சிங்கம்பாறை அன்புச் சொந்தங்களுக்கு வணக்கம்!
நமது சென்னை சகோதர்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உண்ண உணவில்லாமல், ஒதுங்க இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இவர்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்த பட்சம் 10 நாட்கள் ஆகும் எனக் கூறுகிறார்கள்.
இச்சூழலில் சுமார் 30 லெட்சம் முதல் 50 லெட்சம் மக்களுக்கு தினமும், நமது தேசத்தின் அனைத்து நல் உள்ளங்களும் இணைந்து உணவளித்து வருகிறார்கள். இந்த மாபெரும் பசித்தீர்ப்பு பணியில் நமது ஊர் சார்பில் நாமும் பங்காற்றிட விரும்புகிறோம்.
எனவே நாளை ஞாயிற்றுக் கிழமை ஆதலால் இதற்கான முயற்சியை நாம் நமது ஊர் தலைவர்கள் மற்றும் பங்குத்தந்தையுடன் கலந்து ஆலோசித்து ஒவ்வொரு குடும்பத்தாரின் பங்களிப்புடன் இச்சூழலில் நாமும் உதவலாம். நமது பங்குத்தந்தை அருட்திரு.செயபாலன் அவர்கள் இதனை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்றுள்ளார்கள். சிங்கம்பாறை இளைஞர் இயக்கம் மற்றும் விண்செண்ட் தே பவுல் சபையினை களப்பணி மேற்கொள்ள இருக்கிறார்கள்.
வேண்டுகோள்கள்
- வீடு தோறும் பணம் சேகரித்து உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதார பொருட்கள் வாங்கலாம்.
- உணவாக தர விரும்புவர்கள் சப்பாத்தி செய்து மதியம் 2 மணிக்குள் ஆலயத்தில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். நீங்கள் தரும் சப்பாத்தியை நாம் சில்வர் கோட்டட் பார்சல் மூலம், 1 வேளைக்கு தகுந்தவாறு பொட்டலங்களாக அடைத்து ஒவ்வொரு பார்சலிலும் இரண்டு ருபாய் சாசே ஜாம் வைத்து பார்சலாக்குவோம்.
- இதனை இலவசமாக சென்னைக்கு கொண்டு சேர்க்க இன்பண்ட் ஜீசஸ் டிராவல்ஸ் தயாராக உள்ளனர்.
- பசியாற்றும் பொருட்கள் சென்னையை சென்றடைந்தவுடன் சத்தியம் தொலைக்கட்சி அன்பர்கள் தற்போது எந்த பகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதனை அனைத்து மீடியா மக்களுடன் தொடர்பில் உள்ளதால் ஒரு சிறு துளி அளவு கூட வீணாகாமல், மிகச் சரியாக, தேவைப்படும் மக்களுக்கு வழங்க தயாராக உள்ளனர்.
- இப்பணியினை நாம் நாளை காலை முதல் ஆரம்பித்து நாளை மாலையோ அல்லது நாளை மறுநாள் மாலையோ நாம் சென்னைக்கு அனுப்பலாம்.
- இன்று இரவு எங்கள் மருத்துவமணை மற்றும் பீஸ் குழுமம் பணியாளர்கள் சார்பில் சுமார் 60 ஆயிரம் ருபாய் மதிப்பில் உணவுப் பொருட்கள் அனுப்ப உள்ளோம்.
நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தான் சென்ற இடமெல்லாம் துயறுற்ற மக்களின் துயர் துடைத்தார். அவரது வழிநடக்கும் நாமும் இயேசுவின் அன்பை நமது உதவிகள் மூலம் வெளிப்படுத்துவோம்.
ஆண்டவரின் ஆசி அனைவரோடும் இருப்பதாக.