Web Admin St.Pauls Shrine

Web Admin St.Pauls Shrine

SWA 1st Planning Meeting

சிங்கம்பாறை நலச் சங்கம் – Singamparai Welfare Association

திட்டமிடல் கூட்டம்

நாள் : 29.01.2017               

இடம் : புனித சின்னப்பர் மேல்நிலைப் பள்ளி, சிங்கம்பாறை.

 • சிங்கம்பாறை ஊர் நலனில் அக்கறை கொண்டு ஊர் முன்னேற வேண்டும், ஊர் மக்கள் நம்மால் பயன் பெறவேண்டும் என்ற உயாpய நோக்கோடு வாழும் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட ஏதுவாக சிங்கம்பாறை நலச் சங்கம் என்ற அமைப்பானது01.2017 அன்று உதயமானது.
 • அதன் இரண்டாவது கூட்டமானது01.2017 ஞாயிறு அன்று மதியம் 1.30 மணி முதல் 2.45 மணி வரை புனித பவுல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
 • 20 போ; கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அமைப்பின் தேவை, நோக்கம், செயல்பாடுகள், நீண்ட காலத்திற்கு அமைப்பை கொண்டு செல்வதற்கான வழிமுறைகள், நிர்வாகக்குழு உறுப்பினா;கள் தோ;வு செய்யப்படும் விதம், அவா;கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் மற்றும் அவா;களின் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

செயல்பாடுகள்

அமைப்பினால் செய்யப்படக்கூடிய 14 வகையான செயல்பாடுகள் எவை என்பது பற்றி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. அவையாவன

 • முன்னாள் மாணவா; அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல்
 • ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்வி வளா;ச்சிக்கு உதவுதல்
 • மாணவர்கள், இளையோர்கள், பெண்கள் மற்றும் இதர குழுக்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்குதல்.
 • இளைஞர் குழுவினை ஏற்படுத்தி வழிகாட்டுதல்
 • உயா; கல்வி, தொழில் மற்றும் வேலைக்கு வழிகாட்டுதல்.
 • இரத்த தானம் குழுவினை செம்மைப்படுத்தி செயல்படுத்துதல்.
 • அனைத்து வகையான மருத்துவ முகாம்களையும் தேவைபடும் நேரத்தில் அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்போடு நடத்துதல்.
 • காமராசா; பிறந்த நாளை சிறப்பாக பயனுள்ள வகையில் கொண்டாடுதல்.
 • முதலுதவி மையம் ஒன்றை உருவாக்குதல்.
 • பொது நூலகம் ஒன்றை உருவாக்கி அதனை பராமரித்தல்.
 • இயற்கை வேளாண்மைக் குறித்த விழிப்புணர்வினை விவசாயிகளுக்கும் இளைய தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஏற்படுத்துதல்.
 • சமூகம், காலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காத்தல்.
 • அரசு நலத்திட்ட உதவிகளை பெற தகுதியுள்ளவர்களுக்கு வழிகாட்டுதல்.
 • ஆம்புலன்ஸ் சேவை

அலுவலகம்

அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வர செயல் அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அலுவலகமானது கோவில் அல்லது பள்ளி வளாகத்தில் இருந்தால் நலமாக இருக்கும் என்பது முடிவு செய்யப்பட்டு அதற்கான அறையினை நமது பள்ளியிலிருந்து முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் பெறுவது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

பணியாளர்

அலுவலகத்திற்கு முழுநேரப்பணியாளராக ஒருவரை பணி ஒப்பந்த அடிப்படையில் அமா;த்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஒப்பந்த காலம் ஏப்ரல் 2ம் தேதி முதல் முதல் மார்ச் 31 வரை 1 வருடம் எனவும் தீர்மாணிக்கப்பட்டது. 1 ஆண்டு காலம் முடிந்ததும் அதுவரை வேலைப்பார்த்த பணியாளரின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக நிர்வாக குழு முடிவு செய்தால் மீண்டும் 1 ஆண்டு காலத்திற்கு புதிய ஒப்பந்தம் போடப்படும். இவ்வாறு  ஒவ்வொறு ஆண்டும் கடைப் பிடிக்கப்படும். (உறுதிச் செய்யப்படவில்லை).

அலுவலகப் பணியாளருக்கான பொறுப்புகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது, அவருக்கான ஊதியம் மாதம் ரூ.4000 என்பது நிர்ணயிக்கப்பட்டது.

மூலதனம் மற்றும் பொருளாதார சேவைகள்

அமைப்பிற்காக தேவைப்படும் பொருளாதாரத்தேவைகள் நன்கொடைகள் மூலம் பெறலாம் என தீர்மானிக்கப்பட்து.

அமைப்பு பதிவு

வரும் புதன்கிழமை (1.2.2017) அன்று அமைப்பை அரசாங்கத்தில் பதிவு செய்ய ஆடிட்டரை சந்தித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.


 

அமைப்பின் கூட்டம்

நிர்வாக குழுக் கூட்டம் மாதம் ஒருமுறை நடத்தப்படவேண்டும் என்ற கருத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனா. அலுவலகம் திறக்கும் வரை 15 தினங்களுக்கு ஒருமுறை கூடுவது என்பது தீர்மாணிக்கப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி 26 ம் நாள் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

உறுப்பினா; தகுதி

 • சிங்கம்பாறை ஊர் வரி கொடுப்பவர்கள் மட்டுமே இதில் உறுப்பினராக இணைய முடியும்.
 • வரி கொடுக்காமல் நன்கொடை அளிப்பவர்கள் இதில் உறுப்பினராக முடியாது.
 • உறுப்பினர் கட்டணம் கிடையாது

செயற்குழு உறுப்பினருக்கான தகுதி மற்றும் தேர்வு முறை

 1. செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 1 ஆண்டு ஆகும்.
 2. செயற்குழு உறுப்பினர்களின் பதவிகள் பின்வருவன. தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 10 நபர்கள் (உறுதிச் செய்யப்படவில்லை).
 3. 1 ஆண்டு முடிந்ததும் புதிய செயற்குழு உறுப்பினர்களுக்காண விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.
 4. தலைவர் பதவி : குறைந்தபட்ச கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்ட படிப்பு. மேலும் செயற்குழுவில் எப்போதாவது 1 ஆண்டு உறுப்பினராக இருந்து செயல் பட்டிருக்க வேண்டும்.
 5. துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் : குறைந்த பட்ச கல்வித்தகுதி பனிரெண்டாம் வகுப்பு மற்றும் செயற்குழுவில் எப்போதாவது 1 ஆண்டு உறுப்பினராக இருந்து செயல் பட்டிருக்க வேண்டும்.
 6. இதர செயற்குழு உறுப்பினர்கள் : குறைந்த பட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு. ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள் மற்றும் புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் செயற்குழு உறுப்பினர் ஆவதற்கு தகுதியுடையோர் ஆவர்.
 7. ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே பதவிக்கு விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 8. ஒரு நபர் ஒரு பதவியில் தொடர்ந்து 1 ஆண்டுக்கு மேல் இருக்க முடியாது
 9. ஒவ்வொரு ஆண்டும் புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஜனவரி மாதம் 26 ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் வைத்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
 10. மேற்கண்ட விதிமுறைகள் 01.2018 முதல் நடைமுறைக்கு வரும்.

முதல் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்

இறுதியாக நிர்வாகக்குழு  உறுப்பினா;கள் தோ;வுசெய்யப்பட்டு பணிகள் பகிர்ந்தளிக்கப் பட்டு துவக்கப்பட்டன. முதல் தேர்வு என்பதாலும், 01.01.2018 க்கு முன் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பாகவும் இருப்பதால் முன் அனுபவம் மற்றும் ஈடுபாட்டிணைக் கருத்தில் கொண்டு கீழ்கண்ட உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்                               : திரு.ஜோ.அந்தோணி அலோசியஸ் ஜான்சன்      

துணைத்தலைவர்                : திரு.நீ.மைக்கேல் சுரேஸ்

செயலாளர்                           : திரு.ச.ஜஸ்டின் திரவியம்       

துணைச் செயலாளர்           :திரு.செ.சகாய அமிர்தராஜ்     

பொருளாளர்                                   : திரு.ச.பீட்டா; துரைராஜ்      

ஒருங்கிணைப்பாளா;கள்

தகவல் தொடர்பு &
பயிற்சி வகுப்புகள்                        : திரு.அ.மிக்கேல் அந்தோணி & திரு.ச.செபஸ்தியான்     

இரத்ததான குழு                  : திருஜோ.ஜூலியட் பெல்சன் 

இளையோர் குழு                : திரு.சி.மைக்கேல் மொ;பின்  

கல்வி & தொழில் வழிகாட்டல் : திரு.சி.சகாய ரமேஷ், & திரு.க.மைக்கேல் ஜெபஸ்டின்  

இணையதளம் பராமரிப்பு : திரு.சேசுராஜன் & திரு.அருள்மணி   

அலுவலக மேலாண்மை  : திரு.ம.சேசு செல்வக்குமார்    

வழக்கறிஞர்                         : திரு.செ.ஜெகன் பிரிட்டோ

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு :
திரு.எஸ்.சேவியர், அருட்தந்தை.சி.சகாய பவுல், திரு.லூ.பவுல் அந்தோணிராஜ், ஜா.சேவியர் செல்வக்குமார், திரு.ராபின், திரு.ஸ்.அந்தோணி ராஜேஷ், திரு.மி.பனிதாசன், திரு.கலைச்செல்வன் மற்றும் திரு.ஜோசப்.

 

 

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு :

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு உறுப்பினர்கள் குழுவாகவோ அல்லது தனி நபராகவோ அனைத்து விதமான செயல்பாடுகளையும் எப்பொதும் கண்காணிக்க மற்றும் மதிப்பீடு செய்யும் தகுதியுடையோர் ஆவர்.. மேலும் நல்ல முறையில் செயல் படும் திட்டங்களை மேம்படுத்தவும், தேக்க நிலையில் உள்ள செயல்பாடுகளை  செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் தேவையான ஆலோசனைகளை வழங்கும்.

கணக்கு

கணக்குகளை பராமரிக்க வங்கி கணக்கு ஒன்று தேசிய வங்கியில் துவக்குவது என்பது முடிவு செய்யப்பட்டது. இரு நபர்கள் இணைந்து வங்கி கணக்கிணை இயக்குவது என்பதும் தீர்மானம் செய்யப்பட்டது.

உத்தேச செலவுகள் (முதல் 1 ஆண்டுக்கு மட்டும்)

வ. எண் அடங்கல் தொகை
1 பணியாளர் ஊதியம் (ரூ.4000 / மாதம் x 12) ரூ.48000
2 பணியாளர் பயணச் செலவு ரூ.12000
3 கைப்பேசி (அலுவலக உபயோகம்) ரூ.1500
4 கைப்பேசி கட்டணம் ரூ.2000
5 பதிவேடுகள் (அலுவலகம்) ரூ.2000
6 பீரோ (அலுவலகம்) ரூ.5000
7 மேஜை – 2 (அலுவலகம்) ரூ.7000
8 பிளாஸ்டிக் இருக்கைகள் 10 (அலுவலகம்) ரூ.5000
9 மின்விசிறி (அலுவலகம்) ரூ.1500
10 அரசு பதிவுக் கட்டணம் ரூ.4000
11 வங்கி கணக்கு துவங்க ரூ.1000
12 கணிணி மற்றும் பிரிண்டர் (அலுவலகம்) ரூ.20000
13 இணைய சேவை இணைப்பு (அலுவலகம்) ரூ.3000
14 இதரச் செலவுகள் ரூ.30000
  மொத்தம் ரூ 1,25,000 

 

ஆரம்பச் செலவுகளுக்காக உடனடியாக ரூ 26 ஆயிரம் திரட்டப்பட்டது.

தகவல் தொடர்பு & சமூக வலைதளம்

ஏற்கனவே நமது ஊர் அன்பர்களால் உருவாக்கி பராமரிக்கப்படும் வலைத்தளம், முக நூல் பக்கம், முகநூல் குழு மற்றும் ப்ளாக் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்படுள்ளது. தற்போது பராமரிப்பவர்கள் அதனை நலச்சங்கத்திடம் ஒப்படைக்க இசைந்துள்ளனர். தொடர்ந்து இதனை இணைய தள பராமரிப்பு குழுவினர் பராமரிப்பர்.

ஆலோசனைகள்

நமது மூத்த உறுப்பினர்  பொருளாளர்.திரு.ச.பீட்டா; துரைராஜ் அவர்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட நல் ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் திருவாளர்.சேவியர் அவர்கள் நல்லுரைகளோடு நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

 

குறிப்பு :

 1. ஏதேனும் திருத்தங்கள் மற்றும் விடுபட்டவைகள் இருந்தால் (உறுப்பினர்கள் பெயர்கள் உட்பட) திரு.செபாஸ்டியன் அல்லது திரு.அமர் அவர்களிடம் தெரிவிக்கவும்.
 2. சிங்கம்பாறையைச் சேர்ந்த அனைவரையும் இதில் உறுப்பினராக இணைப்பதே இதன் நோக்கமாகும். எனவே இதில் இணைய விரும்பினால் உடனடியாக உறுப்பினர் படிவத்தை நிரப்பி கையொப்பமிட்டு நிர்வாகிகளிடம் கொடுக்கவும்.
 3. வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் அன்பர்களுக்காக வடிவம் ஆன்லைன் விண்ணப்பம் இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும். இதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
 4. வாட்சப் குழு
  • நமக்காக Singamprai Welfare என்ற பெயரில் வாட்சப் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர் படிவம் நிரப்பி கையொப்பம் போட்டு கொடுத்தவுடன் உங்களது பெயர் சேர்க்கப்படும்.
  • இந்த வாட்சப் குழுவில் எந்த ஒரு பார்வட் செய்தியையும் அனுப்பகூடாது என்று ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டு அனுப்ப தடை செய்யப்பட்டுள்ளது.

 

 

Invitation : New School Building Opening

16th January 2015

FOUNDATION STONE LAID and Building Progress

An Appeal

New building opening is on 15th January, 2015 at 4.00 p.m. 

We need Rs. 6 Lacks (Total Budget Rs.1 Crore)

to complete the work. Kindly Contact me to complete the God’s Plan.

Cell : 09488071495

Assurance of my prayers, I thank you.

112

 

Rev. Fr. Jeyabalan, A.
Parish Priest.

View School Building Photos

 

Cover-a

2015-Invitation

Upto January, 2014, Donation received Rs. 24,30,000

Considering our need, may we request you to help us as soon as possible. As we started the work, kindly be generous towards our project, so that we will be able to complete the work in the month of April, 2014. Your Positive response will surely encourage us.

Assurance of my prayers, I thank you.

Rev. Fr. Jeyabalan, A.
Parish Priest.

December 2013

AN APPEAL FROM PARISH PRIEST112

St. Paul’s Higher Secondary School – Singamparai

Vision : “Remove the inner darkness with the light of knowledge”
History:


Origin

Year

Number of Students
Primary School 1928 23
Middle School 1953 120
High School 1997 510
Higher Secondary School 1999 630
2013 720

Number of Beneficiaries increasing every year

Need for the Project:

Rooms Expected Actual Need
Class 20 4 + Hall(5) 11
Office 1 1
Computer 1 1
Lab 2 1 1
Library 1 1
Staff 2 1
Games 1 2
Total 28 13 15

Singamparai is Catholic village consists of 1000 families. St. Paul’s Church was built Eighty years ago with full manual support of the people and the land for the school was also donated by them. In the month of January, 2013 School Education Committee meeting was held to discuss about the development of the School in which the decision was taken to build new additional class rooms for which the proposal was given to each family that they could contribute their one month income in ten installments. This was wholeheartedly accepted by the people and even they started to give the money. But it may not help fully to achieve our task.
Implementation:

Estimation                            – Rs. 85,00,000

Local Contribution              – Rs. 35,00,000

People Number + Contribution Total Amount
Coolie 200 x 5000 10,00,000
Mason 100 x 6000 6,00,000
Beedi Rolling 30 x 2000 6,00,000
Teachers 20 x 25,000 5,00,000
Cotractors 10 x 40,000 4,00,000
Govt. Empolyees 40 x 5,000 2,00,000
School Students 800 x 100 80,000
Auto Drivers 20 x 4000 80,000
Other Students 40 x 1000 40,000
All Total 35,00,000

Considering our need, may we request you to help us as soon as possible. As we started the work, kindly be generous towards our project, so that we will be able to complete the work in the month of April, 2014. Your Positive response will surely encourage us.

Assurance of my prayers, I thank you.

Rev. Fr. Jeyabalan, A.
Parish Priest.

Invitation : Festival 2015

An Appeal

New building opening is on 15th January, 2015 at 4.00 p.m. We need Rs. 6 Lacks  (Total Budget Rs.1 Crore) to complete the work. Kindly Contact me to complete the God’s Plan. Cell : 09488071495

 

Also I hearty invite to all to participate in the Opening Ceremony.  View Invitation

Assurance of my prayers, I thank you.

112

 

Rev. Fr. Jeyabalan, A. Parish Priest.
Read More

An Invitation

Our Church Festival will start on 16.01.2014. All are do come and participate and get Blessing from Our Lord Jesus Christ.

 

பழைய கத்தோலிக்க தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் – Old christian Songs Book

வருகைப் பாடல்கள்
1.   சீர் இயேசு நாதனுக்கு

ஜெய மங்களம் அதி … (2)

திரு ஏக நாதனுக்கு

சுப மங்களம்!

 

பார் ஏரு மீதனுக்கு

பரம பொர்பாதனுக்கு … (2)

மேர் ஏரு போதனுக்கு

நித்திய சங்கீதனுக்கு!

சீர் இயேசு..

 

ஆதி சர்வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்

அகில பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் .. (2)

நீதி பரம்பாளனுக்கு நித்திய குணாலனுக்கு

போதும் மனு பூலனுக்குஉயர் மனுவேலனுக்கு!

சீர் இயேசு..

 

வானாபிமானனுக்கு, வானனுக்கு மங்களம்

வளர் கலை தியாயனுக்கு நியானனுக்கு மங்களம்

தானல் தேயனுக்கு கன்னி மரி சேயனுக்கு

ஓனார் சகாயனுக்கு உரு பெத்தலேயனுக்கு

சீர் இயேசு..

