முன்னாள் மாணவர்கள், தூய பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.

முன்னாள் மாணவர் பேரவை
தூய பவுல் மேல்நிலைப் பள்ளி, சிங்கம்பாறை, முக்கூடல் அஞ்சல், திருநெல்வேலி மாவட்டம்.

 

 


12.2.2017
அனுப்புனர்
               முன்னாள் மாணவர்கள்,
               தூய பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.
பெறுநர்
               தாளாளர் அவர்கள்,
               தூய பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.

மதிப்பிற்குறிய ஐயா,
               பொருள் : முன்னாள் மாணவர் அமைப்பினை துவக்கி தரவும், அலுவலம் இயக்க
               ஆவணச் செய்யவும் வேண்டுதல் சார்பு.
               இறை இயேசுவின் அருட்கொடையாலும், தன்னலம் கருதாமல் மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட துறவற சபைகளின் அர்ப்பணிப்பினாலும் ஊர்மக்கள் ஒத்துழைப்பினாலும் எங்கள் ஊரில் நமது பள்ளி பல்கலைக் கழமானது அமைக்கப்பட்டு கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது.
               இதில் பட்டைத்தீட்டப்பட்ட மாணவர்கள் தங்களின் அறியாமை என்னும் இருள் நீக்கப்பட்டு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டு தற்போது உள்ளூர் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் வைரங்களாக மிளிரிக்கொண்டிருக்கிறார்கள்.
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
                கொள்வர் பயன்தெரி வார்.”
                என்ற ஐயன் வள்ளுவனின் கருத்திற்கேற்ப நாங்கள் பல ஆண்டுகளாக எங்கள் பள்ளியுடன் தொடர்புக் கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும், உதவிகளையும் பள்ளி நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் உதவியுடன் செய்து வருகின்றோம்.
               இப்பணிகளை மேம்படுத்தவும் மாணவர்களுக்கு மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் எங்கள் பணிகளை தொய்வின்றி செயல்படுத்தவும் கடந்த 80 ஆண்டுகளாக பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைக்கவும் உதவி செய்ய துடித்துக்கொண்டிருக்கிற நல் உள்ளங்களை இணைத்து உதவிகளை உடனடியாக பெற்று பள்ளிக்கு வழங்கவும் முன்னாள் மாணவர் பேரவை அமைக்க முன்னாள் மாணவர்களாகிய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை விரைவுப்படுத்த ஒரு வழிகாட்டும் குழுவினையும் அமைத்துள்ளோம். அலுவலகம் அமைக்கவும் உத்தேசித்துளோம்.
உத்தேச செயல்பாடுகள் : மாணவர்களை உளப்பூர்வமாக தேர்விற்கு தயார் படுத்துதல், வாழ்வியல் திறன் பயிற்சியளித்தல், மேற்படிப்பிற்கு வழிகாட்டுதல் & உதவிச் செய்தல், பள்ளி மேம்பாட்டிற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், பள்ளிக்கு முன் மாதிரியான நூலகமாக மேம்படுத்துதல், அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல், உள்ளூர் இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வழங்குதல் மற்றும் உள்ளூர் நலிவுற்றோர் அரசு சேவைகளை பெற வழிகாட்டுதல் போன்றவைகள் ஆகும்.
               எனவே எங்கள் பள்ளித்தாளாளராகிய தாங்கள் இம்மாபெறும் இயக்கத்தினை ஆரம்பித்து வைக்கவும் முன்னாள் மாணவர் பேரவையானது துடிப்புடன் இயங்க அலுவலகத்திற்கு அறை ஒன்றை ஒதுக்கித்தரும்படியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.  அதற்கான அனைத்து வித செலவினங்களையும் முன்னாள் மாணவர் பேரவையானது ஏற்றுக் கொள்ளும் என்பதனையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி!
தங்கள் உண்மையுள்ள,
முன்னாள் மாணவ தொடர்பாளர்கள் : 
திரு.பீட்டர், BSNL பொறியாளர் (ஓய்வு), சிங்கம்பாறை – 9487385890
திரு.ஜான்சன், மன நல ஆலோசகர், திலி மருத்துவக்கல்லூரி மருத்துவமணை – 9842189171
அருட்திரு. சகாய பவுல், குருவானவர், பாளை மறைமாவட்டம், –
திரு.சேவியர், தலைமை ஆசிரியர், சிங்கம்பாறை,
திரு.
மைக்கேல் சுரேஷ், தொழிலதிபர் (NRI), சிங்கம்பாறை,- 9095045020
திரு. பவுல் அந்தோணி அசிரியர், சிங்கம்பாறை
திரு. ததேயுஸ், மின்வாரிய உதவியாளர், சிங்கம்பாறை,
திரு
.செ.ஜெகன் பிரிட்டோ, வழக்கறிஞர், சிங்கம்பாறை
திரு. சகாயம், கட்டிட கலை நிபுனர், சிங்கம்பாறை
திரு. செபஸ்தியான் ஆசிரியர், சிங்கம்பாறை
திரு. அமர் ஆசிரியர், சிங்கம்பாறை
திருஜோ
.ஜூலியட் பெல்சன், திரு.சி.மைக்கேல் மொ;பின், திரு.சி.சகாய ரமேஷ், & திரு.க.மைக்கேல் ஜெபஸ்டின், திரு.சேசுராஜன் & திரு.அருள்மணி, திரு.ம.சேசு செல்வக்குமார், திரு.ஜா.சேவியர் செல்வக்குமார், திரு.ராபின், திரு.ஸ்.அந்தோணி ராஜேஷ், திரு.மி.பனிதாசன், திரு.கலைச்செல்வன் மற்றும் திரு.ஜோசப்.

Leave a Reply

Your email address will not be published.

Archives
categories