இலவச முழுமையான கண் பரிசோதனை & குருதி கொடை முகாம்

.:: நிகழ்ச்சி அறிக்கை ::.
இலவச முழுமையான கண் பரிசோதனை, குருதி பிரிவு கண்டறிதல் & குருதி கொடை முகாம்
நாள்: 07.05.2017 ஞாயிறு நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
இடம்: புனித பவுல் மேல் நிலைப் பள்ளி, சிங்கம்பாறை
நிகழ்ந்தவைகள்

  •  முகாமானது காலை 9 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது.
  • முகாமில் முழுமையான கண் பரிசோதனை திருநெல்வேலி அரவிந்த் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர் திருமிகு.சபரி அவர்கள் தலையிலான 15 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முழுமையான கண் பரிசோதனையை மேற் கொண்டனர். இதில் 248 பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கண்களை பரிசோதனை செய்தனர். 23 நபர்கள் இலவச கருவிழி அறுவைச் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 55 நபர்களுக்கு கண் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்பட்டு சலுகை விலையில் வழங்கப்பட்டது.
  • முகாமில் குருதி பிரிவு கண்டறிதல் & குருதி கொடை முகாமில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியிலிருந்து மருத்துவர் திருமதி. கமலா நேரு அவர்கள் தலைமையிலான 12 நபர்கள் கொண்ட குழுவினர் இரத்த தானம் வழங்க வந்த தன்னார்வலர்களுக்கு உடல் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி குருதிகளை சேகரித்தனர். 33 நபர்கள் குருதி தானம் வழங்கினர்.
  • முன்னதாக நடைப்பெற்ற துவக்க விழாவில் சிங்கம்பாறை நலச் சங்க செயற்குழு உறுப்பினரும் புனித பவுல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருமான திரு.சேவியர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஊர் தலைவர் திரு.அல்போன்ஸ் அவர்கள் தலையிலான ஊர் கமிட்டியார், மற்றும் நலச் சங்க செயலாளர் திரு ததேயுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பங்குத்தந்தை அருட்திரு செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார். சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளர் திருமிகு.அசிஸ் ரவாத் IPS (Mr.ASHISH RAWAT IPS) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி ஊர் பெரியவர் திரு.ஹென்றி அவர்கள் மூலம் முகாமினை துவக்கி வைத்தார். ஊர் கமிட்டியார் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். சிங்கம்பாறை நலச் சங்க தலைவர் திரு ஜான்சன் அவர்கள் உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு சிங்கம்பாறை ஊர் வரலாறு பற்றியும், நலச் சங்கம் பற்றியுமான கையேட்டை வழங்கினார்.
  • கலந்து கொண்ட மருத்து குழுவினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சிங்கம்பாறை நலச் சங்க பொருளாளர் / நிர்வாக அலுவலர் திரு பீட்டர் துரை ராஜ் அவர்கள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி குழுவினருக்கும், நிர்வாக குழு உறுப்பினர் திரு.கிறிஸ்டோபர் அவர்கள் திருநெல்வேலி அரவிந்த் மருத்துவமனை குழுவினருக்கும் நினைவு பரிசினை வழங்கினர்.
  • புனித பவுல் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 15 பேர் முகாமில் தன்னார்வலராக சேவையாற்றினர். முகாமில் கலந்துகொண்ட மருத்துவ குழுவினர் மற்றும்ன் தன்னார்வலர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
  • முன்னதாக இம்முகாம் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் 15 இடங்களில் பேனர்கள் (உதவி : செயிண்ட் மேரிஸ் ஏஜென்சீஸ்) வைக்கப்பட்டது, சுவரொட்டிகள் சுமார் 15 கிராமங்களில் ஒட்டப்பட்டன. 6000 துண்டு பிரசுரங்கள் (உதவி : ஜெரோ கிராபிக்ஸ்) விநியோகிக்கப்பட்டன. 5.5.2017 மற்றும் 6.5.2017 ஆகிய நாட்களில் ஆட்டோவில் ஒலி பெருக்கி வைத்து விளம்பரம் செய்யப்பட்டது. இம்முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை, முகாம் பொறுப்பாளர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு.பெல்சன், திரு அமல்ராஜன், திரு.செபஸ்தியான் மற்றும் சிங்கம்பாறை நலச்சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Archives
categories