 

2.   வரம் கேட்டு வருகின்றேன் இறைவா – என்

குரல் கேட்டு அருளாயோ தலைவா

 

பகை சூழும் இதயத்தின் சுவரை யெல்லாம் – என்

பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன்

புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் – உன்

பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

 

நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் – இனி

நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன்

பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் – என்

பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்

 

3.   அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே   

அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே _ 2

 

ஒரு மனத் தோராய் அனைவரும் வாழ்வோம்

அருள் ஒளி வீசும் ஒருவழி போவோம்

பிரிவினை மாய்த்து திருமறை காப்போம்  _2

இருமையில் இறைவன் திருவுளம் காண்போம்

__ அன்பினில்

 

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி

பெருமை செய்தாரே புனித பேரன்பை

பிறந்த நம்வாழ்வின் பயன்பெற வேண்டும் –2

பிறரையும் நம்மைப்போல் நினைத்திட வேண்டும்

__ அன்பினில்

 

4.   நாம் மகிழ்வோம் – தினம்

நாம் வளர்வோம்

திருப்பலி வழங்கும் வரம் – பல பெற்றிட

நாம் மகிழ்வோம்.

 

தூயவன் அருளை துனையாய் கொண்டு

துயரின் பிடியில் திடமாய் அகன்று

இறைவனில் இணைந்து …. இன்பத்தில் நிலைத்து

உள்ளம் மகிழ்வோம் உவகையில் நிறைவோம்.

 

இறைவனின் இதயம் இனிதே திறக்க

அவர்தம் கரங்கள் அன்பாய் அழைக்க

பலியினில் இணைந்து … பலன்பல பெறுவோம்

இதயங்கள் இணைப்போம் இறைவனில் உயிர்ப்போம்.

 

5.   புது வானம் ஒன்றும் புது வையம் ஒன்றும் – இந்தப்

பூமியில் மலர்ந்திடக் கண்டேன்

புது வாழ்வு ஒன்றும் புது ஆட்சி ஒன்றும் – இந்தப்

பொழுதினில் புலர்ந்திடக் கண்டேன்

 

எங்கும் இளமை இளமை இளமை

எங்கும் வளமை வளமை வளமை

எங்கும் புதுமை எங்கும் இனிமை

 

போவதோ பெரும் பயணங்கள் – நம்

பாதையில் பல தீபங்கள்

நாவினில் இன்பக்கீதங்கள் – நம்

நெஞ்சினில் நன்றி உணர்வுகள்

 

கண்டதோ என்றும் நன்மைகள் – நாம்

கூறுவோம் இன்று நன்றிகள்

வென்றதோ பல உள்ளங்கள் – தெய்வம்

வாழ்ந்திடும் அன்பு உள்ளங்கள்

 

6.   மகிழ்வினை விதைத்திட

மனங்களை உயர்த்திட

உறவினராய் வருவோம்

மன்னவன் இயேசுவின் பொன்வழி நடந்திட

அன்பினில் வாழ்ந்திடுவோம்

இறை அன்பினில் வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை

 

இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய்

பூமியில் ஒன்றுமில்லை — 2

இறைவழி வாழ்ந்திடும் முறை இது தெரிந்தால்
பகைமையில் தொல்லை இல்லை – 2

பிரித்திடும் சுயநல வேர்களை அறுப்போம்

புதுவழி படைத்திடுவோம் — 2

நாம் இறைவழி வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை

 

மனிதனின் உரிமைகள் மறுத்திடும் சமூகம்

இறைவனின் குடும்பமில்லை – 2

எளியவர் வாழ்வுகள் அழிவது தொடர்ந்தால்

இறைவனும் உயிர்ப்பதில்லை — 2

அனைவரும் வாழ்ந்திட நம்மையே அளிப்போம்

புதுவழி படைத்திடுவோம் — 2

நாம் இறைவழி  வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை

 

7.   வாருங்கள் அன்பு மாந்தரே

பலி செலுத்த வாருங்கள்

பண் இசைத்துப் பாடுங்கள்

வாருங்கள் அன்பு மாந்தரே

 

இயேசு என்னும் ஆதவன் கதிர் விரிக்கக் காணுங்கள்

இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள்

ஆசை என்ற இருள் மறைந்து அன்பு உதயமாகவே

அருள் வளங்கள் இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள்

 

8.   வாருங்கள் நம் இறைவன் இல்லம் வாருங்கள்

கூடுங்கள் நல் சமூகமாக கூடுங்கள்

நம் மீட்பராய் நல் நேசராய் (2)

உறவுகொள்ள வாருங்கள், பலிபொருளாய் மாறுங்கள்

வாருங்கள் இறைவன் இல்லம் வாருங்கள்

கூடுங்கள் நல் சமூகமாக கூடுங்கள்

 

எங்கும் பொங்கும் அவரின் அன்பு இல்லம் சேர வாருங்கள்

தாங்கும் கரங்கள் நம்மை என்றும் இறுக பற்ற வாருங்கள்

அழைக்கும் தேவன் அவன் குரலினை கேளுங்கள்

அமைதியின் வாழ்வினையே அழைத்திட வாருங்கள்

நன்மை கோரி நலம் செழிக்க நாடி வாருங்கள்

நலன்கள் யாவும் தந்தவரை புகழ்ந்து பாடுங்கள் (2)

 

உண்மை அன்பு உழைப்பு நேர்மை ஓங்கி செழிக்க வாருங்கள்

கருணை பொங்கும் அவரின் ஆட்சி நிலைத்து நிற்க வாருங்கள்

புனிதம் மலர்ந்திடவே புரட்சி குரல் கொடுங்கள்

புதியதோர் சமுதாயம் படைத்திட வாருங்கள்

புவியில் இறைவன் ஆட்சி மலர ஓடி வாருங்கள்

புதுமை செய்யும் இறைவனையே பாடி வாருங்கள் (2)

 

9.   இறைவனைப் புகழ்வோம் வாருங்களே

இணையில்லா அன்பில் இணைந்திடுவோம்

இந்நாளில் நம்மை அழைக்கின்றார்

எல்லோரும் ஒன்றாய் கூடிடுவோம்

 

இருகரம் நீட்டி அழைக்கின்றார்

இதயத்தை திறந்து அழைக்கின்றார்

உதயத்தை தேடி அலைவோரின்

உள்ளத்தை தேடி அழைக்கின்றார்

புதிய வாழ்வில் புனிதம் பெறுவோம்

புனிதன் இயேசு கொடுக்கின்றார்

 

10. வாருங்கள் நம் இறைவன் இல்லம் வாருங்கள்

கூடுங்கள் நல் சமூகமாக கூடுங்கள்

நம் மீட்பராய் நல் நேசராய் (2)

உறவுகொள்ள வாருங்கள், பலிபொருளாய் மாறுங்கள்

வாருங்கள் இறைவன் இல்லம் வாருங்கள்

கூடுங்கள் நல் சமூகமாக கூடுங்கள்

 

எங்கும் பொங்கும் அவரின் அன்பு இல்லம் சேர வாருங்கள்

தாங்கும் கரங்கள் நம்மை என்றும் இறுக பற்ற வாருங்கள்

அழைக்கும் தேவன் அவன் குரலினை கேளுங்கள்

அமைதியின் வாழ்வினையே அழைத்திட வாருங்கள்

நன்மை கோரி நலம் செழிக்க நாடி வாருங்கள்

நலன்கள் யாவும் தந்தவரை புகழ்ந்து பாடுங்கள் (2)

 

உண்மை அன்பு உழைப்பு நேர்மை ஓங்கி செழிக்க வாருங்கள்

கருணை பொங்கும் அவரின் ஆட்சி நிலைத்து நிற்க வாருங்கள்

புனிதம் மலர்ந்திடவே புரட்சி குரல் கொடுங்கள்

புதியதோர் சமுதாயம் படைத்திட வாருங்கள்

புவியில் இறைவன் ஆட்சி மலர ஓடி வாருங்கள்

புதுமை செய்யும் இறைவனையே பாடி வாருங்கள் (2)

 

11. தமிழால் உன் புகழ் பாடி

தேவா நான் தினம் வாழ

வருவாயே திருநாயகா – வரம்

தருவாயே உருவானவா

 

எனை ஆழும் துன்பங்கள் கணையாக வரும்போது

துணையாக எனையாள்பவா

மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு

குணமாக்க வருவாயப்பா – எனை

உனதாக்கி அருள்வாயப்பா

 

உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்

வழிகாட்டும் ஒளியானவா

நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே

நாதா உன் புகைழ் பாடுவேன் – எனை

நாளெல்லாம் நீ ஆளுவாய்

 

12. தலைவா உனை வணங்க – என்

தலைமேல் கரம் குவித்தேன்

வரமே உனைக் கேட்க – நான்

சிரமே தாள் பணிந்தேன்.

 

அகல்போல் எரியும் அன்பு – அது

பகல்போல் மணம் பரவும்

நிலையாய் உனை நினைத்தால் – நான்

மலையாய் உயர்வடைவேன் – 2

 

நீர்போல் தூய்மையையும் – என்

நினைவில் ஓடச் செய்யும்

சேற்றினில் நான் விழுந்தால் – என்னைச்

சீக்கிரம் தூக்கிவிடும் – 2.

 

13. சங்கமம் இனிய சங்கமம்

ஆண்டவன் நம்மில் சங்கமம்

சங்கமம் இனிய சங்கமம்

நாம் அன்புடன் வாழ்ந்தால் சங்கமம் ….2

அன்புடன் நட்புடன் அனைவரும் வாழ்ந்தால்

ஆண்டவன் நம்மில் சங்கமம்

உண்மையும் அறமும் உறவினில் மலர்ந்தால்

உலகத்தில் இறைவன் சங்கமம் …..சங்கமம்

 

ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்தால்

சங்கமம் இனிய சங்கமம்

ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ்ந்தால்

சங்கமம் இனிய சங்கமம் ….2

உடமைகளெல்லாம் பகிர்ந்து வாழ்ந்தால்

சங்கமம் இனிய சங்கமம்

உளமதில் அன்பை உரமாய் கொண்டால்

சங்கமம் இனிய சங்கமம்

உலகத்தில் அமையும் இறைவனின் அரசு

சங்கமம் இனிய சங்கமம் …..சங்கமம்

 

உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதங்கள் அழித்தால்

சங்கமம் இனிய சங்கமம்

உறவினில் பகைமை இல்லையென்றால்

சங்கமம் இனிய சங்கமம் — 2

இனவெறி அழித்து இன்பமாய் வாழ்ந்தால்

சங்கமம் இனிய சங்கமம்

இறைவார்த்தைகளே வழித்துணையானால்

சங்கமம் இனிய சங்கமம்

இகமதில் அமையும் இறைவனின் அரசு

சங்கமம் இனிய சங்கமம் ….சங்கமம்

 

14. நிழல் தேடி அலைகின்ற நெஞ்சங்களே

இளைப்பாற இடமுண்டு வாருங்களே அது அன்பாலயம் நல்ல பண்பாலயம்

நம் சரணாலயம் அது தேவாலயம் 2

 

பூப்போன்ற ஒரு வாசம் விசுவாசமே

பொன் போன்ற மனம் தன்னில் உருவாகுமே 2

விசுவாசமாய் நாம் வேண்டினால்

வழிகளைத் தருபவர் நம் யேசுவே

 

வாழ்வென்று துணையென்று நாம் நாடினோம்

வாழ்வாகி வழியாகி எமைத் தேற்றினாய் 2

நாம் வாழவும் நாம் செல்லவும்

வழிகளைத் தருபவர் நம் யேசுவே

 

15. இறைவனுன் புகழ்பாட – இங்கே

இதயங்கள் பல கோடி

துறையெல்லாம் கடந்தவனே – உன்

துணையொன்றே நாம் தேடி

 

மறைபொருள் ஆனவனே – உன்னை

மனங்களில் சிறை வைத்தோம்

குறையுள்ள கோயிலிலே – உன்னைக்

கொண்டு நாம் குடி வைத்தோம்

 

அன்பு உன் பேர் அறிவோம் – தூய

அறிவென்றும் நாம் தெரிவோம்

இன்பம் நீ எனத் தெளிவோம் – நல்ல

இரக்கம் நீ என மொழிவோம்

 

16. உன் இதய வாசல் தேடி வருகின்றேன்

என் இதயம் உறைய என்னில் வாருமே

நீ இல்லையேல் நான் இல்லையேல் – 2

நான் வாழ என்னுள்ளம் வா

 

காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்

காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்

உன்னன்பு என்றென்றும் மாறாதையா

உன் நெஞ்சில் நான் என்றும் வாழ்வேனயா

 

குயில் பாட மறக்கலாம் மயிலாட மறக்கலாம்

பயமுடனே நண்பரும் என்னைவிட்டு பிரியலாம்

உன்னன்பு என்றென்றும் மாறாதையா

உன் நெஞ்கில் நான் என்றும் வாழ்வேனயா

 

 

தியானப் பாடல்கள்

17. உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை

அரவணைத்திடு இறைவா

அந்த இருளிலும் ஒளி சுடரும் – வெண்

தணலிலும் மனம் குளிரும் – உந்தன்

கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை

காத்திடு என் இறைவா

 

பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்

மன்னிப்பில் பனிபோல் கரையும்

கருணையின் மழையில் நனைந்தால் உன்

ஆலயம் புனிதம் அருளும்

 

வலையினில் விழுகின்ற பறவை – அன்று

இழந்தது அழகிய சிறகை

வானதன் அருள்மழை பொழிந்தே நீ

வளர்த்திடு அன்பதன் உறவை

 

18. நீ எந்தன் பாறை என் அரணான யேசுவே

நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே

அணையாத தீபமே இயேசுவே இயேசுவே-2

 

ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ

உன்துணையின் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ

தடைகோடி வரலாம் உளம் தவித்தோடி விடலாம் -2

ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எது

போனாலும் உனில் தஞ்சம் உண்டு

இயேசுவே இயேசுவே – 2

 

இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ

முடிவாக வெல்வதும் நன்மையன்றோ

தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் – 2

என்றென்றும் உன் ஆசி கொண்டு – வரும்

நல்வாழ்வை கண்முன்னே கண்டு

இயேசுவே இயேசுவே -2

 

19. என் ஆன்மா இறைவனையே

ஏற்றி போற்றி மகிழ்கின்றது

எம் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது

 

1. தாழ்நிலை இருந்த தம் அடியவரைத்

தயையுடன் கண்கள் நோக்கினார்            – 2

இந்நாள் முதலாம் தலைமுறைகள்

எனைப் பேருடையாள் என்றிடுமே

— என் ஆன்மா

2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே

எனக்கரும் செயல்பல புரிந்துள்ளார்        – 2

அவர்தம் பெயரும் புனிதமாகும்

அவரில் அஞ்சுவோர்க்கு இரக்கமாகும்

— என் ஆன்மா

 

20. இறைவன் எனது மீட்பராம் – அவரே

எனக்கு ஒளியானார்

அவரைக் கோண்டு நான் வாழ

எவரைக் கண்டு பயமில்லை….

 

வாழ்வின் இறைவன் துணையானார்

வாழும் எமக்கு உயிரானார்

நீயோர் என்னை வதைத்தாலும்

தீமை அணுக விடமாட்டேன் – 2

 

தீயோர் படைபோல் சூழ்ந்தாலும்

தீராப் பகையை கொண்டாலும்

தேவர் அவரைத் திடமாக

தேடும் எனக்கு குறையேது – 2

 

ஒன்றே இறைவன் வேண்டுகிறேன்

ஒன்றே அடியேன் தருகின்றேன்

தேவன் உனது திருமுன்னே

நாளும் வாழ அருள்வாயே – 2

 

21. இயேசுவே உன்னை என் நெஞ்சினில் தாங்கி

எந்நாளும் பிரியாமல் நான் வாழ வேண்டும்-2

இதயத்தில் வாழும் தெய்வம் நீ இருக்க

இமயம் போன்ற துன்பம் இல்லாது மறையும்

இனி எந்தன் வாழ்வில் இன்பமே நிறையும்

 

கண்களில் உன்னை சிறை வைத்தால்  என்றும்

கரைந்திடும் விழிநீரில் கரைந்திடுவாய் – என்று -2

உள்ளத்தில் உன்னையே செதுக்கி வைத்தேன்-2

உயிர் உள்ளவரை உன்னுடன் வாழ்வதற்கே—இயேசுவே

 

பாதத்தில் அமர்ந்து உன் முகம் பார்த்து உந்தன்

உயிருள்ள வார்த்தையை கேட்டிடுவேன்-2

மார்பினில் சாய்ந்து நான் அன்போடு-2

என் இன்ப துன்பங்கள் பகிர்ந்திடுவேன்—இயேசுவே

 

22. இயேசுவே உந்தன் வார்த்தையால்

வாழ்வு வளம் பெறுமே

நாளுமே அன்புப் பாதையில்

கால்கள் நடந்திடுமே

தேவனே உந்தன் பார்வையால் – என்

உள்ளம் மலர்ந்திடுமே

இயேசுவே என் தெய்வமே – உன்

வார்த்தை ஒளிர்ந்திடுமே

 

தீமைகள் தகர்ந்திழிந்திடும் – உன்

வார்த்தை வலிமையிலே

பகைமையும் சுய நலன்களும் – இங்கு

வீழ்ந்து ஒழிந்திடுமே

நீதியும் நல் நேர்மையும்

பொங்கி நிறைந்திடுமே

இயேசுவே என் தெய்வமே – உன்

வார்த்தை ஒளிர்ந்திடுமே

 

23. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்

மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்

இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்

இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்

நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்

நிரந்தரம்…நிரந்தரம்…நீயேநிரந்தரம்-2

 

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்

தாயும் தந்தயும் எமக்கு நீயே நிரந்தரம்

தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்

நான்சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்-2

நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்-2

 

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்

பதவியும் புகளும் தருவது இல்லை நிரந்தரம்

நிலைவாழ்வு என்றும் நிஜமான நீயே நிரந்தரம்

அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்-2

நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்-2

 

24. பாடுங்கள் ஆண்டவருக்கு

புதியதோர் பாடல் பாடுங்கள்

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா

 

ஆண்டவர் தம் திருத் தலத்தில் – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

மாண்புயர் வான் மண்டலத்தில் – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

 

எக்காள தொனி முழங்க – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

வீணையுடன் யாழ் இசைத்து – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

 

முரசொலித்து நடனம் செய்து – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

நரம்பிசைத்து குழல் ஊதி – அவரை

புகழ்ந்து பாடுங்கள்

 

25. கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

கண்மலை மீதே கட்டப்படுவோம்

விசுவாசத்தில் உறுதிக் கொள்வோம்

நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் – கர்த்தர்

 

