SWA 1st Planning Meeting
சிங்கம்பாறை நலச் சங்கம் – Singamparai Welfare Association
திட்டமிடல் கூட்டம்
நாள் : 29.01.2017
இடம் : புனித சின்னப்பர் மேல்நிலைப் பள்ளி, சிங்கம்பாறை.
- சிங்கம்பாறை ஊர் நலனில் அக்கறை கொண்டு ஊர் முன்னேற வேண்டும், ஊர் மக்கள் நம்மால் பயன் பெறவேண்டும் என்ற உயாpய நோக்கோடு வாழும் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட ஏதுவாக சிங்கம்பாறை நலச் சங்கம் என்ற அமைப்பானது01.2017 அன்று உதயமானது.
- அதன் இரண்டாவது கூட்டமானது01.2017 ஞாயிறு அன்று மதியம் 1.30 மணி முதல் 2.45 மணி வரை புனித பவுல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
- 20 போ; கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அமைப்பின் தேவை, நோக்கம், செயல்பாடுகள், நீண்ட காலத்திற்கு அமைப்பை கொண்டு செல்வதற்கான வழிமுறைகள், நிர்வாகக்குழு உறுப்பினா;கள் தோ;வு செய்யப்படும் விதம், அவா;கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் மற்றும் அவா;களின் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
செயல்பாடுகள்
அமைப்பினால் செய்யப்படக்கூடிய 14 வகையான செயல்பாடுகள் எவை என்பது பற்றி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. அவையாவன
- முன்னாள் மாணவா; அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல்
- ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்வி வளா;ச்சிக்கு உதவுதல்
- மாணவர்கள், இளையோர்கள், பெண்கள் மற்றும் இதர குழுக்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்குதல்.
- இளைஞர் குழுவினை ஏற்படுத்தி வழிகாட்டுதல்
- உயா; கல்வி, தொழில் மற்றும் வேலைக்கு வழிகாட்டுதல்.
- இரத்த தானம் குழுவினை செம்மைப்படுத்தி செயல்படுத்துதல்.
- அனைத்து வகையான மருத்துவ முகாம்களையும் தேவைபடும் நேரத்தில் அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்போடு நடத்துதல்.
- காமராசா; பிறந்த நாளை சிறப்பாக பயனுள்ள வகையில் கொண்டாடுதல்.
- முதலுதவி மையம் ஒன்றை உருவாக்குதல்.
- பொது நூலகம் ஒன்றை உருவாக்கி அதனை பராமரித்தல்.
- இயற்கை வேளாண்மைக் குறித்த விழிப்புணர்வினை விவசாயிகளுக்கும் இளைய தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஏற்படுத்துதல்.
- சமூகம், காலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காத்தல்.
- அரசு நலத்திட்ட உதவிகளை பெற தகுதியுள்ளவர்களுக்கு வழிகாட்டுதல்.
- ஆம்புலன்ஸ் சேவை
அலுவலகம்
அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வர செயல் அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அலுவலகமானது கோவில் அல்லது பள்ளி வளாகத்தில் இருந்தால் நலமாக இருக்கும் என்பது முடிவு செய்யப்பட்டு அதற்கான அறையினை நமது பள்ளியிலிருந்து முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் பெறுவது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
பணியாளர்
அலுவலகத்திற்கு முழுநேரப்பணியாளராக ஒருவரை பணி ஒப்பந்த அடிப்படையில் அமா;த்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஒப்பந்த காலம் ஏப்ரல் 2ம் தேதி முதல் முதல் மார்ச் 31 வரை 1 வருடம் எனவும் தீர்மாணிக்கப்பட்டது. 1 ஆண்டு காலம் முடிந்ததும் அதுவரை வேலைப்பார்த்த பணியாளரின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக நிர்வாக குழு முடிவு செய்தால் மீண்டும் 1 ஆண்டு காலத்திற்கு புதிய ஒப்பந்தம் போடப்படும். இவ்வாறு ஒவ்வொறு ஆண்டும் கடைப் பிடிக்கப்படும். (உறுதிச் செய்யப்படவில்லை).
அலுவலகப் பணியாளருக்கான பொறுப்புகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது, அவருக்கான ஊதியம் மாதம் ரூ.4000 என்பது நிர்ணயிக்கப்பட்டது.
மூலதனம் மற்றும் பொருளாதார சேவைகள்
அமைப்பிற்காக தேவைப்படும் பொருளாதாரத்தேவைகள் நன்கொடைகள் மூலம் பெறலாம் என தீர்மானிக்கப்பட்து.
அமைப்பு பதிவு
வரும் புதன்கிழமை (1.2.2017) அன்று அமைப்பை அரசாங்கத்தில் பதிவு செய்ய ஆடிட்டரை சந்தித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.
