நிர்வாக அலுவலரின் சுற்றறிக்கை
அலுவலக அறிவிப்பு :
நாள் : 01.06.2017
.:: நிர்வாக அலுவலரின் சுற்றறிக்கை ::.
சிங்கம்பாறை நலச்சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்! நமது இயக்கத்தின் செயல்பாடுகள் நமது ஊர் மக்கள் அனைவருக்கும் சென்றடைந்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இந்நேரத்தில் நமக்கு பல்வேறு ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கிக்கொண்டிருக்கும் ஊர் கமிட்டியாருக்கும், பங்குத்தந்தையவர்களுக்கும், பள்ளித்தலைமையாசிரியர் அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
A. தற்போது மக்கள் மத்தியில் நம்மிடம் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது. எதிர்பார்ப்புக்களில் வளர்ச்சியை மேம்படுத்தும் செயல்பாடுகளை தொய்விற்றி செயல்படுத்துவது நமது கடமையாகும். 29.1.2017 அன்று நடந்த கூட்டத்தில் நமது சங்கத்தின் அடிப்படை கட்டமைப்பினை ஏற்படுத்தவும் முதல் 1 ஆண்டுக்கான பட்ஜெட் தொகையினை (ரூ.1,10,000/-) முதல் கட்டமாக வருமானம் ஈட்டும் உறுப்பினர்கள் எல்லோரும் குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்க ஒப்புக்கொண்டோம். அதன்படி கீழ்காணும் நன்கொடைகள் பெறப்பட்டுள்ளது.
1. திரு.மிக்கேல் சுரேஷ் (ரூ. 2900)
2. திரு.பனிதாசன் (ரூ. 4000)
3. திரு.சகாயம் (ரூ. 1000)
4. திரு.துரைராஜ் (ரூ. 5000)
5. திரு.ஜான்சன் (ரூ. 5000)
6. திரு.ஜெகன் (ரூ. 2000)
7. திரு.ராபின்சிங் (ரூ. 3000)
8. திரு.பவுல் அந்தோணி (ரூ. 5000)
மற்ற இதர உறுப்பினர்களும் நன்கொடையளிக்க உறுதியளித்துள்ளனர். எனவே வருமானம் ஈட்டும் உறுப்பினர்கள் உடனடியாக தங்களது மேலான நன்கொடையினை இந்த மாத இறுதிக்குள் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
B. தற்போது நாம் மாதம் தோறும் ஒரு மக்கள் நல பணியினை செவ்வனே செய்து வருகிறோம். இதற்கான செலவுகளை நாமே ஈடுகட்ட 2.4.2017 அன்று நடந்த கூட்டத்தில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஒவ்வொரு உறுப்பினரும் தினமும் நமது தேனீர் செலவீனத்தில் 1 தேனீரை குறைத்து மாதம் தோறும் குறைந்த பட்டமான ரூ. 200 உறுப்பினர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த மாதம் முதல் உறுப்ப்னர்களிடம் இருந்து மாதாந்திர மக்கள் நலப் பணியினைச் செய்ய நன்கொடையானது வசூலிக்கப்படுகிறது. இதன்படி கீழ்காணும் மாதாந்திர நன்கொடைகள் இதுவரை பெறப்பட்டுள்ளன..
1. திரு.சகாயம் (ரூ. 500)
2. திரு.பெல்சன் (ரூ. 500)
3. திரு.ரமேஷ் (ரூ. 500)
4. திரு. கிறிஸ்டோபர் (ரூ. 500)
கொடுத்து மாத நன்கொடையினை தந்து ஆரம்பித்துள்ளர். வருமானம் ஈட்டும் அனைத்து உறுப்பினர்களும் இந்த மாதாந்திர நன்கொடையினை நமது மாதாந்திர திட்டமிடல் கூட்டம் நடைபெறும் போது (பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை) தந்து மக்கள் நல சேவைகளை தாங்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு :
உறுப்பினர் அல்லாதவர்களிடம் எந்த ஒரு நன்கொடையும் பணமாக பெறப்பட மாட்டாது.
ஒவ்வொரு மாதமும் மாதாந்திர வரவு மற்றும் செலவு விபரமானது மாத கூட்டத்தின் போது சமர்பிக்கப்படும்.
நமது ஊர் முன்னேற்றத்திற்காக ஆண்டவர் நம்மை இணைத்துள்ளார். தொடர்ந்து ஒளியினை ஏற்றி இருளினை அகற்றுவோம்.
நன்றி!
தங்களன்புள்ள,
ச.பீட்டர் துரைராஜ்,
(பொருளாளர் / நிர்வாக அலுவலர்.)
Leave a Reply