பாவமில்லாதொரு வாழ்க்கையும்

மாயமில்லா மனத்தாழ்மையும்

சாந்தம் நீடிய பொறுமையும் – 2

இரக்கம்… தயவை தரித்திட

 

 

வேத வசனத்தால் நிறையவும்

தேவ சமாதானம் வளரவும்

பேதங்களின்றி வாழவும் – 2

பேரன்பில்… வளர்ந்து பெருகிட

 

26. கலைமான் நீரோடையை

ஆர்வமாய் நாடுதல் போல்

இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை

ஏங்கியே நாடி வருகின்றது

 

உயிருள்ள இறைவனில்

தாகம் கொண்டலைந்தது

இறைவா உன்னை என்று நான் காண்பேன்

கண்ணீரே எந்தன் உணவானது

 

மக்களின் கூட்டத்தோடு

விழாவில் கலந்தேனே

அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க

என் உள்ளம் பாகாய் வடிகின்றது

 

27. என் தேவன் என் வெளிச்சம்

என்னை இரட்சிப்பவரும் அவரே

என் ஜீவனுக்கரணானவர்

நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்

 

1. தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும்

அந்த இயேசென்னை ஏற்றுக் கொள்வார்

என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்

தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார்

–     என் தேவன்

 

2. தீமை செய்கின்ற வர்கள் எனக்கு

தீமை செய்ய விரும்புகையில்

என்தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்

என்னை பகைத்தவர்கள் உடனே அழிந்தார்கள்

–     என் தேவன்

 

28. ஆண்டவர் செயல்களை ஆ…

அனுதினம் சொல்லுவேன் ஆ…

அதனையே நினைத்து நான் ஆ…

ஆனந்தம் பாடுவேன் – 5

 

என்றும் உள்ளது என் இரக்கம்

என்று பகர்ந்த இணையில்லா இறைவா  2

உம் சொல்லுறுதிக்கு வானமே அடித்தளம் – 2

எடுத்து உரைப்பேன்

எனது தலைமுறைக்கும் – 2

ஆனந்தம் பாடுவேன் – 4

 

தலைவனே நீ தந்தையானாய்

மீடபரும் கடவுளும் எனக்கு நீயானாய்  2

மதிலாய் நின்று காக்கும் கோட்டை – 2

உன்னை என்றும்

பணிந்து போற்றிடுவேன் – 2

ஆனந்தம் பாடுவேன் – 4

 

காணிக்கைப் பாடல்கள்

29. நாங்கள் தருகின்ற காணிக்கை

இதை ஏற்றருள் தெய்வமே -2

நாங்கள் தருகின்ற காணிக்கை

 

நிலையற்ற உலகம் நிலையென நினைத்து

நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் -2

கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில்

காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்

 

வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி

பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம் -2

அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை

காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்

 

30. படைத்ததெல்லாம் தர வந்தோம்

பரம்பொருளே உம் திருவடியில்

உம் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்

எம் வாழ்வினிலே ஒளி வீசும்

 

உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்

உன்னதரே உந்தன் மகிமைக்கே

தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய்

தாழ்ந்து பணிந்து தருகின்றோம்

 

வாழ்வினில் வருகின்ற புகழெல்லாம்

வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே

கருணையின் தலைவா ஏற்றிடுவாய்

கனிவாய் உவந்து தருகின்றோம்

 

31. காணிக்கை தந்தோம் கர்த்தாவே

ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே

கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே

காணிக்கை யார் தந்தார் நீ தானே

 

நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகன் கொடுத்தது

மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் -2

ஆகாயம் மாறும் கடவுளின் மகனே

ஆனாலும் உன் அன்பு மாறாது

 

ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருவதேன்

ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே

கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2

கண் கொண்டு பாரும் கடவுளின் மகனே

கண்ணீரின் அர்த்தங்கள் நீ தானே

 

32. படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்

நானும் உந்தன் கைவண்ணம்

குயில்கள் பாடும் கிளிகள் பேசும் என்

வாழ்வு இசைக்கும் உன் ராகமே

 

இயற்கை உனது ஓவியம்

இணையில்லாத காவியம் — 2

அகிலம் என்னும் ஆலயம்

நானும் அதிலோர் ஆகமம் – 2

உள்ளம் எந்தன் உள்ளம்

அது எந்நாளும் உன் இல்லமே – 2

 

33. எனக் கெல்லாம் ஈந்தவனே

எனை தந்தேன் ஏற்றிடுவாய் -2

கல்வாரி மலை மீது -2

எனை மீட்க உனை மாய்த்தாய் -2

எனக் கெல்லாம்

 

அகிலம் முழுதும் உன் கொடையே

அடியேன் காணிக்கை வெறும் உள்ளமே

அன்பே அனலே அருள் மழையே

அடைக்கலம் புகுந்தேன் ஆர்பரித்தேன்

 

கடளும் காற்றும் பணிந்தனவே

கர்த்தனே உந்தன் அர்ப்பனைக்கே

வழியே ஒளியே உயிர் ஊற்றே

எனை தருவேன் சமர்ப்ணமாய்

 

34. எல்லாம் தருகின்றேன் – தந்தாய்

என்னையும் தருகின்றேன்

 

இயற்கை ஈந்த மலர்கள் பறித்துத்

தருவேன் உனக்கு காணிக்கை

உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை

என்னோடு இணைத்தே தருகின்றேன்

 

பிறருக்காக வாழ்வதில் நானும்

என்னையே உம்மிடம் தருகின்றேன்

பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க

என்னையும் தகுதி ஆக்குவாய்

 

35. அடியோர் யாம் தரும் காணிக்கையை

அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே

 

பாவியென்றெம்மைப் பாராமல் – யாம்

பாவத்தின் தீர்வையை அடையாமல்  2

பரிகாரம் என ஏற்றிடுவாய்

பலியாய் எமை நீ மாற்றிடுவாய்

 

மேலொரு வாழ்வு உண்டு என்று – எம்

மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம்  2

மேலும் துன்பங்கள் அடைந்தாலும்

மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்

 

வாழ்வுக்கு ஒரு நாள் முடிவு உண்டு – பின்

வாழ்வினில் எமக்கென்று எது உண்டு 2

என் மனம் அறிந்தவர் பயன் என்னவோ

எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ

 

36. வந்தோம் தந்திடவே

தந்தாய் ஏற்றிடுவாய்

எம் வாழ்வை உமக்கே பலியாய்த் தந்தோம்

அன்பாய் ஏற்றிடுவாய்

 

இறைவா உன்னில் இணையா வாழ்வு

இருந்தும் பயனென்ன

இகத்தில் நீ தந்த வாழ்வைத் தந்தால்

எனக்கு இழப்பென்ன

இனி வாழும் காலம் இனிதாக வேண்டும்

இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும்

 

இறைவா எந்தன் உள்ளம் என்றும்

உன்னை நாடுதே

உன்னில் இணைந்து உயர்வு பெறவே

விரைந்து நாடுதே

உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து

இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும்

 

37. என்னைத் தேர்ந்தது நீங்களில்லை

நாந்தான் உங்களை தேர்ந்து கொண்டேன்

 

1.    நீங்கள் என்னிலும் நானும் உம்மிலும்

கொடியோடிணைந்த நல் கிளைகளாவதால் — 2

நினைப்பது எல்லாம் நடந்திடும் உண்மை – ஆ .. ஆ

நினைப்பது எல்லாம் நடந்திடும் உண்மை

கேட்பது எல்லாம் தந்திடுவார் தந்தை — என்னைத்

 

2.   நண்பன் வாழ்ந்திட உயிரைப் பலியென

தந்த ஒருவனே அன்பின் இலக்கணம்  — 2

எந்தன் அன்பினையே நீங்கள் அறிந்துள்ளீர்  – ஆ .. ஆ

எந்தன் அன்பினையே நீங்கள் அறிந்துள்ளீர்

எங்கும் சென்றிதனை தந்து நீர் பலன் பெறுவீர் — என்னைத்

 

3.  அடிமை செய்பவன் தலைவன் பணியினை

அறிவதென்பது மரபு இல்லையே               — 2

எந்தன் பணிகளெல்லாம் நீங்கள் அறிவதனால் – ஆ .. ஆ

எந்தன் பணிகளெல்லாம் நீங்கள் அறிவதனால்

நண்பர் என்றிடுவேன் ஊழியர் நீங்களில்லை  — என்னைத்

 

38. எதை நான் தருவேன் இறைவா – உன்

இதயத்தின் அன்பிற்கீடாக

எதை நான் தருவேன் இறைவா

 

குறை நான் செய்தேன் இறைவா – பாவக்

குழியில் விழுந்தேன் இறைவா

கறையாம் பாவத்தை நீக்கிடவே – நீ

கல்வாரி மலையில் இறந்தாயோ

 

பாவம் என்றொரு விஷத்தால் – நான்

பாதகம் செய்தேன் இறைவா

தேவனே உன் திருப்பாடுகளால் – என்னைத்

தேற்றிடவோ நீ இறந்தாயோ

 

39. தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து

தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய்

 

வழங்கிட கனியோ உணவோ இன்றி

வாடிடும் வறியோர் பலர் இறைவா } 2

வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி

வேறெதும் இல்லா நிலை இறைவா

 

உனக்கென எம்மை வழங்கிடும் வேளை

உன்னருள் இவர்க்காய் கேட்க்கின்றோம் } 2

எங்கள் மனம் பொருள் ஆற்றல்  அனைத்தையும் இவர்தம்

மனதுயர் நீங்கப் படைக்கின்றோம்

 

40. உன்னிடத்தில் என்னைத் தந்தேன்

என்னிடத்தில் உன்னை வைத்தேன் 2

இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க

ஏதொன்றும் சொத்தும் இல்லை

பாவம் செய்தேன்

எண்ணத்தில் சுத்தம் இல்லை  2

 

கண்களை நான் தருகின்றேன்

கண்களுக்கோ பார்வைகொடு  2

இறைவா உன் பாதத்தில்

உள்ளத்தை நான் வைத்தேன்

உள்ளத்தில் ஞானம் கொடு

காய்ந்தே போனேன் பசுமை தந்து விடு – 2

 

நெஞ்சுக்குள்ளே வந்துவிடு

நிம்மதியை தந்துவிடு 2

நேசிக்க வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய்

நெற்றிக்கு முத்தம் கொடு

நீயே என்னை காணிக்கை பெற்றுக் கொடு – 2

 

திருவிருந்துப் பாடல்கள்

 

41. சம்மதமே இறைவா சம்மதமே தலைவா

உன் மாலையிலே ஒரு மலராகவும்

உன் பாலையிலே சிறு மணலாகவும்

வாழ்ந்திட சம்மதமே இறைவா

மாறிட சம்மதமே

 

தயங்கும் மனதுடைய நான்

உனக்காகவே உன் பணிக்காகவே

வாழ்ந்திட வரம் தருவாய் – 2

கருவாக எனை படைத்து

உயர் கண்மணியாய் எனை வளர்த்து

கரமதிலே உரு பதித்து

கருத்துடனே என்னை காக்கின்றாய்

 

மலையாய் நான் கனித்த

பெரும் காரியமும் உயர் காவியமும்

மறைந்தே போனதே – 2

திருவாக உனை நினைத்து

உயர் உறவாகவே நெஞ்சில் பதித்து

உன் பெயரை சாற்றிடவே

நலம் பெறவே என்னை அணைக்கின்றாய்

 

42. தியாக தீபம் இயேசுவின் திருவுடல் இதுவே

தேடும் நெஞ்சம் தேற்றவரும் திரு உணவிதுவே  -_ 2

அன்பு நெஞ்சம் கொண்டவரே உண்ண வாருங்கள்

உணவை உண்டு தனையளித்து தரணி மாற்றுங்கள்

 

கோதுமை மணியின் பலியினிலே இந்த வெள்ளை அப்பம் பிறக்கின்றது

என்றும் ஏங்கிடும் மாந்தர் வாழ்ந்திட தன்னை தியாகமாய் தருகின்றது

இதை உண்ணும் யாவரும் தன்னை பிறர்க்கென அளித்திட கேட்கின்றது

நம்மையும் உணவென நாம் கொடுப்போம் – பிறர்

நலமுடன் வாழ்ந்திட உயிர் கொடுப்போம்    -_ தியாக தீபம் (2 lines)

 

விருந்தினில் கலந்திடும் பொழுதினிலே நெஞ்சில் வேத உணர்வுகள் வருகின்றன

ஏழ்மை அடிமைகள் உயர்வு தாழ்நிலை என்ற பிரிவுகள் இ¢றக்கின்றன

பிறர் பணிகள் செய்வதே தலைவன் பண்பென்ற படிப்பினைத் தருகின்றது   _ 2

விருந்தினில் கலந்திடும் பொருளுணர்வோம் – பிறர்

பணி செய்து வாழ்வதில் நிறைவடைவோம் ———_ தியாக தீபம் (2 lines)

 

43. பூசை பலிபோல் பாக்ய செல்வம்

புவியில் இல்லையே -_ -2

புவி நிரம்பப் பொன் தந்தாலும் – இப்

பலிக்கு  ஈடில்லையே -_ 2

பரமனே இப்பலிப் பொருளாய் எழுந்தருள்வாரே _ —–2

பக்தி ஆவல் நிரம்பப் பலியை ஒப்புக்கொடுப்போமே_2

 

அள்ள அள்ள குறையா சுரக்கும்

அமுதம் நிரை சுனையே

அன்பில் சிவந்து உயர்ந்து நின்ற கல்வாரிப்பலியே

எல்லையில்லாப் பலன் நிறைந்து ஓங்கும் அருட்பலியே

எங்கள் பாவ நோய்க்கு மருந்தாய் எழுந்திடும் பலியே

 

44. நானே வானினின்று இறங்கி வந்த

உயிருள்ள உணவு – இதை

யாராவது உண்டால் அவன்

என்றுமே வாழ்வான்

 

எனது உணவை உண்ணும் எவறும்

பசியை அறிந்திடார் ஆ..ஆ..ஆ.. – என்றும்

எனது குருதி பருகும் எவரும்

தாகம் தெரிந்திட்டார்

 

அழிந்து போகும் உணவிற்காக

உழைத்திட வேண்டாம் ஆ…ஆ..ஆ.. – என்றும்

அழிந்திடாத வாழ்வு கொடுக்கும்

உணவிற்கே உழைப்பீர்

 

மன்னா உண்ட முன்னோர் எல்லாம்

மடிந்து போயினர் ஆ..ஆ..ஆ..- உங்கள்

மன்னன் என்னை உண்ணும் எவரும்

மடிவதே இல்லை

 

45. நெஞ்சமெனும் ஆலயத்தில்

வரவேண்டும் இறைவா-உனை

தஞ்சமெனத் தேடுமெனில்

வரவேண்டும் இறைவா

 

என்னகம் எழுந்து இருள் ஒழித்து

விண்ணகம் சேர்க்க வர வேண்டும்

மண்ணக இன்ப நினைவழித்து

உன்னதம் காண வர வேண்டும்

 

அன்பின் சின்னம் எனில் வளர

அன்பனே நீயும் வர வேண்டும்

உன்னத வாழ்வில் உனையடைய

என்னகம்  நீயும் வர வேண்டும்

 

பணிவும் பண்பும் பிறரன்பும்

என்னில் நிறைய வர வேண்டும்

பிணியும்  துயரும் அகன்றிடவே

பேரரசே நீ வர வேண்டும்

 

46. நெஞ்சத்திலே தூய்மை யுண்டோ

இயேசு வருகின்றார்

நொருங்குண்ட நெஞ்சத்தயே

இயேசு அழைக்கின்றார்.

 

வருந்தி சுமக்கும் பாவம் – நம்மை

கொடிய இருளில் சேர்க்கும் – 2

செய்த பாவம் இனிபோதும் – 2

அவர் பாதம் வந்து சேரும் – 2

 

குருதி சிந்தும் நெஞ்சம் – நம்மை

கூர்ந்து நோக்கும் கண்கள் – 2

அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் – 2

அவர் பாதம் வந்து சேரும் – 2

 

மாய லோக வாழ்வு – உன்னில்

கோடி இன்பம் காடிடும் – 2

என்னில் வாரும் அன்பர் இயேசு – 2

உன்னில் வாழ இடம் வேண்டும் – 2

 

47. உன் புகழைப் பாடுவது என்

வாழ்வின் இன்பமையா

உன் அருளைப் போற்றுவது என்

வாழ்;வின் செல்வமையா

 

துன்பத்திலும் இன்பத்திலும் நல்

தந்தையாய் நீ இருப்பாய்

கண்ணயரக் காத்திருக்கும் நல்

அன்னையாய் அருகிருப்பாய் 2

 

அன்பு எனும் அமுதத்தினை நான்

அருந்திட எனக்களிப்பாய்

உன்நின்று பிரியாமல்

நீ என்றும் அணைத்திருப்பாய் – 2

பல்லுயிரை படைத்திருப்பாய் நீ

என்னையும் ஏன் படைத்தாய்

பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ

என்னையும் ஏன் அழைத்தாய்     2

 

 

அன்பினுக்கு அடைக்கும் தாள்

ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்

உன் அன்பை மறவாமல்

நான் என்றும் வாழ்;ந்திருப்பேன் – 2

 

48. இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்

மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே – அவர்

மர்¢த்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ

–     இயேசுவின் அன்பை

 

அளவில்லா அன்பு அதிசய அன்பு

ஆழமகல நீள எல்லை காணா அன்பு

களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு

கல்வாரி மலைக் கண்ணீர் சொல்லிடும் அன்பு

 

அலைகடலை விடப் பரந்த பேரன்பு

அன்னைமார் அன்பெல்லாம் திரையிடுமன்பு

மலைபோல் எழுந்தெனை வளைத்திடுமன்பு

சிலையெனப் பிரமையில் நிறுத்திடுமன்பு

 

எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு

எனக்காகத் தன்னையே உணவாக்கும் அன்பு

எனக்காகப் பாடுகள் ஏற்ற பேரன்பு

எனக்காக உயிரையே தந்த தேவன்பு

 

கலைக்கடங்கா அன்பு கதிதருமன்பு

கைதிபோல் இயேசுவை சிறையிடும் அன்பு

விலையில்லாப் பலியாக விலங்கிடும் அன்பு

விவரிக்க விவரிக்க விரிந்திடும் அன்பு

 

49. மகிழ்வோம் மகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம்

தினம் அக மகிழ்வோம் – இயேசு

ராஜன் சொந்தமாகினார் – 2

இந்த பார்த்தலத்தின் சொந்தக்காரர் அவர்

எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் – 2

ஆ… ஆனந்தமே பரமானந்தமே

இது மாபெரும் பாக்கியமே – 2

 

சின்னஞ்சிறு வயதில் என்னை குறித்துவிட்டார்

தூரம் போயினும் கண்டுகோண்டார் – 2

தமது ஜீவனை எனக்கும் அளித்து

ஜீவன் பெற்றுக் கொள் என்றுரைத்தார் – 2

ஆ… ஆனந்தமே….

 

எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று

என்னை பிரிக்காது காத்து கொள்வார்

என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை

அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்

ஆ… ஆனந்தமே….

 

50. ஆனந்த மழையில் நானிலம் மகிழ

மன்னவன் எழுகின்றார்

ஆயிரம் நிலவொளியோ -என்னை

ஆண்டிடும் இறையரசோ

அவனியை மாற்றிடும் அருட்கடலோ

 

மன்னவனே என்னிதயம் பொன்னடி பதிக்கின்றாய்

விண்ணகமே என் இதயம் அன்புடன் அமைக்கின்றாய்

இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிது

பண்பாடவோ என்றும் கொண்டாடவோ

மலர்கின்ற புது வாழ்விலே – இனி

சுகமான புது ராகமே

என்றென்றும் உண்டாகும் பேரின்பமே

பேரின்பமே பேரின்பமே

 

சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தாயோ

காற்றினிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தாயோ

எனில் ஒன்றாகினாய் நான் நன்றாகினேன்

பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்

மலர்கின்ற புது வாழ்விலே .. .. ..

 

51. இயற்கையில் உறைந்திடும்

இணையற்ற இறைவா – என்

இதயத்தில் எழுந்திட வா

என்றும் இங்கு என்னோடு

நின்று என்னை அன்போடு

காத்திடு என் தலைவா 2

 

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்கு

சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ  2

மெழுகாகினேன் திரியாக வா

மலராகினேன் மணமாகவா  2

 

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி

உலகத்தில் எதுவும் நடந்திடுமோ  2

குயிலாகினேன் குரலாகவா

மயிலாகினேன் நடமாடவா  2

 

52. இறை எளிமையின் தேவனின்

இறைகுலப் பனியினில்

இணைந்திடவே இங்கு எழுந்திடுவோம் – 2

அன்பு வழியில் அறநெறியில்

என்றும் வெறுமை இங்கு அகற்றிடுவோம் – 2

– இறை எளிமையின் …

 

மனித மாண்பினில் நிலைப் பெறவே

மனிதம் என்றும் மலர்ந்திடவே

புனிதமாய் நாம் கலந்திடுவோம் – 2

அதில் இனிமை வரும் முழுமை

இறை உணவினில் நாம் இணைவோம் – 2

– இறை எளிமையின் …

 

பாவக் கரைகளை அகற்றிடுவோம்

வாழ்வின் முறைகளை மாற்றிடுவோம்

ஞானம் நிறைவாய் வாழ்ந்திடுவோம் – 2

அதில் இனிமை வரும் முழுமை

இறை உணவினில் நாம் இணைவோம் – 2

– இறை எளிமையின் …

 

53. என்னைத் தேர்ந்தது நீங்களில்லை

நான்தான் உங்களை தேர்ந்து கொண்டேன்

 

நீங்கள் என்னிலும் நானும் உம்மிலும்

கொடியோடிணைந்த நல் கிளைகளாவதால் — 2

நினைப்பது எல்லாம் நடந்திடும் உண்மை – ஆ..ஆ

நினைப்பது எல்லாம் நடந்திடும் உண்மை

கேட்பது எல்லாம் தந்திடுவார் தந்தை — என்னைத்

 

நண்பன் வாழ்ந்திட உயிரைப் பலியென

தந்த ஒருவனே அன்பின் இலக்கணம் —2

எந்தன் அன்பினையே நீங்கள் அறிந்துள்ளீர் – ஆ..ஆ

எந்தன் அன்பினையே நீங்கள் அறிந்துள்ளீர்

எங்கும் சென்றிதனை தந்துநீர் பலன்பெறுவீர் — என்னைத்

 

அடிமை செய்பவன் தலைவன் பணியினை

அறிவதென்பது மரபு இல்லையே –2

எந்தன் பணிகளெல்லாம் நீங்கள் அறிவதனால் – ஆ..ஆ

எந்தன் பணிகளெல்லாம் நீங்கள் அறிவதனால்

நண்பர் என்றிடுவேன் ஊழியர் நீங்களில்லை – என்னைத்

 

54. தேடும் அன்பு தெய்வம் – என்னைத்

தேடி வந்த நேரம் – 2

கோடி நன்மை கூடும் – புவி

வாடும் நிலைகள் மாறும் – 2

இந்த வானதேவன் தந்த வாழ்வுப் பாதை – எந்தன்

வாழும் காலம் போகும் – 2

 

1. வார்த்தையாகி நின்ற இறைவன் – இந்த

வாழ்வைத் தேர்ந்த தலைவன் – 2

பாரில் எங்கும் புதுப்பாதை தந்து – அந்தப்

பாதையில் அழைத்த அறிஞன் – 2

காலம் கடந்த கலைஞன் என் தலைவன் – இந்த

 

2. அடிமை அமைப்பு இங்கு ஒழிய – எங்கும்

புனித மாண்பு நிறைய – 2

புரட்சிக் குரல் கொடுத்துப் அறிய வழி வகுத்துப்

புதுமை செய்த பெரும் புனிதன் – 2

வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன் – இந்த

 

55. நீயே எனது ஒளி நீயே எனது வழி

நீயே எனது வாழ்வு இயேசையா – 2

 

1. நான்கு திசையும் பாதைகள்

சந்திக்கின்ற வேளைகள்

நன்மை என்ன தீமை என்ன

அழியாத கோலங்கள் – 2

நீயே எங்கள் வழியாவாய்

நீதியின் பாதையில் பொருளாவாய் – 2

உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்

அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே

 

2. துன்ப துயர நிகழ்வுகள்

இருளின் ஆட்சிக் கோலங்கள்

தட்டுத் தடுமாறி விழத்

தகுமான சூழல்கள் – 2

நீயே எங்கள் ஒளியாவாய்

நீதியின் பாதையின் சுடராவாய் – 2

உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட

உண்மையின் இறைவா உனதருள் தாரும் – நீயே

 

56. உன்னை நான் மறவேன் யேசுவே

நான் மறவேன்

என் யேசுவே உன்னை நான்

மறவேன் மறவேன்

எந்நாளும் உன் அருளை – நான்

பாடி மகிழ்ந்திருப்பேன்

 

உன் நாமம் என் வாயில் – நல்

தேனாய் இனிக்கின்றது

உன் வாழ்வு என் நெங்சில் – நல்

செய்தியாய் தொனிக்கின்றது

உன் அன்பை நாளும் எண்ணும் போது ஆனந்தம் பிறக்கின்றது

 

உன் நெஞ்சின் கனவுகளை

நிறைவேற்ற நான் உழைப்பேன்

அறிவாகும் பாலங்களை

உலகெங்கும் நான் அமைப்பேன்

இறையாட்சி மலரும் காலம் வரையில்

இனிதாய் எனை அளிப்பேன்.

 

நன்றிப் பாடல்கள்

57. நன்றி சொல்லி பாடிடுவோம்

நன்மை செய்த தேவனையே

நாளெல்லாம் காத்து

நடத்தும்  இறைவனை

நலமெல்லாம் ஈண்டு

பகிரும் நாதனை

நன்றி ..

 

கரத்தில் நமது பெயரைப்பொறித்து

கண்மணியாய் காக்கின்றார்

கல்லிலும் கால்கள் மோதாதபடியே

கரம்பிடித்து நம்மை நடத்துகின்றார்

வலப்புறம் ஆயிரம் விழுந்தாலும்

இடப்புறம் ஆயிரம் விழுந்தாலும்

தீமைகள் அணுகாது காத்திடுவார்

நன்றி ..

58.   உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்

 

“உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்

துலங்கிடும் இறைவா தூயவன் உமக்கே

நன்றி நன்றி நன்றி”

 

உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்

துலங்கிடும் உமக்கே இறைவா

நன்றி நன்றி இறைவா நன்றி

நன்றி கூறுகின்றோம்

 

1. இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு

இணையில்லா பலியில் இறைவணை உண்டு

சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில்

–ஆ..ஆ..ஆ..ஆ (2)

நின்றிட அழைத்தோம் நிற்பாய் தினமும்

 

59. நன்றி நன்றி ஆண்டவர்கு கூறுவோம்

நம் ஆண்டவராம் நல்லவரை பாடுவோம்

இறை வாழ்வினிலே வாழுவோம்

வாழ்வதையே கூறுவோம்

நன்மை பெற்ற மனதினராய் காணுவோம்

 

பலியுமாக உணவுமாக நிறைந்த இயேசு தேவனே

வலிமையோடு உணர்வு கொண்டு பாடுவோம்

பாடுவோம் பாடுவோம்

கூறுவோம் நன்றி கூறுவோம்

நல் வழியில் செல்ல நாளுமே

நடத்தும் நல்ல தேவனே

பழியில்லாத இறையுணர்ந்து புகழ்ந்து பாடுவோம்

 

60. நன்றியால் துதி பாடு – நம் இயேசுவை

நாவாலே என்றும் பாடு

 

வல்லவர் நல்லவர் போதுமானவர்

வார்த்தயில் உண்மை உள்ளவர்

 

எரிக்கோ மதிலும் முன்னே வந்தாலும்

இயேசு உந்தன் முன்னே செல்கிறார்

கலங்கிடாதே திகைத்திடாதே

துதியினால் இடிந்துவிழும்

 

செங்கடல் நம்மை எதிர்த்து வந்தாலும்

சிலுவையின் நிழல் உண்டு

பாடிடுவோம் துதித்துடுவோம்

பாதைகள் கிடைத்துவிடும்

 

61. நன்மையெல்லாம்  செய்தவரே தந்தையே      

இதய நன்றியினால் புகழ்கின்றோம் உம்மையே (2)

நன்மையெல்லாம்  செய்தவரே தந்தையே

 

ஆண்டவரே ஆதியும் நீர் அந்தமும் நீரே(2)

ஆட்கொண்ட ஆவியும் நீர் அரசரும் நீரே(2) – நன்மையெல்லாம்

 

மண் புனல் விண் தணல் காற்றை படைத்தவர் நீரே(2)

மண்டலங்கள் அத்தனையும் தந்தவர் நீரே(2) – நன்மையெல்லாம்

 

கண்ணோடு ஒளி தந்து காண வைத்தீரே(2)

காட்சி எழில் கோடி தரும் கர்த்தரும் நீரே(2) – நன்மையெல்லாம்

 

உணவோடு சுவை படைத்து உண்ண வைத்தீரே(2)

ஊட்டி விட்டு தான் மகிழும் அன்னையும் நீரே(2)

– நன்மையெல்லாம்

 

இன்பம் நிறை விண்ணரசை படைத்தவர் நீரே(2)

எங்களுக்கு வழியாக மகனை தந்தீரே(2) – நன்மையெல்லாம்

 

மனித இனம் மீட்படைய மனது வைத்தீரே(2)

மகனாலே திருச்சபையை தோன்ற வைத்தீரே(2)

– நன்மையெல்லாம்

 

மக்கள் எங்கள் பாவங்களை அறிந்தவர் நீரே(2)

மன்னிப்பும் மீட்பினையும் அளித்தவர்  நீரே(2)

– நன்மையெல்லாம்

 

62. நீ செய்த நன்மை நினைக்கின்றேன் – என்

நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்

இறைவா இறைவா இறைவா இறைவா

 

உண்டிட உணவும் உடையுமே கொடுத்து

ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் – ஒரு

அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து

அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்

 

மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி

மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் – உடன்

உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல்

களைகளை அகற்றிக் காத்து வந்தாய்

 

63. அழகிய கவிதையில் பாடிடுவேன்

அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன்

 

துன்ப சூழல்கள் சூழ்கையிலே

குவலை கறைகள் படர்கையிலே – 2

இருளின் கைகள் வளைக்கையிலே

அமைதியில் நிலைப்பேன் ஆண்டவரே

 

அறிவிலி என்னையே அவர் நினைத்தார்

ஆற்றல் மிகவே எனக்களித்தார் – 2

எதிரியினின்று விடுவித்தார் – எனவே

அவர் என் ஆண்டவரே

64. உன் நாமம் சொல்லச் சொல்ல

என் நெஞ்சம் மகிழுதய்யா

என் வாழ்வில் மெல்ல மெல்ல

உன் இன்பம் பெருகுதய்யா

 

மாணிக்கத் தேரோடு காணிக்கை வந்தாலும்

உனக்கது ஈடாகுமா

உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்

உனக்கது ஈடாகுமா

வான் கொள்ளா பெருஞ்செல்வம் நீயன்றி வேறு

தானுண்டோ என் வாழ்வில் சொல்வாய் என் உயிரே

 

தேனென்பேன் பாகென்பேன் தெவிட்டாத சுவையென்பேன்

உன் நாமம் என்னென்பேன்

நிறை என்பேன் இறையென்பேன் நீங்காத

நினைவென்பேன்

உன் நாமம் என்னென்பேன்

வான் கொள்ளா பெருஞ்செல்வம் நீயன்றி வேறு

தானுண்டோ என் வாழ்வில் சொல்வாய் என் உயிரே

 

65. சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே

சந்தோசம் என்னில் பொங்குதே

அல்லேலுயா இயேசு என்னை இரட்சித்தார்

முற்றும் என்னை மாற்றினார்

சந்தோசம் என்னில் பொங்குதே

 

வழி தப்பி நான் திரிந்தேன் – பாவ

வழி அதை சுமந்தழைந்தேன்

அவர் அன்பு குரலே அழைத்தது என்னையே

அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே.

 

சாத்தான் சோதித்திட – தேவ

உத்தர வுடன் வருவார்

ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்

இந்த நல்ல இயேசு எந்தன் சோந்த மானாரே.

 

66. அழகிய கவிதையில் பாடிடுவேன் – அவனியில்

அவர் புகழ் சாற்றிடுவேன்

 

துன்ப சூழல்கள் சூழ்கையிலே

துயர கறைகள் படர்கையிலே

இருளின் கைகள் வளைக்கையிலே

அமைதியில் நிலைப்பேன் ஆண்டவரில்

 

அறிவிலி எனையே அவர் நினைத்தார்

ஆற்றல் மிகவே எனக்களித்தார்

எதிரியின்றி விடுவித்தார்

எனவே அவர் என் ஆண்டவரே

 

67. இதழால் நன்றி சொன்னால்

இறைவனுக்காகிடுமோ

இதயத்தில் நன்றி சொன்னால்

இயேசுவுக்காகிடுமோ

 

வாழ்வில் காட்டுதலே வானிறை கேட்கும் நன்றி

மனத்தாழ்ச்சியும் தரித்திரமும் தயவும் காட்டும் நன்றி 2

 

உலகை உருவாக்கி உண்மை வாழ்வளித்து

தன்னை பலியாக்கி தந்திடும் இறைவனுக்கு 2

 

ஆறதல் பொழி கூறி அன்பின் வழிகாட்டி

உயிரும் உண்மையுமாய் உறவுகள் தருபவர்க்கு 2

 

மாதா பாடல்கள்

68. ஞானம் நிறை கன்னிகையே

நாதனைத் தாங்கிய ஆலயமே

மாண்புயர் ஏழு தூண்களுமாய்

பலிப் பீடமுமாய் அலங்கரித்தாயே

 

பாவ நிழலே அணுகாப்

பாதுகாத்தான் உன்னையே பரமன்

தாய் உதரம் நீ தரித்திடவே

தனதோர் அமல தளமெனக் கொண்டார்

 

வாழ்வோர் அனைவரின் தாயே

வானுலகை அடையும் வழியே

வாஞ்சையோடணைக்கும் தாரகையே

வாடிய மனிதர் கதியெனக் கொண்டு

 

69. ஆரோக்கிய மாதாவே – உமது

புகழ் பாடித் துதித்திடுவோம் – எந்நாளும்

பாடித் துதித்திடுவோம்.

 

அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே

வசித்திட ஆசை வைத்தாயே – 2

பலவிதக் கலைகளும் பாரினில் சிறந்திட

அனைவர்க்கும் துணை புரிந்தாயே – 2.

– ஆரோக்கிய …

 

தேன் கமழும் சோலை சேர்ந்து விளங்கும்

வேளாங் கன்னியில் அமர்ந்தாயே – 2

வானகமும் இந்த வையகமும்

அருள் ஓங்கிட எங்கும் நிறைந்தாயே – 2

 

– ஆரோக்கிய …

70. உம்மைத் தேடிவந்தேன் சுமை தீருமம்மா

உலகாலும் தாயே அருள் தாருமம்மா – 2

 

முடமான மகனை நடமாட வைத்தாய்

கடல் மீது தவித்த கப்பலைக் காத்தாய் – 2

பால் கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய்

பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் – 2

 

கடல் நீரும் கூட உன் கோவில் காண

அலையாக வந்து உன் பாதம் சேரும் – 2

அருள் தேடி நாங்கள் உம் பாதம் பணிந்தோம்

அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2

71. இனிய உன் நாமம் ஓதிடல் தினமே

அனைவரும் மகிழ்வோமே – 2

தாயினும் மேலாம் தாயுமே நீயே

தமியோர் திரவியமே – 2

அன்பிதே அன்பிதே மாதா

தன்னலமே அற்ற மாதா – 2

தாயினும் மேலாம் தாயுமே நீயே

தமியோர் திரவியமே – 2

 

கலைமொழியால் உனை துதித்திட நாளும்

கவலையும் தீருமம்மா

பலவகை பாலும் தெளிவுரு தேனும்

தெவிட்டா இனிமையம்மா

72. அலையொளிர் அருணனை

அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ

 

வாழ்க்கையின் பேரரசி

வழுவில்லா மாதரசி

கலையெல்லாம் சேர்ந்தெழும் தலைவியும் நீயல்லோ

காலமும் காத்திடுவாய்

 

அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே

பொல்லாத ஊழியன் தொல்லைகள் நீங்கிட

வல்ல உன் மகனிடம் கேள்

73. சகாய தாயின் சித்திரம் நோக்கு

அபாயம் மீட்கும் அன்னையின் வாக்கு

எத்துணை கனிவு எத்துணை தெளிவு

ஏங்கிடும் மனதிற்கு வரும் நிறைவு – 2

 

சகாய தாயின் சித்திரம் நோக்கு…

 

குத்தி பிழிந்திடும் ஈட்டியும் ஆணியும்

கொடூர சிலுவையும் கண்டு மிரண்டு – 2

கத்தி தாய்மேல் பாய்ந்திடும் இயேசுவை

சதாவும் நினைவில் பதித்திடுவாய் -2

 

74. சதா சகாய மாதா

சதா சகாயம் செய்யும் மாதா

தினம் தோறும் யாரும் வேண்டினாலும்

இல்லை என்னாத மாதா 2

 

ஆதி பிதா ஆனவரின்

அன்பான புத்திரியே  2

ஜோதி சுடர் தேவன் திரு

தாயான உத்தமியே

 

பாவிகளின் ஆதரவே

ஆவியின் ஆலயமே  2

நெஞ்சு நிறை ஓவியமே

நித்தமும் ஆனந்தமே

 

75. சதா சகாயத் தாயே சகல மைந்தர்க்குமே

இதய உணர்ச்சி ததும்பும் உன்னையே

தினம் நினைத்தாலே

 

உதய தாரகை இருளில் நீயென

உலகம் கூறிடுமே 2

பதமும் அடைந்தோர்

பாவமும் களைவர் பரம நாயகியே

பயமும் கவலை தீர் பதும அன்னையும் நீ

நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழுவோமே

 

புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே

புனித மாமரியே 2

சுதனும் உனையே தாயென

அழைத்தான் சிலுவை அடியிலே

பயமும் கவலை … … …

76. மாதாவே துணை நீரே உம்மை

வாழ்த்திப் போற்ற வரம் தாரும்

இதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா

எற்றன்பாக எமை பாரும்

 

வானோர் தம் அரசே தாயே எம்

மனறாட்டைத் தயவாய் கேளும்

ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்

எக்காலத்துமே தற்காரும் – மாதாவே

 

ஒன்றே கேட்டிடுவோம் தாயே நாம்

ஓர் சாவான பாவம் தானும்

என்றேனும் செய்திடாமல் காத்து

எம்மை சுத்தர்களாய் பேணும் – மாதாவே

 

77. மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்

நேசமில்லாதவர் நீசரேயாவார்

வாழ்க வாழ்க வாழ்க மரியே

 

மூதாதை தாயார் செய் முற்பவமற்றாய்

ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்

வாழ்க வாழ்க வாழ்க மரியே

 

தாயே நீ ஆனதால் தாபரித் தென்மேல்

நேசம் வைத்தாள்வது நின் கடனாமே

வாழ்க வாழ்க வாழ்க மரியே

 

78. என் ஆன்மா இறைவனையே

ஏற்றி போற்றி மகிழ்கின்றது

எம் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது

 

1. தாழ்நிலை இருந்த தம் அடியவரைத்

தயையுடன் கண்கள் நோக்கினார் – 2

இந்நாள் முதலாம் தலைமுறைகள்

எனைப் பேறுடையாள் என்றிடுமே – என் ஆன்மா

 

2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே

எனக்கரும்      செயல்பல புரிந்துள்ளார் – 2

அவர்தம் பெயரும் புனிதமாகும்

அவரில் அஞ்சுவோர்க்கு இரக்கமாகும் – என் ஆன்மா

 

79. அன்னையின் பெருமைக்கு பாடுவோம் பண்ணாக

அன்புமரி தேவதைக்கு சூடுவோம் பொன்னாக 2

 

தேவனை ஈன்றெடுத்தாள் – அன்பு

தெய்வமாய் கோயில் கொண்டாள் 2

கன்னியும் தாயும் ஆயினவள்

கருவினில் பாவம் நீங்கினவள்  2

பணிந்து சிறந்து அமைந்து வியந்து

கனிந்து உவந்து நின்றவள் நீ

 

 

மாதருள் மாணிக்கம் நீ – இறை

மன்றத்தின் பேரெழில் நீ  2

வாழ்வினில் மகிமை கொண்டவள் நீ

வானகம் ஏறிய தாயவள் நீ  2

வனத்தில் நிகர்ந்த குலத்தில் உதித்த

மணத்தில் மகிழ்ந்த பூமகள் நீ

 

80. அம்மா என்று அழைத்தால்

குழந்தாய் என்று வருவாய்

அபயம் என்று சொன்னால்

அன்பாய் தூக்கி நெஞ்சில் வைத்து

என்னை காத்துக் கொள்வாய்

 

வேடிக்கை உலகம் பின்னால் நான் சென்றேன்

வேண்டியதெல்லாம் தருமென்று நான் சென்றேன்

மீளாத் துன்பம் நானடைந்தேன்

என் நிலை நானுணர்ந்தேன்

அம்மா உனை அழைத்தேன்

 

உலக மாந்தர்க்கு கலங்கரை விளக்கம் நீ

கண்மணியாய் எமை நாளும் காப்பவள் நீ

உன்னை நான் பிரிந்திடேன்

நாழியும் நான் மறவேன்

அம்மா உனை அழைத்தேன்

 

மின்னுவதெல்லாம் பொன்னென்று நான் கொண்டேன்

வெளுத்தவை எல்லாம் பாலென்று நான் உண்டேன்

பொன்னும் தீயானது

பாலும் நஞ்சானது

அம்மா உனை அழைத்தேன்

நிறைவுப் பாடல்கள்

81. எங்கள் காவலாம் சூசை தந்தையின்

மங்களங்கள் எங்குஞ் சொல்லி இங்குப் பாடுவோம்

செங்கை அதிலே தங்க புஷ்பம்

தங்கும் கோலை ஏந்திடும்

 

கன்னித் தாயாரின் பர்த்தா நீ யல்லோ

உன்னதமார் பேறும் மாட்சி

உற்ற பாக்கியனே

சென்னி மகுட முடி புனைந்த

மன்னர் கோத்ர மாதவா

 

இயேசு நாதரின் செல்வத் தாதை நீ

நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே

தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்

ஆசைகொண்டு பாடவே

 

82. இயேசுவின் இருதயமே -என்றும்

எரிந்திடும் அருள்மயமே-உந்தன்

ஆசியும் அருளூம் சேர்ந்து வந்தால்-எங்கள்

ஆனந்தம் நிலைபெறுமே

 

இறைவனுக் கிதயமுண்டு-அந்த

இதயத்தில் இரக்கமுண்டு-என்றும்

இரங்கிடும் இறைவன் இருப்பதனால்-எங்கள்

அனைவருக்கும் வாழ்வு உண்டு

 

பாவிக்குப் பொறுத்தலுண்டு-அந்த

பரலோக வாழ்வு உண்டு-நாங்கள்

கூவிடும் குரலை கேட்பதற்கு-இந்த

கோயிலில் தெய்வம் உண்டு

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா பாடல்கள்

 

83. தேவ  பாலன்  பிறந்தீரே

மனுகோலம் எடுத்தீரே

பரலோகம்  துறந்தீரே யேசுவே

நீர் வாழ்க வாழ்கவே

 

மண்மீதினில் மாண்புடனே

மகிமையாய் உதித்த மன்னவனே

வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம்

தூய உன் நாமத்தையே தேவ பாலன் (1)

காரிருள் வேளையில்

கடும்குளிர் நேரத்தில்

ஏழை கோலமதாய்

பாரினில் வந்தது மன்னவனே உன்

மா தயவே தயவே –

 

விண்ணுலகில் சிம்மாசனத்தில்

தூதர்கள் பாடிடவே

வீற்றிருக்காமல் மானிடனானது

மா  தயவே  தயவே — 2

காரிருள்(1)

 

விண்ணில் தேவனுக்கே மகிமை

மண்ணில் சமாதானம்

மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன்

மா  தயவால் தயவால் — 2

காரிருள்(2)

84. அதிகாலையில் பாலனை தேடி

செல்வோம் நாம் யாவரும் கூடி

அந்த மாடடையும் குடில் நாடி

தேவ பாலனை பணிந்திட பாடி

அதிகாலையில் பாலனை தேடி

வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்- — 2

 

அன்னை மரியின் மடிமேலே

மன்னன் மகவாகவே தூங்க

விண்தூதர்கள் பாடல்கள் பாட

விரைவாக நாம் செல்வோம் கேட்க

அதிகாலையில் பாலனை தேடி

வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்-

 

மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே

அந்த முன்னனை முன்னிலை நின்றே

தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்

நல் காட்சியை கண்டிட நாமும்

— அதிகாலையில்

 

85. இதயம் என்னும் வீணையில்

அன்பை மீட்டும் வேளையில் — 2

வசந்த ராகம் கேட்கவே

ஏழை என்னில் வாருமே – 2

தந்தேன் என்னை தந்தேன் – என்றும்

என் வாழ்வு உன்னோடுதான் — 2

 

பாவிகளை ஏற்றிடவே

பாரினில் உதித்த பரிசுத்தரே — 2

பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்

தூய உன் நாமத்தையே  தேவ பாலன் (2)

 

86. மார்கழி குளிரினில் மன்னவனே

பார்முகம் வந்தாயோ என் சொந்தமே.

தேனிசைப் பாடல் இசைக்கின்றேன் – உன்

குடிலினில் காணிக்கை படைக்கின்றேன் (2)

 

எல்லாமும் நீயென்று தெரிந்திருந்தும்

எதுவும் இல்லாது ஏன் வந்தாய்

முழுமையின் நிறைவே நீயென்றால்

வெறுமையை பூண்டு ஏன் பிறந்தாய்

என்னிடம் உள்ளதை எல்லாமும்

நீ ஏற்றிடு காணிக்கையாக்குகிறேன்

— மார்கழி

 

சொந்தமே நீயென்று தெரிந்திருந்தும்

உறவுகள் இல்லாது நான் வாழ்ந்தேன்

வெறுமையின் நிறைவே நீயென்றால்

வறுமையின் கோலம் ஏன் படைத்தீர்

உள்ளதை எல்லாம் தருகின்றேன்

அந்த வெற்றிடம் நீ வந்து நிறைந்துவிடு

87. மாநிலமே மகிழ்வாய்

மாபரன் பிறந்ததினால்

பண்ணிசை முழங்கிடுவோம் – இன்று

சுடரொளி வந்ததினால் – இன்று

 

வானவர் இசை பாட

ஆயர்கள் உனை வணங்க

வாழ்வாய் வழியாய் ஒளியாய்

தவழ்ந்தாய் புவியில் மனுவாய்

 

சின்ன இருவிழி விரிப்பில்

விண்ணகமே மின்னும்

சிவந்த மலர் இதழ் சிரிப்பில்

கோடி எழில் சிந்தும் – 2

வாயுதிர்க்கும் மழலையிடம்

வாழ்வின் பொருள் பிறக்கும் – வானவர்

 

விண்ணகத்தில் உயர் மகிமை

பூவில் சமாதானம்

விந்தைகவர் மகிழ்செய்தி

கொண்டு வந்தார் வானோர் – 2

காலமெல்லாம் எதிர்பார்த்த

மாமன்னன் பிறந்துள்ளார் – வானவர்

 

88. தூங்கு மன்னவா தெய்வ பாலகா

மண்ணில் வந்தவா விண்ணின் கோமகா – 2

கண்ணே மணியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ

கருணை வடிவே நீயுறங்கு

ஆராரோ ஆரிரரோ

 

விண்ணைத் துறந்தாயோ

மண்ணில் வந்தாயோ – எம்

குறைகள் போக்கவே

குடிலைத் தெரிந்தாயோ -2

குளிரிலும் பனியிலும்

அழுது அயர்ந்தாயோ – 2

 

புதிய வானமும்

புதிய வையமும்

படைக்க வந்தாயோ – எமை

மீட்கப் பிறந்தாயோ  – 2

கண்மணியே பொன்மலரே

கர்த்தனே துயிலாயோ – 2

 

89. விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்

உன்னைத் தாலாட்ட

மண்ணோர் உவந்து பாடும் பாடல்

உன்னை வரவேற்க

ஆ …. ஆ …. ஆ ….

 

தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட

வார்த்தை நீயன்றோ

தேவ வாழ்வின் தூய மேன்மை

ஏன் துறந்தாயோ – எம்

தாழ்ந்த உள்ளம் தன்னில்

நீ வந்தருள்வாயோ

 

மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி

வானவன் அறிவித்தான்

தாவீதின் நகரில் மாமரி மடியில்

மாபரன் பிறந்துள்ளார் – நின்

பாதம் தொழுதிட வந்தோம்

எம் தாகம் தீர்ப்பாயோ

90. கன்னி ஈன்ற செல்வமே – இம்

மண்ணில் வந்த தெய்வமே

கண்ணே மணியே அமுதமே

என் பொன்னே தேனே இன்பமே

எண்ணம் மேவும் வண்ணமே

என்னைத் தேடி வந்ததேன்

ஆரீரோ …ஆராரோ ஆரீரோ… ஆராரோ

 

எங்கும் நிறைந்த இறைவன் நீ

நங்கை உதரம் ஒடுங்கினாய்

ஞாலம் தாங்கும் நாதன் நீ

சீலக் கரத்தில் அடங்கினாய்

தாய் உன் பிள்ளை அல்லவா

சேயாய் மாறும் விந்தை ஏன்

ஆரீரோ …ஆராரோ ஆரீரோ… ஆராரோ

ஆ …  ஆரோ ஆ …  ஆரோ ஆரீரோ ஆராரோ

 

வல்ல தேவ வார்த்தை நீ

வாயில்லாத சிசுவானாய்

ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ

அன்னை துணையை நாடினாய்

இன்ப வாழ்வின் மையம் நீ

துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்

ஆரீரோ …ஆராரோ ஆரீரோ… ஆராரோ

ஆ …  ஆரோ ஆ …  ஆரோ ஆரீரோ ஆராரோ

 

91. மன்னாதி மன்னன் பிறந்தான்

மண்ணில் புகழ் பாடி

மகிழ்ந்தாடும் நெஞ்சம் தேவ – மனு

மைந்தன் மலர்ப்பாதம் கொஞ்சும்

 

தாவீதின் குலமெல்லாம் மகிழ்ந்திடவே

பூமீது மாமன்னன் பிறந்துள்ளார் – 2

முறிந்திட்ட உறவினை இணைத்திடவே

முடிவில்லா மீட்பராய் எழுந்துள்ளார் – மன்னாதி

 

ஏழைக்கு வாழ்வினை வழங்கிடவே

ஏழ்மையின் உருத்தாங்கி வந்துள்ளார் – 2

முறிந்திட்ட உறவினை இணைத்திடவே

முடிவில்லா மீட்பராய் எழுந்துள்ளார் – மன்னாதி

 

92. ஆடிப் பாடி மகிழ்வோம் நாமெல்லாம்

இறை யேசு பாலன் பிறந்த நாளிலே – நம்மை

மீட்க மீட்பர் இங்கு பிறந்தார்

ஆடிப் பாடி போற்றுவோமே – நாம்

 

Happy Birthday to you – Baby Jesus

Happy Birthday to you

Merry Christmas to you – எல்லோருக்கும்

Merry Christmas to you

 

ஆயர் கூட்டம் வெட்ட வெளியிலே – கிடைக்கு

சாமக் காவல் காத்து நின்றாரே

விண்ணவர்க்கு மகிமை என்றும்

மண்ணவர்க்கு அமைதி என்றும்

வானதூதர் பாடக் கேட்டாரே – ஆடிப் பாடி

 

93. பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே

பாடும் தூதர்கூட்டம் பாரில்ஜோதி வீசி பாடும்செய்தி கேளும்

பிறந்தார் பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பாரில் யேசு பிறந்தார்

 

விண்ணில் மாட்சி தோன்ற மண்ணில் மீட்புகாண

மகிமை யாவும் துறந்து யேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பாரில் யேசு பிறந்தார்

 

 

உந்தன் பாவம் நீக்க உள்ளம் தூய்மையாக்க

உலகின் ஜோதியாக யேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் பாரில் யேசு பிறந்தார்

 

94. துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்

தூயன்யேசு மானிடனாய் ஜெனித்தார்

ஆரவாரமாய் கீதம் பாடுங்கள்

அன்பர்யேசு மானினாய் ஜெனித்தார்

 

வானமே வையமே வாழ்த்துங்கள் மகிழுங்கள்

தேவாதிதேவன் ராஜதிராஜன்

தாழ்மையின் ரூபமாய் ஜெனித்தார்

 

 

வானதூதர் விண்ணில்நல் வாழ்த்துக்கள் தந்தார்

கான மேய்ப்பர் ஆட்டுக்குட்டி அன்புடன் கொடுத்தார்

ஞானியர்கள் பொன்போளம் தூபமும் படைத்தார்

மானிடர்நம் இதயங்களை தந்திடுவோமே – வானமே

 

 

சிரிஷ்டிகளே சிரிஷ்டிகரைப் போற்றித் துதியுங்கள்

படைப்புக்களே படைத்தவரைப் பாடித் துதியுங்கள்

மீட்கப்பட்ட மானிடரே மகிழ்ந்து துதியுங்கள்

வல்லவர் இரட்சகர் பாரில் ஜெனித்தார் – வானமே

 

95. ராஜாதிராஜன் நீ மண்ணில் வந்தாய்

கேளாத இன்பங்கள் சொல்லித் தந்தாய்

ஊரெங்கும் இன்பங்கள் பொங்கச் செய்தாய்

உள்ளத்தில் நீவந்து தங்கச் செய்தாய் – ராஜாதிராஜன்

 

வாராய் தேவனே எங்கள் பாலகனே – 2

பாலகனே பாலகனே நீயே இரட்சிக்க வந்தாயே

யார்சொல்லி நாம்இந்த மண்ணில் வந்தோம்

 

யாருக்கு நாம் இங்கு கட்டுப்பட்டோம்

பாவத்தின் கையாலே குட்டுப்பட்டோம்

யார்சொல்லி நாம்இந்த மண்ணில் வந்தோம்

 

எம்மை மீட்கவே வந்தாய் பாலகனே

பாலகனே பாலகனே நீயே இரட்சிக்க வந்தாயே

நெஞ்சுக்குள் நின்றாடும் இரத்தினமே

நீ சொன்னதெல்லாமே தத்துவமே

நீ போன பாதையில் நித்தமுமே

நாமின்று போகின்றோம் சத்தியமே

நெஞ்சுக்குள் நின்றாடும் இரத்தினமே

 

 

96. நமக்காய் ஒரு குழந்தை இந்த நானிலம் தவழ்ந்தது

நலிந்த நிலை மாறும் என்னும் நம்பிக்கை மலர்ந்தது

 

ஆராரோ …. கண்ணுறங்கு

உந்தன் ஊரேதோ கண்ணுறங்கு

விண்ணகமோ மண்ணகமோ – இல்லை

இரண்டும் உந்தன் பிறந்தகமோ – நமக்காய்

 

வானின் தூதர்களே இன்று வாழ்த்து பாடுங்களே

விண்ணகத்தில் என்றும் மகிமைதான் – ஆனால்

மண்ணகத்தில் அமைதி எங்கே

மாடடை குடிலில் பிறந்தவனே – இந்த

மானிடர் நடுவே பிறந்தால் என்ன

ஆடுகளே மாடுகளே நீங்கள் மாந்தரினும் சிறந்தவரே – நமக்காய்

 

மாந்தர் மைந்தர்கள் யாம் எங்கள் வாழ்வை எண்ணுகிறோம்

மனித மாண்பு என்னவென்று- முற்றும்

மறந்த கூட்டம் உண்டு இங்கு

மனிதனாய் பிறந்த இறைமகனே எங்கள் மாண்பினை

எமக்கு போர்த்தாயோ

வறுமைநோய் பிளவுகள் இனி வாராதிருக்க செய்யாயோ

– நமக்காய்

 

97. பாடாத ராகங்கள் பாடும்

மீளாத இன்பங்கள் ஆடும் – 2

கேளாத கீதங்கள் கேட்கும்

மேய்ப்பன் வருகை கூறும்

எந்தன் மீட்பர் வருகின்றார் – 3

 

உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலை

தெய்வம் தந்த அழகன்றோ

அன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்

இறைவனின் அழகன்றோ – 2

ஏங்குதென் நெஞ்சமே தாங்கிடும் தஞ்சமே – பாடாத…

 

 

எனக்காய் வந்த இன்பத்தின் நிழலே

இளைப்பை ஆற்றிடுமே

தாகத்தை தீர்க்கும் பேரின்ப ஊற்றே

தாகத்தை தீர்த்திடுமே – 2

அன்பரை காணவே கண்களும் ஏங்குதே

 

98. ஆராதனை ஆராதனை எம் பாலனே ஆராதனை

ஆராதனை ஆராதனை எம் மீட்பரே ஆராதனை – 2

ஆ..ஆ..ஆ   ஆ..ஆ..ஆ  ஆ..ஆ..ஆஆஆ

 

வானமும் பூமியும் படைத்தவா – ஆராதனை

வார்த்தையால் எம்மை நிரப்பவா – ஆராதனை

வல்லமை எம்மில் சேர்க்கவா –  ஆராதனை

வளமும் நலமும் தருபவா –  ஆராதனை

ஆராதனை… ..

ம்..ம்..ம்..ம், ம்..ம்..ம்..ம் ஆ..ஆ..ஆ..ஆஆஆஆ

 

அமைதியில் என்றும் வாழ்பவா – ஆராதனை

அருளை தினமும் பொழிபவா – ஆராதனை

ஆற்றலாய் எம்மில் இருப்பவா – ஆராதனை

ஆனந்த துதியில் மகிழ்பவா – ஆராதனை

ஆராதனை. . . .

99. ஆண்டவரின் நாள் வருகிறது

அகிலமும் புது ஒளி பெறுகிறது

ஆதியிலே அன்று இருந்தது போல

எல்லாம் நலமாகும்

 

வார்த்தை நம்மோடு மனுவாக

வாழ்வில் நம்பிக்கை சுடர் வீசும்

ஆதியிலே அன்று இருந்தது போல

எல்லாம் நலமாகும்

Merry Christmas

Happy New Year

 

பசித்தவரை அவர் நலன் நிரப்பும்

பயப்படுவோர்க்கவர் துணை இருக்கும்

பகுத்தறிவும் பலம் நிறை மனமும்

இறையரசை முழங்கும்

படைத்தவர் நம்மோடு பயணம் செய்ய

பகை விலக்ம் அன்பின் படைகள் எழும்

ஆதியிலே அன்று இருந்தது போல

எல்லாம் நலமாகும்

Merry Christmas

Happy New Year

100.    வான் தந்தையின் சுதனே

விண் மண்ணோடு உறவாடுதே

தேன் சிந்தும் மலரே

கண் தூங்கு தாலாட்டிலே

ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ

ம். . . . ம் . . .

 

தேடி மீட்பளிக்க வந்தாய்

ஈடில்லா ஆனந்தம் தந்தாய்

வீடின்றி குடில் தனில் நீ பிறந்தாய்

வீணான செல்வங்கள் என்றானதோ

உன்னாலே அமைதி உலகெங்கும் நிலவும்

என் வாழ்வில் அருள் மணம் கமழ வைத்தாய் – வான்

 

வஞ்சமில்லாத நெஞ்சம்

மன்னவன் நீ தூங்கும் மஞ்சம்

தஞ்சம் நின் எழில் கொஞ்சும் தாளல்லவா

தாராயோ பொன்னான நல் ஆசியே

குன்றாத வளமும் குறையாத நலமும்

எந்நாளும் வழங்கும் இறைவன் நீயே  – வான்

 

உயிர்ப்பு பெருவிழா பாடல்கள்

 

101.    ஒளியே ஒளியின் ஒளியாம் இறைவொளியை ஏற்றுவோம்

எங்கும் ஏற்றுவோம்

வீடுயெங்கும் எங்கள் வீதியெங்கும்

நாடுயெங்கும் இந்த உலகமெங்கும்

இறையின் அருளால் அருளின் ஒளியை ஏற்றுவோம் (3)

 

 

1. பார்வை வேண்டி ஒளியை தேடும் கண்கள் கோடி இங்கே

போர்வை மூடி உண்மை மறைத்து வாழும் மனங்கள் இங்கே

ஒளி உண்மை நன்மையாம்

ஒளி நீதி நேர்மையாம்     (2)

தனலாய் எரியும் இறையின் ஒளியை ஏற்றுவோம் (3)

 

2. ஒளியில் வாழும் இறைவன் உறவை

மண்ணில் வளரச் செய்வோம்

ஞான கீதம் எங்கும் முழங்க சேர்ந்து பாடிடுவோம்

ஒளி உணவும் உயிருமாய்

ஒளி வாழ்வும் வழியுமாய்       (2)

கதிராய் வீசும் மணமாய் ஒளியை ஏற்றுவோம் (3)

 

3. ஏழை மனதை மகிழச் செய்ய உதவி புரிந்திடுவோம்

இறைவன் அன்பை பரவச் செய்ய முயற்சி செய்திடுவோம்

ஒளி அன்பும் அருளுமாய்

ஒளி அறமும் செயலுமாய்  (2)

மலரும் இறைவனின் அன்பின் ஒளியை ஏற்றுவோம் (3)

102.    ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்

ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்

ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிராம்

ஒவ்வொரு மனிதனும் இன்னொரு ஏசுவாம்

நாம் நம்மையே பலியாய் கொடுப்போம்

இந்த பாரினில் அவராய் வாழ்வோம்

 

பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே

புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய்

நிலைத்ததே

ஏசுவின் பலியில் இறப்பும் உயிர்ப்பும் இனையற்ற சாட்சிகளே(2)

நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் (2)

நாளைய உலகின் விடியலாகவே

 

இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே

இழப்பதை போன்றொரு உயரிய இலட்சியம் எதிலுமே வெல்லுமே

வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைபெறுமே (2)

இதை உணர்வோம்; நம்மை பகிர்வோம் (2)

இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

 

 

103.    இராஜாதி ராஜன் உயிர்த்தெழுந்தார்

அடிமையின் விலங்கினை உடைத்தெரிந்தார்

மரணத்தை வென்றார் மகத்துவம் அடைந்தார்

விடுதலைக் கிடைத்திட உயிர்த்தெழுந்தார்

எழுந்தார் எழுந்தார் உயிர்த்தெழுந்தார்

இறைமகன் யேசு உயிர்த்தெழுந்தார்

 

ஒரு நாள் மறைவேன் மீண்டும் உயிர்ப்பேன்

புதுயுகம் படைப்பேன் என்றார்

இருளகன்றனவே … அல்லேலூயா

ஒளி பிறந்தனவே … அல்லேலூயா

பாறை பிளந்தது, கட்டுகள் அவிழ்ந்தது

கல்லறையிருந்து உயிர்த்தெழுந்தார் – எழுந்தார்

 

மனுமகன் உதிரம் பாவம் போக்கும்

உயிர்களை காக்கும் என்றார் -2

இறைவாக்கினரும் … அல்லேலூயா,

மறைவல்லுனரும் … அல்லேலூயா

அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றிடவே

பிறந்து இறந்து உயிர்த்தெழுந்தார் – எழுந்தார்

 

எனது கைகள் நீங்கள் என்றார், புதுமுகம் புனைவீர் என்றார்

தீமை தகர்த்திடவே … அல்லேலூயா,

அருள் நிறைந்திடவே …அல்லேலூயா

பகைமைகள் ஒழிந்திட, சுயநலம் மாய்த்திட

புதுயுகம் படைக்க நம்மை அழைத்தார் – எழுந்தார்

 

104.    உயிர்த்தார் கிறிஸ்த்து உயிர்த்தார்

இந்த உலகை உயிர்த்துவிட்டார்

வென்றார் கிறிஸ்த்து வென்றார்

இந்த அலகையை வென்றுவிட்டார்

ஆர்ப்பரிப்போமே ஆனந்த்திப்போமே

அல்லேலூயா பாடுவோமே

 

மரணத்தை வென்ற மாவீரன்

மனுக்குலம் மீட்ட இறை மைந்தன்

கல்லறை விட்டு உயிர்த்தெழுந்தார்

கவலைகள் நமக்கு இனி இல்லை

 

மரணத்தை கண்டும் பயமில்லை

மாபரன் இயேசு உயிர்த்துவிட்டார்

பேயின் தலையை மிதித்துவிட்டார்

பிணக்குகள் எல்லாம் போக்கிவிட்டார்

பிற பாடல்கள்

105.    ஆற்றலாலும் அல்ல சக்தியாலுமல்ல

ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே

 

மண்குடம் பொற்குடம் ஆகுமா? ஆகுமே

குறைகுடம் நிறைகுடம் ஆகுமா? ஆகுமே

தண்ணீரும் திராட்சை இரசம்  ஆகுமா? ஆகுமே

திராட்சை இரசம் திரு இரத்தம்  ஆகுமா? ஆகுமே

 

 

செங்கடல் பாதையாய் ஆகுமா? ஆகுமே

செத்தவர் உயிர்த்தெழல் ஆகுமா? ஆகுமே

சிங்கமாடு நட்புறவு ஆகுமா? ஆகுமே

சிறைவாழ்வு திருவாழ்வு ஆகுமா? ஆகுமே

 

 

பாவிகள் மீட்பு பெறல் ஆகுமா? ஆகுமே

பாலைவனம் சோலைவனம் ஆகுமா? ஆகுமே

திருச்சபை ஓர் உடல் ஆகுமா? ஆகுமே

திரு மகன் ஆவியால் ஆகுமா? ஆகுமே

106.    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

திவ்ய மதுரமாமே

அதை தேடிய நாடி ஓடியே வருவேன்

திருச்சபை ஆனோரே – தேன்

 

காசினி தனிலே நேசமாய் தாக

கஷ்டத்தை உத்தரித்தேன்- 2

பாவ கசடத்தை அறுத்து சாபத்தை தொலைத்தார்

கண்டுணர் நீ மனமே – தேன்

 

பாவியை மீட்க தாவிய உயிரை

தாமே ஈந்தவராம் – பின்னும் – 2

நேமியாம் கருணை நிலை வரம் உண்டு

நிதம் துதி என் மனமே – தேன்

 

 

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்

உபாயமாய் நீங்கி விடும் – 2

என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு

கருத்தாய் நீ மனமே – தேன்

 

 

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல

துணைவராம் நேசரிடம் – நீ – 2

அன்பதாய் சேர்ந்தால் அணைத்துன்ணை காப்பார்

ஆசைக்கொள் நீ மனமே – தேன்

 

பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து

போற்று நாமம் – அதை – 2

பிடித்துக்கொண்டால் பேரின்ப வாழ்வை

பெறுவாய் நீ மனமே – தேன்

 

107.    பேதை போல் இருந்து பாடுகிறேன் நான்

பேரருள் புரிவாய் குரு தேவா

 

இலட்சிய வாழ்வை தேடிடும் போது

இடர்களை தாங்கும் வரம் தாராய்

 

எனைப் பிறர் இகழ்ந்து தூற்றிடும் போது

எனை மறந்திருக்கும் வரம் தாராய்

 

புகழ்ச்சியின் ஏணியில் ஏறிடும் போது

பிறரையும் மதிக்கும் வரம் தாராய்

 

தளர்ச்சியும் நோயும் தொடர்ந்திடும் போது

தவத்தினை பேணும் வரம் தாராய்

 

கவலையின் பிடியில் கசங்கிடும் போது

சகித்திட எனக்கு வரம் தாராய்

 

உழைத்து என் உடலும் சோர்ந்திடும் போது

உறவுகள் வளரும் வரம் தாராய்

 

உண்மைகள் பேசி வதைபடும் போது

உடைந்திடாதிருக்க வரம் தாராய்

 

அயலவர் பெருமை அடைந்திடும் போது

அகம் முகம் மலரும் வரம் தாராய்

 

இறைவழி நடக்க முனைந்திடும் போது

என் வழி மறக்க வரம் தாராய்

 

எனைப் பிறரன்பில் இணைத்திடும் போது

இகபர மகிழ்வின் வரம் தாராய்

 

108.    எந்தயே இறைவா திருவடி சரணம்

எந்தயே இறைவா திருவடி சரணம்

எந்தயே இறைவா திருவடி சரணம்

எந்தயே இறைவா திருவடி சரணம்

 

இயேசுவே ஆண்டவா திருவடி சரணம்

இயேசுவே ஆண்டவா திருவடி சரணம்

இயேசுவே ஆண்டவா திருவடி சரணம்

இயேசுவே ஆண்டவா திருவடி சரணம்

 

தூயநல் ஆவியே திருவடி சரணம்

தூயநல் ஆவியே திருவடி சரணம்

தூயநல் ஆவியே திருவடி சரணம்

தூயநல் ஆவியே திருவடி சரணம்

 

மூவொரு இறைவா திருவடி சரணம்

மூவொரு இறைவா திருவடி சரணம்

மூவொரு இறைவா திருவடி சரணம்

மூவொரு இறைவா திருவடி சரணம்

 

109.    மாண்புயர் இந்த அனுமானத்தைத்

தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்

பழைய நியம முறைகள் அனைத்தும்

இனி மறைந்து முடிவு பெறுக

 

புதிய நியம முறைகள் வருக

புலன்களாலே மனிதன் இதனை

அறிய இயலாக் குறையை நீக்க

விசுவாசத்தின் உதவி பெறுக

 

பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்

புகழ்ச்சியோடு வெற்றி ஆர்ப்பும்

மீட்பின் பெருமை மகிமையோடு

வலிமை வாழ்த்து யாவும் ஆக

 

இருவரிடமாய் வருகின்றவராம்

தூய ஆவியானவர்க்கும்

அளவில்லாத சமபுகழ்ச்சி

என்றுமே உண்டாகுக. ஆமென்

 

110.    அருட்திரு தேவ தேவன் போற்றி

அவர்தம் திருநாமம் போற்றி

 

அவர் மகன் ஏசு கிறிஸ்து போற்றி

அவர்தம் திருஅன்பே போற்றி

 

அருட்திரு தூய ஆவி போற்றி

அவர்தம் திருஞானம் போற்றி

 

அருட்திரு அன்னை மரியாள் போற்றி

அவர்தம் திருதூய்மை போற்றி

 

அருட்திரு சூசைமுனியும் போற்றி

அவர்தம் திருவாய்மை போற்றி

 

அருட்திரு தூதர் அமரர் போற்றி

அவர்தம் திருசேவை போற்றி

 

அருட்திரு தேவ தேவன் போற்றி

அவர்தம் திருநாமம் போற்றி

 

111.    ஒவ்வொரு மனிதனும் என் நன்பண்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன்

என் சகோதரன் என் சகோதரன்

வறுமையில் வாழ்பவன் என் நன்பண்

வருத்ததில் இருப்பவன் சகோதரன் (2)

அல்லல் படுபவன் என் நன்பண்

ஆபத்தில் இருப்பவன் சகோதரன்

காரணம் அவனும் மனிதன் (2)

பாராளுமன்ற தேர்தல்

flagஅன்பார்ந்த இறைமக்கள் கவனத்திற்கு,

வரும் 24.04.2014 அன்று நடைபெறும் நமது நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களித்து உங்களின் ஜனநாயக கடைமையை நிறைவேற்றும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தவக்கால பாடல்கள்

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் | Manithanae Nee Mannaga Irukkintai

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ

இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்


|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

என்னை நேசிக்கின்றாயா | Ennai Nesikkintraya

என்னை நேசிக்கின்றாயா – 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா

வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் – 2
தேடி மீட்டிட பிதா அனுப்பினதால்
ஓடி வந்தேன் மானிடனாய்

பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் வா – 2
உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாற வா

பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்

உம்மை நேசிக்கின்றேன் நான் – 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

[print_gllr id=1392]

 

[print_gllr id=1392 display=short]

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

கல்மனம் கரைய கண்களும் பனிக்க | Kal Manam Karaiya Kankalum Panikka

கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கைகளைக் குவித்தேன் இறைவா
என் மனம் வருவாய் இறைவா (2)

என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து
பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு
புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய
இன்னருள் தருவாய் இறைவா -2
பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க

பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர்
வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்
அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2

நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து
நல்லுலகமைப்போம் இறைவா (2) அங்கு
பூவெனும் இதய பீடத்தில் எனையே
பலியாய் அளிப்பேன் இறைவா

 

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி | Kalvari Pookalai Em Karangalil Yenthi

கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் – 2
காணிக்கை உமக்களிக்க – 2
குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்
இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா

இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை
உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (2)
கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்
இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம்

நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை
வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (2)
அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் – உள்ளம்
ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


நெஞ்சத்திலே தூய்மையுண்டோ | Nenjathilae Thooimaiyundo

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

இயேசு வருகின்றார்.!
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்.!

வருந்தி சுமக்கும் பாரம் – உன்னை
கொடிய இருளில் சேர்க்கும் -2
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் -2

குருதி சிந்தும் நெஞ்சம் – உன்னை
கூர்ந்து நோக்கும் கண்கள் – 2
செய்த பாவம் இனி போதும்
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2

மாய லோக வாழ்வு – உன்னில்
கோடி இன்பம் காட்டும் – 2
என்னில் வாழும் அன்பர் இயேசு
உன்னில் வாழ இடம் வேண்டும் – 2

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

குருத்து ஞாயிறு பாடல்கள்

எபிரேயர்களின் சிறுவர் குழாம் | Ebiraeyargalin Siruvar Kulam

எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒலிவக் கிளைகள் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஓசான்னா
என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர் கொண்டனரே

மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன
பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும்
அவர் தம் உடைமையே
ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை
நிலை நிறுத்தியவர் அவரே
ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே

ஆண்டவர் மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்?
மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன் பயனற்றதில்
மனத்தைச் செலுத்தாதவன்
தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்

இவனே ஆண்டவரிடம் ஆசி பெறுவான்
இவனே தன்னைக் காக்கும்
ஆண்டவரின் மீட்பு அடைவான்
இறைவனைத் தேடும் மக்களினம் இதுவே
யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே

வாயில்களே உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்
பழங்காலக் கதவுகளே உயர்ந்து நில்லுங்கள்
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்
போரில் வல்லவரான ஆண்டவரே இவர்

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

அன்பும் நட்பும் எங்குள்ளதோ | Anbum Natpum Engullatho

அன்பும் நட்பும் எங்குள்ளதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்

கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம்
ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் – யாம்
அவரில் மகிழ்ச்சி கொள்வோமே

ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம்
அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத் துடனேயாம்
ஒருவரை ஒருவர் நேசிப்போம்

எனவே ஒன்றாய் நாமெல்லாம்
வந்து கூடும் போதினிலே
மனதில் வேற்றுமை கொள்ளாமல்
விழிப்பாய் இருந்து கொள்வோமே

தீய சச்சரவுகள் ஒழிந்திடுக
பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக
நமது மத்தியில் நம் இறைவன்
கிறிஸ்து நாதர் இருந்திடுக

முக்தி அடைந்தோர் கூட்டத்தில்
நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின்
மகிமை வதனம் காண்போமே

முடிவில்லாமல் என்றென்றும்
நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாத மாண்புடைய
பேரானந்தம் இதுவேயாம்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர் | En Iraiva En Iraiva Ennai Yen Kai Negizhntheer

என் இறைவா என் இறைவா
ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2)

என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை
ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்
இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்

ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன
பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்
அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்

என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்
என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள்
ஆனால் நீரோ ஆண்டவரே
என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்
எனக்கு துணையான நீர் எனக்கு
உதவி புரிய விரைந்து வாரும்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

 
புனித  வியாழன் பாடல்கள்

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் | Ovvoru Pakirvum Punitha Viyalanam

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிராம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்
நாம் நம்மையே பலியாய் கொடுப்போம்
இந்த பாரினில் அவராய் வாழ்வோம்

இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை போன்றொரு உயரிய இலட்சியம் எதிலுமே வெல்லுமே
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைபெறுமே (2)
இதை உணர்வோம்  நம்மை பகிர்வோம் -2
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
ஏசுவின் பலியில் இறப்பும் உயிர்ப்பும் இணையற்ற சாட்சிகளே(2)
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் -2
நாளைய உலகின் விடியலாகவே

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது | Aandavarae Neero En Pathangalai Kazhuvuvathu

ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது
ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?
அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

நான் செய்வது இன்னதென்று
உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்
ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?
அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

பாஸ்கா உணவினை அருந்திட | Pasca Unavai Arunthida

பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து
பந்தியிலே அமர்ந்திருந்தார்
தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி
சீடரிடம் எழுந்து வந்தார்

குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு
கழுவியே துடைத்து விட்டார் பணி வாழ்வின் பெருமை சொன்னார்

சீமோன் இராயப்பரை நாடி வந்து பாதங்களைக் கழுவிட
இயேசு வந்த நேரத்திலே
இராயப்பரோ பாதங்களை இயேசுவிடம் காட்டாது
உரிமையில் கடிந்து கொண்டார்

என்னுடைய பாதங்களை என் ஆண்டவர் கழுவுவதா
ஒருபோதும் அனுமதியேன் ஒரு காலும் சம்மதியேன்

நான் செய்வது இன்னதென்று இப்போது புரியாது
பின்னரே புரிந்து கொள்வாய்
உன் பாதம் கழுவிட அனுமதியாவிடில்
என்னோடு பங்கில்லை

ஆண்டவரே போதகரே என் கால்களை மட்டுமல்ல
என் கைகளை தலையையுமே முழுவதும் கழுவி விடும்

முழுவதும் குளித்தவன் கால் மட்டும் கழுவினால்
போதுமென்று அறியாயோ ?
நான் செய்வதன் அர்த்தம் என்னவென்று உமக்கு
இந்நேரம் புரியாதோ ?

நான் ஆண்டவர் போதகர் தான் முன் மாதிரி காட்டுகிறேன்
நீங்கள் ஒருவர் ஒருவரது பாதங்களைக் கழுவுங்கள்

இயேசு சொன்ன வார்த்தைகளை மனதில் இருத்தி
நாமும் வாழ்ந்திடுவோம்
பிறர் பணி செய்து வாழ்வதே நம் வாழ்வின் கடமை
சீடரின் தகுதியென்போம் (2) – 3

||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

புனித வெள்ளி பாடல்கள்

ஆணி கொண்ட உன் காயங்களை | Aani Konda Un Kayangalai

ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் – 2
பாவத்தால் உம்மைக் கொன்றேனே – 2
ஆயனே என்னை மன்னியும் – 2

வலது கரத்தின் காயமே – 2
அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே – 2
கடவுளின் திரு அன்புருவே

அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாதக் காயமே – 2
பலன் மிகத் தரும் நற்கனியே

அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே – 2
திடம் மிகத் தரும் தேனமுதே

அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே – 2
அருள் சொரிந்திடும் ஆலயமே

அன்புடன் முத்தி செய்கின்றேன்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல் | Enathu Janamae Naan Unakku Enna Theengu Seithaen Sol

எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்
எதிலே உனக்கு துயர் தந்தேன் எனக்கு பதில் நீ கூறிடுவாய்

எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே
அதனாலே உன் மீட்பருக்குச்
சிலுவை மரத்தை நீ தந்தாய் ! – எனது சனமே

நாற்பது ஆண்டுகள் நான் உன்னை
பாலைநிலத்தில் வழிநடத்தி
உனக்கு மன்னா உணவூட்டி
வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன்
அதனாலோ உன் மீட்பருக்கு
சிலுவை மரத்தை நீ தந்தாய் – எனது சனமே

நான் உனக்காக எகிப்தியரை
அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை
வதைத்து ஒழித்தேன் நீ என்னைக்
கசையால் வதைத்துக் கையளித்தாய் – எனது சனமே

பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி
எகிப்தில் நின்றுனை விடுவித்தேன்
நீயோ என்னைத் தலைமையாம்
குருக்களிடத்தில் கையளித்தாய்! – எனது சனமே

நானே உனக்கு முன்பாக
கடலைத் திறந்து வழி செய்தேன்
நீயோ எனது விலாவை ஓர்
ஈட்டியினாலே திறந்தாய்! – எனது சனமே

மேகத்தூணில் வழிகாட்டி
உனக்கு முன்னே நான் சென்றேன்
நீயோ பிலாத்தின் நீதிமன்றம்
என்னை இழுத்துச் சென்றாயே! – எனது சனமே

பாலைவனத்தில் மன்னாவால்
நானே உன்னை உண்பித்தேன்
நீயோ என்னைக் கன்னத்தில்
அடித்துக் கசையால் வதைத்தாயே! – எனது சனமே

இனிய நீரைப் பாறையினின்று
உனக்குக் குடிக்கத் தந்தாயே!
நீயோ கசக்கும் காடியை
எனக்குக் குடிக்கத் தந்தாயே! – எனது சனமே

கானான் அரசரை உனக்காக
நானே அடித்து நொறுக்கினேன்
நீயோ நாணல் தடி கொண்டு
எந்தன் சிரசில் அடித்தாயே! – எனது சனமே

அரசர்க்குரிய செங்கோலை
உனக்குத் தந்தது நானன்றோ
நீயோ எந்தன் சிரசிற்கு
முள்ளின் முடியைத் தந்தாயே! – எனது சனமே

உன்னை மிகுந்த வன்மையுடன்
சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்
நீயோ என்னை சிலுவை எனும்
தூக்கு மரத்தில் தொங்க வைத்தாய்! – எனது சனமே

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

நம்பிக்கை தரும் சிலுவையே | Nambikkai Tharum Siluvaiyae

நம்பிக்கை தரும் சிலுவையே
நீ மரத்துட் சிறந்த மரம் ஆவாய்
உன்னைப் போன்று தழை
பூ கனியை எந்த காவும் ஈந்திடுமோ?
இனிய சுமையை இனிய ஆணியால்
இனிது தாங்கும் மரமே நீ

மாட்சி மிக்க போரின் வெற்றி
விருதை நாவே பாடுவாய்
உலக மீட்பர் பலியதாகி
வென்ற விதத்தைக் கூறியே
சிலுவைச் சின்னமதைப் புகழ்ந்து
ஜெயத்தின் கீதம் ஓதுவாய் (நம்பிக்கை)

தீமையான கனியைத் தின்று
சாவிலே விழுந்த நம்
ஆதித் தந்தைக்குற்ற தீங்கை
கண்டு நொந்த சிருஷ்டிகர்
மரத்தால் வந்த தீங்கை நீக்க
மரத்தை அன்றே குறித்தனர் (இனிய)

வஞ்சகன் செய் சூழ்ச்சி பலவும்
சூழ்ச்சியால் மேற்கொள்ளவும்
பகைவன் செய்த கேட்டினின்று
நன்மை விளையச் செய்யவும்
வேண்டுமென்று நமது மீட்பின்
ஒழுங்கில் குறித்து இருந்தது (நம்பிக்கை)

எனவே புனித கால நிறைவில்
தேவபிதா தம் மைந்தனை
விண்ணில் நின்று அனுப்பலானார்
அன்னை கன்னி வயிற்றிலே
ஊன் எடுத்து வெளிவந்தாரே
மண்ணகத்தைப் படைத்தவர் (இனிய)

இடுக்கமான முன்னட்டியிலே
கிடந்து குழந்தை அழுகிறார்
தேவ உடலைத் துகிலில் பொதிந்து
சுற்றி வைத்து கன்னித்தாய்
இறைவன் அவர்தம் கையும் காலும்
கச்சையாலே பிணைக்கின்றார் (நம்பிக்கை)

முப்பதாண்டு முடிந்த பின்னர்
உடலின் காலம் நிறைவுற
மீட்பர் தாமாய் மனமுவந்து
பாடுபடவே கையளித்தார்
சிலுவை மரத்தில் பலியாகிடவே
செம்மறி உயர்த்தப் படலானார் (இனிய)

கசந்த காடி அருந்திச் சோர்ந்து
முட்கள் ஈட்டி ஆணிகள்
மென்மை உடலை துளைத்ததாலே
செந்நீர் பெருகிப் பாயவே
விண்ணும் மண்ணும் கடலும் உலகும்
அதனால் தூய்மை ஆயின (நம்பிக்கை)

வளர்ந்த மரமே உன்கிளை தாழ்த்தி
விரைத்த உடலைத் தளர்த்துவாய்
இயற்கை உனக்கு ஈந்த வைரம்
இளகி மென்மை ஆகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின்
உயர்ந்த தணித்துத் தாங்குவாய் (இனிய)

மரமே நீயே உலகின் விலையைத்
தாங்கத் தகுதியாகிய கிளை
திருச்செம்மறியின் குருதி உன்மேல்
பாய்ந்து, தோய்த்ததாதலால்
புயலில் தவிக்கும் உலகிற்கெல்லாம்
புகலிடம் நீ, படகும் நீ (நம்பிக்கை)

பரம திருத்துவ இறைவனுக்கு
முடிவில்லாத மங்களம்
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
சரிசமப் புகழ் பெறுகவே
அவர்தம் அன்பின் அருளினாலே
நம்மைக் காத்து மீட்கின்றார் – ஆமென்.

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் | Thanthaiyae Um Kaiyil En Aaviyai Oppadaikkintren

தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்

ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்
நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்
உம்முடைய நீதியின்பழ என்னை விடுவித்தருளும்
உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே
வார்த்தையில் தவறாத இறைவா நீர் என்னை மீட்டருளும்.

என் எதிரிகள் அனைவருடையவும் பழிச் சொல்லுக்க நான் ஆளானேன்
என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்
எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்
வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்
இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன்
உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்

ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்
நீரே என் கடவுள் என்றேன் என் கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே
என் எதிரிகளிடமிருந்தும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும்
நீர் என்னை விடுவித்தருளும்

கனிந்த உம்திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்
உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்
ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே மனத்திடன் கொள்ளுங்கள்
உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

திருச்சிலுவை மரமிதோ | Thiru Siluvai Maramith

 

திருச்சிலுவை மரமிதோ
குரு :திருச்சிலுவை மரமிதோ
இதிலேதான் தொங்கியது
உலகத்தின் இரட்சணியம்
எல் : வருவீர் ஆராதிப்போம்

 

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


ஊர்வலம் போகுது..இறுதி ஊர்வலம் போகுது | Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu

ஊர்வலம் போகுது – 3 இறுதி ஊர்வலம் போகுது
அன்று இறைவனின் ஊர்வலம் இன்று மனிதனின் ஊர்வலம் -2
அதில் மாண்புகள் மலர்ந்திடும் புது வாழ்வுகள் பிறந்திடும்

சுமையில்லாமல் பயணமில்லை
சுவையில்லாமல் வாழ்வுமில்லை (2)
சுமைகளை விரும்பி ஏற்றிடும் தோள்களில்
சுமையும் சுவையாகும் இறைவனின் வழியாகும் – 2

வேதனையில்லாமல் பயணமில்லை
வெற்றியில்லாமல் வாழ்வுமில்லை (2)
துன்பமாம் சிலுவை வெற்றியின் சின்னம்
வேதனை உரமாகும் தேவனின் வழியாகும் – 2

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

சிலுவைப்பாதை பாடல்கள் | Siluvai Pathai Padalgal

எனக்காக இறைவா எனக்காக | Enakkaga Iraiva Enakkaga

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

1. பழிகளை சுமத்தி பரிகசித்தார் – உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்

2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் – உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்

3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு – மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு

4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே – உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்

5. மறுத்திட முடியா நிலையாலே – சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு

6. நிலையாய் பதிந்தது உம் வதனம் – அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் – அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு – அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் – கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்

10. உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் – இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்

11. பொங்கிய உதரம் வடிந்திடவே – உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே

12. இன்னுயிர் அகன்றது உமை விட்டு – பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு

13. துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து – அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு – நீர்
அடங்கிய கல்லறை உமதன்று

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

எங்கே சுமந்து போகீறீர் | Engae Sumanthu Pogireer

எங்கே சுமந்து போகீறீர்?
சிலுவையை நீர் எந்கே சுமந்து போகிறீர்
பொங்கும் பகைவராலே, அங்கம் நடு நடுங்க
எங்கே போகிறீர்

1. மனித பாவத்தாலே, மரணத்தீர்வை பெற்று
தூய செம்மறிபோலே, துக்கத்துடன் வருந்தி
எங்கே போகிறீர்

2. பாரச்சிலுவை மரம், பாவத்தின் சுமை தாங்கி
பாசத்துடன் அனணத்து, பாரத்துடன் நடந்து
எங்கே போகிறீர்

3. கல்வாரி மலை நாடி, தள்ளாடி தரை வீழ்ந்து
எல்லோரின் பாவங்களை, தனிமையால் சுமந்து
எங்கே போகின்றீர்

4. மாமரி கன்னி அன்னை, மகனின் கோலங் கண்டு
மாதுயருடன் வாடி, மனம் நொந்து வருந்த
எங்கே போகிறீர்

5. உதிரம் ஆறாய் சிந்தி, உள்ள உரமிழந்து
சீரேன் சீமோன் துணையை, ஏற்று வழி நடந்து
எங்கே போகிறீர்

6. கர்த்தரே உம் வதனம், இரத்தக் கறையால் மங்கி
உத்தமி வெராணிக்கம்மாள், வெண் துகிலால் துடைத்தும்
எங்கே போகிறீர்

7. பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த, பாரச் சுமையினாலே
மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து
எங்கே போகிறீர்

8. புண்ணிய ஸ்தீரிகள் பலர், புலம்பி அழும் வேளை
ஆறுதல் கூறி நீரும், நேசக்கண்ணீர் சொரிந்து
எங்கே போகிறீர்

9. சிலுவை பாரத்தாலே, மாமரி ஏகமைந்தன்
மூன்றாம் முறை தரையில், முகம் படிந்தெழுந்தும்
எங்கே போகிறீர்

10. நீடாடை கழற்றவே, கோடாகோடிக் காயங்கள்
இரத்தம் ஆறாய் பெருகி, வேதனையால் வருந்தி
எங்கே போகிறீர்

11. நீட்டிய கால் கரத்தில், நீண்ட இரும்பாணிகள்
நிஷ்ட யூதர் அறைந்தும், நேசத்திலே வெந்து
பலி-யாகினீர்

12. சிலுவை பீடமேறி, மும்மணி நேரந் தொங்கி
அரிய பிதாவை வேண்டி, ஆருயிர் ஒப்படைத்து
பலி-யாகினீர்

13. மரி தாய் மடிமீதில், மரித்த மகன் தாங்கி
ஏழு சோக வாட்களால், ஊடுருவி வருந்தி
தாயே நின்றீர்

14. கர்த்தரின் உடல்தனை, கல்லறைக்குள் அடக்கி
உத்தானம் ஜீவனுமாய், உயிருடன் எழுந்து
எப்போ வருவீர்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

நிந்தையும் கொடிய வேதனையும் | Ninthaiyum Kodiya Vethanaiyum

நிந்தையும் கொடிய வேதனையும்
நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை
சிந்தையில் கொண்டு தியானிக்கவே
தினம் அருள் புரிவீர் ஆண்டவரே

சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு

1. இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம்
இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம்
மாசற்ற செம்மறி ஆனவர்க்கு
மரண தண்டனையாம் விதித்து நின்றோம்
அவரோ மௌனம் காத்துநின்றார்
அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார் -சிலுவையிலே

2. பாவத்தின் சுமையாம் சிலுவைதனை
பரமனின் திருவுளம் நிறைவுறவே
ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார்
ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி
எனைப்பின் செல்பவன் தனை மறுத்து
சிலுவையை எடுத்துப் பின் செல்கவென்றார் -சிலுவையிலே

3. சிலுவையின் பாரம் அழுத்தியதால்
திருமகன் தரையில் விழலானார்
வலுவற்ற அடியோர் எழுந்திடவே
வல்லப தேவா வரமருள்வீர்
எமைப் பலப்படுத்தும் அவராலே
எல்லாம் செய்திடக் கூடுமன்றோ -சிலுவையிலே

4. உதிரம் வியர்வைத் தூசியினால்
உருவிழந்திருந்த தன் மகனை
எதிர்கொண்டு வந்த அன்னை மனம்
இயம்பருந் துயரால் கலங்க வைத்தோம்
அந்நிய காலம் வரையெங்கள்
அடைக்கலமாய் நீ இருந்திடம்மா -சிலுவையிலே

5. உம் திருச்சிலுவையைச் சுமந்து செல்ல
உதவிய சீமோன் போல் யாமும்
எம் அயலார்க்குத் தயங்காமல்
என்றுமே உதவிடச் செய்தருள்வீர்
நிரந்தரமாகப் பிறரன்பில் நிலைத்திடும்
வரம் தர வேண்டுகின்றோம் -சிலுவையிலே

6. துகள்படிந்திருந்த திருமுகத்தைத்
துணிந்து வெரோணிக்காள் துடைக்க வந்தாள்
இகமென்ன சொல்லும் என நினைந்து
இழந்திடலாமோ விசுவாசம்
இயேசுவை மனிதர் முன் ஏற்றுக்கொள்வோர்
எய்துவர் அழியாப் பேரின்பம் -சிலுவையிலே

7. மீண்டும் மீண்டும் பாவத்திலே
விழுந்திடும் பாவியை மீட்டிடவோ
ஈடிணையில்லா இறைமகனார்
இவ்விதம் புழுதியில் விழலானார்
நமை நிதம் இறைவன் மன்னிப்பதால்
நாமும் பிறரை மன்னிப்போம் -சிலுவையிலே

8. எங்கணும் நன்மை செய்தவர்க்கு
ஏனிந்தக் கோலம் என வருந்திப்
பொங்கிடும் கடல்போல் அழுதரற்றிப்
புண்ணிய மாதரும் புலம்பினரே
அழுகின்ற பேர்கள் பேறுபெற்றோர்
ஏனெனில் ஆறுதல் அடைந்திடுவர் -சிலுவையிலே

9. அளவற்ற களைப்போ பெருந்துயரோ
அடியற்ற மரம்போல் விழலானார்
உளந்தொறும் தாழ்ச்சி தழைத்திடவே
உயர்பரன் அடிமை போல் விழலானார்
தயையுயர்த்திடுவோன் தாழ்வடைவான்
தனைத் தாழ்த்திடுவோன் உயர்வடைவான் -சிலுவையிலே

10. உடையினை சேவகர் பிடித்திழுத்து
உரித்திடும் வேளை காயமெல்லாம்
மடைதிறந்தோடும் வெள்ளமென
மறுபடி உதிரம் சொரிந்ததையோ
அந்நியரும் வழிப்போக்கரும் நாம்
அடக்குவோம் தீய ஆசைகளை -சிலுவையிலே

11. கழுமரம் என்ற சிலுவையிலே
களங்கமில்லாத இறைமகனை
விழுமிய நலம் பல புரிந்தவரை
வெறுத்திருப்பாணியால் அறைந்து வைத்தோம்
ஒரு கணமேனும் இயேசுவேயாம்
உமைப் பிரியாமல் வாழச் செய்வீர் -சிலுவையிலே

12. நண்பனுக்காக தன்னுயிரை
நல்குவதினுமேலான அன்பு
கொண்டவர் யாருமே இல்லையன்றோ?
கொடுத்தார் இயேசு தம் உயிர் நமக்காய்
தமையன்பு செய்தார் நமக்காக
தமைமுழுதும் அவர் கையளித்தார் -சிலுவையிலே

13. மண்ணில் கோதுமை மணி விழுந்து
மடிந்தால் தானே பலன் அளிக்கும்
விண்ணில் வாழ்வு நமக்கருள
விருப்புடன் இயேசு உயிர்துறந்தார்
வியாகுல அன்னை மடிவளரும்
மீட்பரே எம்மைக் காத்தருள்வீர் -சிலுவையிலே

14. உலகின் ஒளியாய்த் தோன்றியவர்
ஒரு கல்லறையுள் அடங்கிவிட்டார்
விலகும் மரண இருள் திரையும்
விளங்கும் கிறிஸ்துவின் அருள் ஒளியால்
கிறிஸ்துவே எனக்கு உயிராகும்
மரணம் எனக்கு ஆதாயம் -சிலுவையிலே

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

டெங்கு காய்ச்சல் Dengue Fever

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
What is Dengue Fever? 

டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியினால் உண்டாகும் நோயாகும். சில சமயங்களில் நோயின் போக்கு தீவிரமாகும் போது மூக்கு, பல்ஈறு மற்றும் தோலிலிருந்து இரத்தம் வடிதல் உண்டாகும். காபி கொட்டை நிறத்தில் வாந்தியோ அல்லது கறுப்பு நிறத்தில் மலமோ வெளியேறும். இதிலிருந்து வயிற்றுக்குடலினுள் இரத்தம் வடிகிறது எனக் கண்டு கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தம் வடிதல் இரண்டுமிருப்பதை டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் என்கிறோம். சில சமயம் நோயாளிக்கு டெங்கு ஷாக் வரலாம்.

நான் எப்போது டெங்கு காய்ச்சல்தானா என சந்தேகிக்க வேண்டும்?

 • திடீரென்று காய்ச்சல் வரும்போது (103f-105f)
 • காய்ச்சலுடன் தலைவலி, கண்களில் பின்புறம் வலி, உடம்பு வலி, தோல் சினைப்பு மற்றும் வாந்தி வருதல், வயிறு வலி, சிறு குழந்தைகளுக்கு வலிப்பும் வரலாம்.
 • காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் இருத்தல்
 • திடீர் திடீரென்று காய்ச்சல் வருதல்.
 • காய்ச்சல் வந்தபின் மிகவும் அசதியாக இருத்தல்

காய்ச்சலில் நிறைய வகைகள் உள்ளன. எப்போது டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்க வேண்டும்?

 • கண்களில் பின்புறம் வலி
 • தசை வலி
 • மூட்டு வலி
 • தோலில் சினைப்பு
 • வயிறு வலி, வாந்தி

டெங்கு காய்ச்சல் மூட்டுகளையும் பாதிக்கின்ற காரணத்தால் அதனை எலும்பு முறிவு காய்ச்சல் எனவும் கூறலாம்.

டெங்கு காய்ச்சல் நேரிடக் கூடிய நோயாளிக்கும் டெங்கு காய்ச்சல் என சந்தேகிக்கிற நோயாளிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

இரத்த அடர்த்தியின் அளவு டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளிக்கு குறைவாகவே இருக்கும். நோயாளிக்கு இரத்த சோகை இருந்தால் அவை வேறுபடும்.

டெங்கு காய்ச்சல் வந்த நோயாளிக்கு மீண்டும் அந்த நோய் வர வாய்ப்புகள் உள்ளதா?

வர வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அந்த வைரஸ் கிருமியை சார்ந்த 4 வகை நோய்க்கிருமிகள் உள்ளன. எனவே ஒரு வகை நோய்க்கிருமியினால் உண்டாகக் கூடிய டெங்கு காய்ச்சல் மறுமுறை வேறு வகை நோய்க்கிருமியினால் உண்டாகும். எனவே ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் ஒருமுறைக்கும் மேல் டெங்கு காய்ச்சல் வரலாம்.

டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த ஏதாவது சோதனைகள் உள்ளதா?

நேரிடையாகவோ (அ) மறைமுகமாகவோ ஆய்வுக் கூடங்களில் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த முடியும். இந்த ஆய்வுகள் டெங்கு தொற்று நோயை உறுதிப்படுத்துகின்றன. மேலும் சில ஆய்வுகளை உபயோகப்படுத்தியும் டெங்கு காய்ச்சலை உறுதி செய்யலாம். ஆனால் அந்த ஆய்வுக்கூடங்கள் முறையான அனுமதி பெற்ற ஆய்வுக் கூடங்களாக இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது.

கொசுக்கடியின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. எடீஸ் எஜிப்டி வகை கொசுக்கள் இந்த வகை கொசுக்கள் ஒருவித வெள்ளைநிற உடம்பு மற்றும் கால்களுடன் இருக்கும். இதனை ஒரு பாமரன் கூட கண்டுபிடிக்க இயலும். இந்த வகை கொசுக்கள் நீரில் வசிப்பவை. மற்றும் 100-200 மீ வரை, பறக்கும் தன்மை கொண்டவை. இந்த கொசு, டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளியின் இரத்தம் உறிஞ்சும்போது டெங்கு வைரஸ் கிருமியினையும் பெற்றுவிடுகிறது.

டெங்கு காய்ச்சல் ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுமா?

இல்லை. கொசுக்கடியின் மூலமாக மட்டுமே டெங்கு நோய்க்கிருமி பரவுகின்றது.

நோய் தொற்றியபின் டெங்கு காய்ச்சல் எவ்வாறு உண்டாகிறது?

நோய்க்கிருமி தொற்றியவுடன் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடைகின்றன. போதிய எண்ணிக்கையில் பெருக்கம் அடைந்தவுடன் அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. இது 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகள் உண்டாகின்றன.

டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவர் நோயாளிபோல் தோற்றமளிக்காமல் இருப்பாரா?

ஆம். சிலருக்கு இது எவ்வித அறிகுறியையும் உண்டாக்குவதில்லை. எல்லோருக்கும் அல்லாமல் 4 முதல் 5 பேருக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. மேலும் சிலருக்கு சில அறிகுறிகள் மட்டுமே இருக்கும்.

டெங்கு காய்ச்சலை வீட்டிலேயே குணப்படுத்த முடியுமா?

முடியும். மருத்துவரிடம் ஆலோசித்து வீட்டிலேயே நன்கு ஓய்வெடுத்து நீராகாரங்களும், சுத்தமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீராகாரங்கள் நிறைய எடுப்பதன் மூலம் டெங்கு இரத்தக்கசிவு நோயையும் தவிர்க்க இயலும். மேலும் அபாய அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரிடம் கொண்டு போக வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவ ஆலோசனை என்ன? இதனை குணப்படுத்த முடியுமா?

டெங்கு காய்ச்சலுக்கென தனியாக மருத்துவ சிகிச்சை இல்லை. தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் இதற்கு உதவாது. பாரசிட்டமால் மருந்து காய்ச்சலுக்கும், மூட்டுவலிக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின், பூரூபென் போன்ற மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் இரத்தக்கசிவினை தடுக்க இயலும். எனவே மருத்துவர்கள் நோயாளிக்கு மருந்துகளை கொடுக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.

டெங்கு காய்ச்சலினால் அபாயங்கள் உண்டா?

டெங்கு காய்ச்சலினால் இரத்த குழாய்களுக்கு தீங்கு ஏற்படும். இரத்தக்கசிவு. இரத்த அடர்த்தி குறைதல் முக்கியமான உறுப்புகளில் இரத்தம் வடிதல் ஏற்படும்.

டெங்கு காய்ச்சலினால் இறப்பு உண்டாகுமா?

டெங்கு காய்ச்சலினை சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால் முறையான சிகிச்சை கொடுக்கவில்லையென்றால் இரத்தக்கசிவு நோய் மற்றும் டெங்கு ஷாக் ஏற்படுவதை தடுக்க இயலாது. சிலர் இறக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே டெங்கு காய்ச்சலினை முறையான சிகிச்சையின் மூலம் ஒரு உயிரினை காப்பாற்ற இயலும்.

டெங்கு நோயாளி எப்போது மருத்துவ உதவிக்கு அணுக வேண்டும்?

டெங்கு இரத்தக்கசிவு நோய் உண்டாகும்போது (அ) டெங்கு ஷாக் இருந்தாலும் காய்ச்சல் வந்து 3 முதல் 5 நாட்களுக்குள் மருத்துவரை அணுக வேண்டும். சிலசமயம் காய்ச்சல் இருக்காமல் உடலின் வெப்பநிலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். இதனால்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதாக நாம் தவறாக நினைக்கிறோம். எனவே இந்த சமயம்தான் மிகவும் அபாயகரமானது.

மிகவும் வயிற்றுவலி, வாந்தி எடுத்துக் கொண்டே இருத்தல், சிறு சிறு சிவப்பு (அ) ஊதா நிறத்தில் கொப்பளங்கள் மூக்கில் இரத்தம் வடிதல், ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம் வருதல் இவையெல்லாம் அபாய அறிகுறிகள் ஆகும். எனவே மிகவும் வயிற்றுவலி இருந்தாலோ, வாந்தி தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு உறுப்புகளில் வரும்வரை பொருத்திருந்தால் அபாயகரமானதாகும்.

டெங்குவிற்கு ஏதாவது தடுப்பூசி இருக்கின்றதா?

ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் ஆய்வுகள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சிலகாலம் பிடிக்கும்.

டெங்கு காய்ச்சினால் நீண்டகால பாதிப்புகள் உண்டா?

1-2 வாரங்களில் முழுமையான குணம் அடைந்து வருவார்கள். சிலருக்கு பல வாரங்களுக்கு அசதிகள் இருக்கும்.

டெங்கு வைரஸை பரப்பும் கொசு எங்கு வாழ்கிறது?

இந்த கொசு, எடீஸ் எஜிப்டி இருட்டு இடங்களிலும் வீட்டை சுற்றிலும் வாழ்கிறது. பெண் கொசு தேங்கி கிடக்கும் நீரின் மேற்பரப்பிலும் வீட்டைச் சுற்றிலும் முட்டையிடுகிறது. இந்த முட்டை 10 நாளில் வளர்ச்சியடைந்து லார்வாக்களை உண்டு செய்யும்.

இந்த கொசு உற்பத்தியாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?

 • டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களில் கடிக்கும். அதிகப்படியாக சூரிய உதயத்தில் இருந்து 2 மணி நேரம் வரையிலும், சூரியன் மறையக் கூடிய மாலை வேளைகளிலும் கடிக்கும்.
 • முழுக்கை ஆடைகளையும் நீண்ட ஆடைகளை அணிந்து உடலினை நன்றாக மூடுவதன் மூலம் கொசுக்கடியின தவிர்க்க இயலும்.
 • கொசுவலை, கொசுக்களை கொல்லும் காயில் முதலியவற்றை உபயோகிக்கலாம். குழந்தை மற்றும் முதியவர்க்கு உபயோகப் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
 • கொசுவர்த்தி மற்றும் மின்சார ஆவியாகக் கூடிய மேட்டுகள் உபயோகப்படுத்தலாம்.
 • கொசு வலை பகலில் தடுக்க மிகவும் நல்லது. தற்போது மருந்து உபயோகப்படுத்திய கொசுவலைகள் மலேரியா காய்ச்சல் தடுப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன.

டெங்கு நோயாளிக்கு அவற்றைப் பரவச் செய்யாமல் தடுக்க ஏதேனும் அறிவுரை உள்ளதா?

டெங்கு காய்ச்சல் அடுத்தவருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த காய்ச்சல் உள்ள நோயாளி கொசுக்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். எனவே கொசு விரட்டியை உபயோகிக்கவேண்டும். கொசுவர்த்தி, காயில்கள் போன்றவைகளையும் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.

டெங்கு பரவியுள்ள பகுதிக்கு பயணம் செய்பவற்கு ஆலோசனை உண்டா?
பயணத்தை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் சிகிச்சை என்ன?

டெங்கு நோய் இருப்பதாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

நோயின் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

இரத்த அடர்த்தி குறைந்தால் இரத்தம் கொடுக்க வேண்டும். இரத்த அடர்த்தியின் அளவு முன் இருந்ததை விட 20% அதிகரித்தால் இரத்தக் குழாய்களின் மூலம் நீர் சத்தை அதிகரிக்க வேண்டும்.

சிகிச்சையின் போது நோயாளிகள் தவிர்க்க வேண்டியன எவை?

ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை சாப்பிடக்கூடாது. இது இரத்தத்திட்டுகளை குறைவு செய்யும். மற்றும் இரத்தக்சிவு உண்டாகும்.

டெங்கு காய்ச்சல் இருப்பதை அறிவிப்பதில் உங்கள் அறிவுரை என்ன?

டெங்கு காய்ச்சல உள்ள நோயாளிகளையும், இருப்பதாக சந்தேகப்படுபவர்களையும் உடனடியாக சுகாதார துறைக்கு அனுப்ப வேண்டும். இரத்தம் சேகரிக்கும்போது, அதனை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை சுகாதார ஆலோசகரின் ஆலோசனை பெற்றபின் செய்ய வேண்டும்.

டெங்கு காய்ச்சலை தடுப்பதில் பொது மக்களின் பங்கு என்ன?

பொது மக்கள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை தவிர்க்க முதலில் கொசு உற்பத்தியினை தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எனவே கொசுக்கள் பறக்கும் வேகம் மிக குறைவாக இருப்பதினால் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றியிருக்கும் இடங்களை சுத்தம் செய்வதின் மூலம் கொசுக்கள் நீரில் தேங்குவதை தவிர்க்கலாம்.

மிகவும் முக்கியம் – கொசுக்கள் முட்டையிடும் நீர் தேங்குவதை தடுத்தல்

டெங்கு காய்ச்சல் பெருவாரியாக பரவினால் என்ன செய்ய வேண்டும்?

வீட்டைச் சுற்றியுள்ள நீர் தேங்குவதை தவிர்த்தலே மிகவும் முக்கியமான பணியாகும். கொசு மருந்தை தெளிக்க வேண்டும்.

டெங்கு பொது சுகாதாரத்த்தின் பெரிய பிரச்சினையாக உள்ளதா?

ஆம். கடந்த 1999 மற்றும் 2003 ஆண்டுகளில், டெங்கு காய்ச்சலின் பரிசோதனையில் இரத்தம 1gm அதிகமாகியுள்ளது.

Archives
categories