அமைப்பின் கூட்டம்
நிர்வாக குழுக் கூட்டம் மாதம் ஒருமுறை நடத்தப்படவேண்டும் என்ற கருத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனா. அலுவலகம் திறக்கும் வரை 15 தினங்களுக்கு ஒருமுறை கூடுவது என்பது தீர்மாணிக்கப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி 26 ம் நாள் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.
உறுப்பினா; தகுதி
- சிங்கம்பாறை ஊர் வரி கொடுப்பவர்கள் மட்டுமே இதில் உறுப்பினராக இணைய முடியும்.
- வரி கொடுக்காமல் நன்கொடை அளிப்பவர்கள் இதில் உறுப்பினராக முடியாது.
- உறுப்பினர் கட்டணம் கிடையாது
செயற்குழு உறுப்பினருக்கான தகுதி மற்றும் தேர்வு முறை
- செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 1 ஆண்டு ஆகும்.
- செயற்குழு உறுப்பினர்களின் பதவிகள் பின்வருவன. தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 10 நபர்கள் (உறுதிச் செய்யப்படவில்லை).
- 1 ஆண்டு முடிந்ததும் புதிய செயற்குழு உறுப்பினர்களுக்காண விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.
- தலைவர் பதவி : குறைந்தபட்ச கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்ட படிப்பு. மேலும் செயற்குழுவில் எப்போதாவது 1 ஆண்டு உறுப்பினராக இருந்து செயல் பட்டிருக்க வேண்டும்.
- துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் : குறைந்த பட்ச கல்வித்தகுதி பனிரெண்டாம் வகுப்பு மற்றும் செயற்குழுவில் எப்போதாவது 1 ஆண்டு உறுப்பினராக இருந்து செயல் பட்டிருக்க வேண்டும்.
- இதர செயற்குழு உறுப்பினர்கள் : குறைந்த பட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு. ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள் மற்றும் புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் செயற்குழு உறுப்பினர் ஆவதற்கு தகுதியுடையோர் ஆவர்.
- ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே பதவிக்கு விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- ஒரு நபர் ஒரு பதவியில் தொடர்ந்து 1 ஆண்டுக்கு மேல் இருக்க முடியாது
- ஒவ்வொரு ஆண்டும் புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஜனவரி மாதம் 26 ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் வைத்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
- மேற்கண்ட விதிமுறைகள் 01.2018 முதல் நடைமுறைக்கு வரும்.
முதல் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்
இறுதியாக நிர்வாகக்குழு உறுப்பினா;கள் தோ;வுசெய்யப்பட்டு பணிகள் பகிர்ந்தளிக்கப் பட்டு துவக்கப்பட்டன. முதல் தேர்வு என்பதாலும், 01.01.2018 க்கு முன் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பாகவும் இருப்பதால் முன் அனுபவம் மற்றும் ஈடுபாட்டிணைக் கருத்தில் கொண்டு கீழ்கண்ட உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : திரு.ஜோ.அந்தோணி அலோசியஸ் ஜான்சன்
துணைத்தலைவர் : திரு.நீ.மைக்கேல் சுரேஸ்
செயலாளர் : திரு.ச.ஜஸ்டின் திரவியம்
துணைச் செயலாளர் :திரு.செ.சகாய அமிர்தராஜ்
பொருளாளர் : திரு.ச.பீட்டா; துரைராஜ்
ஒருங்கிணைப்பாளா;கள்
தகவல் தொடர்பு &
பயிற்சி வகுப்புகள் : திரு.அ.மிக்கேல் அந்தோணி & திரு.ச.செபஸ்தியான்
இரத்ததான குழு : திருஜோ.ஜூலியட் பெல்சன்
இளையோர் குழு : திரு.சி.மைக்கேல் மொ;பின்
கல்வி & தொழில் வழிகாட்டல் : திரு.சி.சகாய ரமேஷ், & திரு.க.மைக்கேல் ஜெபஸ்டின்
இணையதளம் பராமரிப்பு : திரு.சேசுராஜன் & திரு.அருள்மணி
அலுவலக மேலாண்மை : திரு.ம.சேசு செல்வக்குமார்
வழக்கறிஞர் : திரு.செ.ஜெகன் பிரிட்டோ
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு :
திரு.எஸ்.சேவியர், அருட்தந்தை.சி.சகாய பவுல், திரு.லூ.பவுல் அந்தோணிராஜ், ஜா.சேவியர் செல்வக்குமார், திரு.ராபின், திரு.ஸ்.அந்தோணி ராஜேஷ், திரு.மி.பனிதாசன், திரு.கலைச்செல்வன் மற்றும் திரு.ஜோசப்.
