மறக்க முடியுமா இவரை…………

நாட்டுக்காக வாழ்ந்தவர் மத்தியில், வீட்டுக்காக வாழ்ந்தவர்கள் மத்தியில் ஒரு ஊருக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அற்பணித்த மாமனிதர். ஊரின் நலம் திருவிழா நிகழ்வு போன்றவற்றில் தனது பணியை திறம்பட செய்த சுமார் எண்பத்தைந்து வயதுபிச்சை தாத்தா இன்று காலமானார். நினைவு தெரிந்த நாள்களில் இருந்து எங்கள் ஊரில் எல்லோருக்கும் முகச்சவரம், முடிவெட்டுதல் போன்ற சேவையை செய்தவர். இதில் குறிப்பிடதக்க விடயம் என்னெவென்றால் இதற்க்கு ஊதியமாக பணமாக வழங்கபடமாட்டாது. இந்த சேவையை பெற்றவர்கள் பலர் இன்று அரசு ஊழியர்களாகவும்., வெளிநாடு மற்றும் உள்ளூரிலும் நல்ல நிலைமையில் இருக கிறார்கள். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நமது ஊர் பஞ்சாயத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனையாக சவுககடி தலையில் சாணிக்கலயம் ஏற்றுதல் போன்றவைகள் இவராலேயே செய்யப்படும். இப்படி பல விடயங்கள் கூறலாம். சிங்கம் பாறையில் எந்த வீட்டில் இறப்பு நடந்தாலும் “பிச்சையை கூப்பிடுங்கள்” என்ற குரல் ஒலிக்கும். இனி அந்த வார்த்தைகளுக்கு இடமில்லை……………

இவ்வாறாக சிங்கம்பாறை ஊரின் நலனுக்காவே வாழ்ந்த ஏழை பங்காளன் பிச்சை அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் . 

எழுத்தும் புகைப்படமும் : திரு.பிரின்ஸ் பிரபு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *