வரலாறு :
1880ம் ஆண்டு எங்கள் ஊர் இலந்தைகுளம் தோன்றியது. இந்த ஊரில் குலத்தொழிலாக பனை ஏறும் தொழில் 100% இம்மக்களால் செய்ய்பப்பட்டது. இ ந்த தொழில் அரசின் பாராமுகத்தால் இத்தொழிலில் நலிவுற்று பீடி சுற்றும் தொழில் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் நிறைந்த ஊராக மாறியுள்ளது.
ஆலயம் :
புனித லூர்து அன்னை ஆலயம் மக்களால் ஒலைக்குடிசையாக கட்டப்பட்டது. பின்பு சுண்ணாம்பு கொண்டு ஒடாக மாற்றப்பட்டது. இ ந்த ஆலயத்தில் பல அதிசயங்களும், அற்புதங்களும் நடைபெற்றன. பேய் பிடித்தவர்கள், தீராத நோய் உள்ளவர்கள் எஙகளது ஆலயத்திற்கு வ ந்து சுகம் பெற்றுச் சென்றார்கள். இந்த ஆலயத்தின் பக்கத்திலுள்ள குடிசை வீட்டில் பீடி சுற்றிக்கொண்டிருந்த பெண்ணிடம் காதில் கிட ந்த பாம்படத்தை அறுத்துக்கொண்டு ஒரு திருடன் ஒடிவிட்டான். அந்த நபர் அன்றிலிருந்து நோய்வாய்ப்பட்டார். பல மருத்துவர்களிடம் சென்றும் மா ந்திரவாதிகளிடம் சென்றும் அவர் வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. அவர் இறக்கின்ற பொழுது இலந்தைகுளத்தில் லூர்து அன்னை சக்தி இருப்பதினால் அங்கு சென்று யாரும் களவு செய்யாதீர்கள் என்றார்.
S.L.அருளப்பன் அடிகளார் பங்கு தந்தையாக இரு ந்த காலத்தில் ஊர் மக்களை அழைத்து அன்னை அவர்கள கனவில் தோன்றி ஆலயம் கட்ட வேண்டும் எனறு சொன்னதாக தெரிவித்தார். உடனடியாக ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. பாளை மறைமாவட்ட ஆயர். இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2003ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி ஆலய கொடியேற்றம் நடைபெற்றது. ஜான் பிரிட்டோ பங்கு தந்தையாக இருந்த காலத்தில் மே மாதம் 1ம் தேதி கெபி கட்ட ஆரம்பிக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அப்பொழுது வலது புரத்தில் நீறுற்று கிளம்பியது. அந்த நிரூற்றை பருகியவர்கள் சுகமடைந்தனர். 17.08.2003 அன்று கெபியானது மறைமாவட்ட ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
12.02.2011 பிப்ரவரி 12 அன்று மாதா கண் திற ந்து பார்த்த அதிசயம் நடைபெற்றது. இதனால் குறிப்பாக திருமண வரம் வேண்டி வருபவர்களுக்கு உடனடியாக திருமணம் நடந்து கோண்டிருக்கிறது. அவைபெற்ற ஆசீர்வாதத்தால் இன்று ஊர் செழிப்பாக காணப்படுகிறது.