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு :
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு உறுப்பினர்கள் குழுவாகவோ அல்லது தனி நபராகவோ அனைத்து விதமான செயல்பாடுகளையும் எப்பொதும் கண்காணிக்க மற்றும் மதிப்பீடு செய்யும் தகுதியுடையோர் ஆவர்.. மேலும் நல்ல முறையில் செயல் படும் திட்டங்களை மேம்படுத்தவும், தேக்க நிலையில் உள்ள செயல்பாடுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் தேவையான ஆலோசனைகளை வழங்கும்.
கணக்கு
கணக்குகளை பராமரிக்க வங்கி கணக்கு ஒன்று தேசிய வங்கியில் துவக்குவது என்பது முடிவு செய்யப்பட்டது. இரு நபர்கள் இணைந்து வங்கி கணக்கிணை இயக்குவது என்பதும் தீர்மானம் செய்யப்பட்டது.
உத்தேச செலவுகள் (முதல் 1 ஆண்டுக்கு மட்டும்)
வ. எண் | அடங்கல் | தொகை |
1 | பணியாளர் ஊதியம் (ரூ.4000 / மாதம் x 12) | ரூ.48000 |
2 | பணியாளர் பயணச் செலவு | ரூ.12000 |
3 | கைப்பேசி (அலுவலக உபயோகம்) | ரூ.1500 |
4 | கைப்பேசி கட்டணம் | ரூ.2000 |
5 | பதிவேடுகள் (அலுவலகம்) | ரூ.2000 |
6 | பீரோ (அலுவலகம்) | ரூ.5000 |
7 | மேஜை – 2 (அலுவலகம்) | ரூ.7000 |
8 | பிளாஸ்டிக் இருக்கைகள் 10 (அலுவலகம்) | ரூ.5000 |
9 | மின்விசிறி (அலுவலகம்) | ரூ.1500 |
10 | அரசு பதிவுக் கட்டணம் | ரூ.4000 |
11 | வங்கி கணக்கு துவங்க | ரூ.1000 |
12 | கணிணி மற்றும் பிரிண்டர் (அலுவலகம்) | ரூ.20000 |
13 | இணைய சேவை இணைப்பு (அலுவலகம்) | ரூ.3000 |
14 | இதரச் செலவுகள் | ரூ.30000 |
மொத்தம் | ரூ 1,25,000 |
ஆரம்பச் செலவுகளுக்காக உடனடியாக ரூ 26 ஆயிரம் திரட்டப்பட்டது.
தகவல் தொடர்பு & சமூக வலைதளம்
ஏற்கனவே நமது ஊர் அன்பர்களால் உருவாக்கி பராமரிக்கப்படும் வலைத்தளம், முக நூல் பக்கம், முகநூல் குழு மற்றும் ப்ளாக் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்படுள்ளது. தற்போது பராமரிப்பவர்கள் அதனை நலச்சங்கத்திடம் ஒப்படைக்க இசைந்துள்ளனர். தொடர்ந்து இதனை இணைய தள பராமரிப்பு குழுவினர் பராமரிப்பர்.
ஆலோசனைகள்
நமது மூத்த உறுப்பினர் பொருளாளர்.திரு.ச.பீட்டா; துரைராஜ் அவர்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட நல் ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் திருவாளர்.சேவியர் அவர்கள் நல்லுரைகளோடு நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.
குறிப்பு :
- ஏதேனும் திருத்தங்கள் மற்றும் விடுபட்டவைகள் இருந்தால் (உறுப்பினர்கள் பெயர்கள் உட்பட) திரு.செபாஸ்டியன் அல்லது திரு.அமர் அவர்களிடம் தெரிவிக்கவும்.
- சிங்கம்பாறையைச் சேர்ந்த அனைவரையும் இதில் உறுப்பினராக இணைப்பதே இதன் நோக்கமாகும். எனவே இதில் இணைய விரும்பினால் உடனடியாக உறுப்பினர் படிவத்தை நிரப்பி கையொப்பமிட்டு நிர்வாகிகளிடம் கொடுக்கவும்.
- வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் அன்பர்களுக்காக வடிவம் ஆன்லைன் விண்ணப்பம் இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும். இதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
- வாட்சப் குழு
- நமக்காக Singamprai Welfare என்ற பெயரில் வாட்சப் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர் படிவம் நிரப்பி கையொப்பம் போட்டு கொடுத்தவுடன் உங்களது பெயர் சேர்க்கப்படும்.
- இந்த வாட்சப் குழுவில் எந்த ஒரு பார்வட் செய்தியையும் அனுப்பகூடாது என்று ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டு அனுப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply