

கஷ்டத்தை உத்தரித்தேன்- 2

பாவ கசடத்தை அறுத்து சாபத்தை தொலைத்தார்

கண்டுணர் நீ மனமே – தேன்

 

பாவியை மீட்க தாவிய உயிரை

தாமே ஈந்தவராம் – பின்னும் – 2

நேமியாம் கருணை நிலை வரம் உண்டு

நிதம் துதி என் மனமே – தேன்

 

 

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்

உபாயமாய் நீங்கி விடும் – 2

என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு

கருத்தாய் நீ மனமே – தேன்

 

 

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல

துணைவராம் நேசரிடம் – நீ – 2

அன்பதாய் சேர்ந்தால் அணைத்துன்ணை காப்பார்

ஆசைக்கொள் நீ மனமே – தேன்

 

பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து

போற்று நாமம் – அதை – 2

பிடித்துக்கொண்டால் பேரின்ப வாழ்வை

பெறுவாய் நீ மனமே – தேன்

 

107.    பேதை போல் இருந்து பாடுகிறேன் நான்

பேரருள் புரிவாய் குரு தேவா

 

இலட்சிய வாழ்வை தேடிடும் போது

இடர்களை தாங்கும் வரம் தாராய்

 

எனைப் பிறர் இகழ்ந்து தூற்றிடும் போது

எனை மறந்திருக்கும் வரம் தாராய்

 

புகழ்ச்சியின் ஏணியில் ஏறிடும் போது

பிறரையும் மதிக்கும் வரம் தாராய்

 

தளர்ச்சியும் நோயும் தொடர்ந்திடும் போது

தவத்தினை பேணும் வரம் தாராய்

 

கவலையின் பிடியில் கசங்கிடும் போது

சகித்திட எனக்கு வரம் தாராய்

 

உழைத்து என் உடலும் சோர்ந்திடும் போது

உறவுகள் வளரும் வரம் தாராய்

 

உண்மைகள் பேசி வதைபடும் போது

உடைந்திடாதிருக்க வரம் தாராய்

 

அயலவர் பெருமை அடைந்திடும் போது

அகம் முகம் மலரும் வரம் தாராய்

 

இறைவழி நடக்க முனைந்திடும் போது

என் வழி மறக்க வரம் தாராய்

 

எனைப் பிறரன்பில் இணைத்திடும் போது

இகபர மகிழ்வின் வரம் தாராய்

 

108.    எந்தயே இறைவா திருவடி சரணம்

எந்தயே இறைவா திருவடி சரணம்

எந்தயே இறைவா திருவடி சரணம்

எந்தயே இறைவா திருவடி சரணம்

 

இயேசுவே ஆண்டவா திருவடி சரணம்

இயேசுவே ஆண்டவா திருவடி சரணம்

இயேசுவே ஆண்டவா திருவடி சரணம்

இயேசுவே ஆண்டவா திருவடி சரணம்

 

தூயநல் ஆவியே திருவடி சரணம்

தூயநல் ஆவியே திருவடி சரணம்

தூயநல் ஆவியே திருவடி சரணம்

தூயநல் ஆவியே திருவடி சரணம்

 

மூவொரு இறைவா திருவடி சரணம்

மூவொரு இறைவா திருவடி சரணம்

மூவொரு இறைவா திருவடி சரணம்

மூவொரு இறைவா திருவடி சரணம்

 

109.    மாண்புயர் இந்த அனுமானத்தைத்

தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்

பழைய நியம முறைகள் அனைத்தும்

இனி மறைந்து முடிவு பெறுக

 

புதிய நியம முறைகள் வருக

புலன்களாலே மனிதன் இதனை

அறிய இயலாக் குறையை நீக்க

விசுவாசத்தின் உதவி பெறுக

 

பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்

புகழ்ச்சியோடு வெற்றி ஆர்ப்பும்

மீட்பின் பெருமை மகிமையோடு

வலிமை வாழ்த்து யாவும் ஆக

 

இருவரிடமாய் வருகின்றவராம்

தூய ஆவியானவர்க்கும்

அளவில்லாத சமபுகழ்ச்சி

என்றுமே உண்டாகுக. ஆமென்

 

110.    அருட்திரு தேவ தேவன் போற்றி

அவர்தம் திருநாமம் போற்றி

 

அவர் மகன் ஏசு கிறிஸ்து போற்றி

அவர்தம் திருஅன்பே போற்றி

 

அருட்திரு தூய ஆவி போற்றி

அவர்தம் திருஞானம் போற்றி

 

அருட்திரு அன்னை மரியாள் போற்றி

அவர்தம் திருதூய்மை போற்றி

 

அருட்திரு சூசைமுனியும் போற்றி

அவர்தம் திருவாய்மை போற்றி

 

அருட்திரு தூதர் அமரர் போற்றி

அவர்தம் திருசேவை போற்றி

 

அருட்திரு தேவ தேவன் போற்றி

அவர்தம் திருநாமம் போற்றி

 

111.    ஒவ்வொரு மனிதனும் என் நன்பண்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன்

என் சகோதரன் என் சகோதரன்

வறுமையில் வாழ்பவன் என் நன்பண்

வருத்ததில் இருப்பவன் சகோதரன் (2)

அல்லல் படுபவன் என் நன்பண்

ஆபத்தில் இருப்பவன் சகோதரன்

காரணம் அவனும் மனிதன் (2)

One Response to பழைய கத்தோலிக்க தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் – Old christian Songs Book

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Gallery
12573200_179807365713480_372101312191213819_n 12572962_580804482084965_1437535127169731422_n 12540619_179807622380121_6195365656658349082_n 12523099_179806945713522_8769233477818645294_n 12523098_580804438751636_1007720391649668752_n 12508783_179806742380209_3809173333736972963_n 12631405_207011129644185_6729222459139328017_n 12552545_207011286310836_8968820824038323149_n 12548869_207011139644184_8109880104809597382_n 12523904_207011302977501_4448356338740423898_n 12510237_207011376310827_7235528989532919493_n 12507665_207011096310855_4316274592758192517_n 12494729_207011022977529_3809779746464964094_n 1935606_207011299644168_528728957022810300_n 12592485_207010446310920_5819465288125561955_n 12573697_1005530352847578_5311456419695560960_n 12573017_207010489644249_60181243672631674_n 12553063_207010609644237_56738018837040201_n 12549030_207010602977571_6490336701236053292_n 12540605_207010329644265_111741163071112357_n
Slideshow
Archives
categories