சிங்கம்பாறை புனித சின்னப்பர் திருத்தல திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16ம் தேதி முதல் 25ம் வரை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதிய இறை சிந்தனையோடு கொண்டாடப் படுகிறது.
இத் திருவிழாவில் உள்ளூர்வாசிகள் மட்டும் அல்லாது வெளி ஊரிலிருந்தும் அனேக பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து புனித சின்னப்பரின் ஆசீரை பெற்றுச் செல்கின்றனர்.
மேலும் இத்திருவிழாவானது அனைத்து மக்களையும் இணைக்கும் ஒரு பெருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் சிங்கம்பாறை வாசிகளும் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர்.
திருவிழா விபரம்
தேதி திருவிழா இறை சிந்தனை
ஜனவரி-16 1-ம் திருவிழா உங்களுக்காக எப்போதுன் இறைவனிடம் வேண்டிவருகிறேன்
ஜனவரி-17 2-ம் திருவிழா நீங்கள் கடவுடைய கோவில்
ஜனவரி-18 3-ம் திருவிழா  நற்செய்தியை முன்னிட்டு வெட்கபடமாட்டேன். ஏனெனில் அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை உரோ 1:16
ஜனவரி-19 4-ம் திருவிழா கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட நீங்கள் அவரோடு இணைந்து வாழுங்கள் கொலோ 2:6
ஜனவரி-20 5-ம் திருவிழா கிறிஸ்துவை ஆதாயமாக்கி கொள்ள எல்லாவற்றையும் குப்பையாக கருதுகிறேன் பிலிப் 3:8
ஜனவரி-21 6-ம் திருவிழா அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடிதளமுமாய் அமைவதாக எபேசி 3:17
ஜனவரி-22 7-ம் திருவிழா நீங்கள் திருமுழுக்கு பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டு… அவரோடு உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள் கொலோ 2:12
ஜனவரி-23 8-ம் திருவிழா  நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிக்கையுடுகிறீர்கள்
ஜனவரி-24 9-ம் திருவிழா வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் கலா 2:20
ஜனவரி-25 10-ம் திருவிழா சவுலின் மனமாற்ற்ம் தி.ப. 9:1-22