இந்த ஊரின் சிறப்பு,

ஊரில் வேளார்குளம் என்ற குளம் உள்ளது. மழை நேரங்களில் இந்த குளம் நிரம்பி வழியும். அதன் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.இந்த ஊரில் 4 வகையான இன மக்களும், 2 வகையான மதத்தைச் சார்ந்தவர்களும் உள்ளனர். முக்கூடலில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரமும், சீதற்ப்ப நல்லூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது. இங்கு ஒரு காந்திஜி நினைவு தொடக்கப்பள்ளி திரு.ஜார்ஜ் மனோகர் அவர்களின் நிர்வாகத்தில் நடைபெறுகிறது. இதில் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். பாலர் பள்ளி, அங்கன்வாடி நடைபெறுகிறது. ரேசன் கடை, கிராமச்சாவடி உள்ளது.

இங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நாடார் இனத்தைச் சார்ந்தவர்கள். இங்குள்ள கிறிஸ்தவர்களில் ஒரு சில குடும்பங்கள் வெட்டுவாங்குளத்தில் இருந்து 1900-ம் ஆண்டில் இருந்து இங்கு தங்கியதாக கூறப்படுகிறது. 1915-ம் ஆண்டு வீரவநல்லூர் பங்காக இருந்த பொழுது ஒரு கூரை கோவில் அமைந்தது. அப்பொழுது அவர்களது தொழில் பனை ஏறுதல், கால் நடைகள் வளர்த்தல், விவசாயம் செய்தல். 1930-ம் ஆண்டில் அருட்தந்தை குத்தூரியர் காலத்தில் இவ்வூர் சிங்கம்பாறை பங்குக்கு மாற்றப்பட்டது. அதன் பின் 1980-ம் ஆண்டு தந்தை அருளப்பன் அடிகளார் காலத்தில் கூரை வீடுகள் ஒட்டு வீடுகளாகவும், கூரை கோவில் கட்டிடமாகவும் மாற்றப்பட்டது.

22-02-1981 ஆண்டில் புதிய கோவில் மேதகு இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டது. ஒலி பெருக்கியும் அமைக்கப்பட்டது. அப்பொழுது இருந்த கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் இருபத்தி ஒன்று. 2011-ம் ஆண்டு திருவாளர் ராஜா ஆசிரியர் அவர்கள் ஆலய மண்டபத்தைக் கட்டிக் கொடுத்தார்கள். கோவிலை சுற்றிய தளம் 2005-ம் ஆண்டு திரு. மதிவாணன் அவர்களால் அமைக்கப்பட்டது. 30-09-2007ம் ஆண்டு அருட்தந்தை லாரன்ஸ் அடிகளார் காலத்தில் ஆரோக்கிய அன்னை கெபி ஆலயத்தின் முன் தெற்கு பகுதியில் கட்டப்பட்டது.

2008-ம் ஆண்டு இதே திருவாளர் மதியழகன் அவர்கள் ஆலயத்திற்கு ஜெனரேட்டர் வாங்கிக் கொடுத்தார்கள். அடிகளாரின் ஆசிராலும் உதவியாலும் ஆலயம் பெயிண்ட் அடிக்கப்பட்டு சுரூபம், வசன கடிகாரம் அமைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு சிறப்பாக திருவாளர் மதியழகன் பெரும் உதவியாலும், ஊர் பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள், மற்றும் சிறப்பு நன்கொடையாளர்கள் உதவியாலும் பல லட்சம் செலவில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திருவிழா 3 நாட்கள் கொண்டாடப்பட்டு 18-12-2011 ஞாயிறு அன்று பாளையங்கோட்டை மேதகு ஆயர் ஜூடு பாலராஜ் மற்றும் பங்கு தந்தை அலோசியல் துரைராஜ் அடிகளார் அவர்கள் மூலம் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு புதிய கோவில் அமைக்கப்பட்டது.

எங்களது ஆலய பாதுகாவலராம் அதி தூதர் மிக்கேல் வாழ்த்தப்பெறுவாரக.

நடைபெற்ற புதுமைகள் :

    1. இங்கு பல பக்தர்கள் வந்து அதிதூதரின் பரிந்துரையால் நோய் குணம் அடைகிறது
    2. கஷ்டங்கள் தீருகிறது.
    3. தீய ஆவிகள் விரட்டப்படுகிறது.
    4. ஆசிர் அதிகம் கிடைக்கப்படுகிறது.
    5. மன்றாட்டுக்கள் கேட்கப்படுகின்றன.
    6. தொழில்கள் வளர்ச்சி அடைகின்றன.