இரத்த தானம் செய்வோம் ! மனித நேயம் காப்போம் !!
யார் யார் இரத்த தானம் செய்யலாம்?
• நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.
• 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.
• குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.
• இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?
• ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.
இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
• 10 நிமிடம்.
இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?
• 20 நிமிடம்.
இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது?
• 350 மில்லி. நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. எடுக்கப்படுகிற இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.
இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்?
• 10 லிருந்து 21 நாட்களில்
இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?
• நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள்தான் உயி ரோடு இருக்கும். பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும்.
• நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல். ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லதுதானே!
இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?
• நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.
இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?
• நல்ல திரவ உணவை அருந்துங்கள். ஹெவி உணவு வேண்டாம்.
• ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.
• 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.
• இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணி நேரம் எடுக்க வேண்டாம்.
இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
• ஆத்ம திருப்தியும் மகிழ்வும்
• இலவச மருத்துவ பரிசோதனை
• இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு
• உடற்பருமனைக் குறைத்தல்
• புற்று நோய்த் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு
• இரத்த சுத்திகரிப்பு
இரத்ததானம் பெற / இரத்த தானம் செய்ய விரும்புவோர் பதிவு செய்ய அணுகவும் :
சிங்கம்பாறை நலச் சங்கம்,
சிங்கம்பாறை, திருநெல்வேலி மாவட்டம். 627 601
திரு.ஜோ.பெல்சன் தொ.பே. : 9486428464