01.11.1896-ல் கோவில் கட்டப்பட்டது. சிலுவைபாதை வைக்க 1911ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் நாள் அனுமதி வாங்கப்பட்டது.
அருட்தந்தை குத்தூரியர் காலத்தில் நற்கருணை வைக்கப்பட்டது. அருட்தந்தை.லூர்து ராஜ் அவர்கள் இருக்கும்போது 2 ஆண்டுகள் நற்கருணை எடுத்துவிடப்பட்டது. பின்னர் அருட்தந்தை ஜோக்கிம் அடிகளார் காலத்தில் மீண்டும் வைக்கப்பட்டது.
மேலும் அருட்தந்தை.லூர்து ராஜ் காலத்தில் முக்கிய சாலை அருகில் திருக்குடும்பம் கெபி நிறுவப்பட்டது.
2011-ம் ஆண்டு சக்கரீஸ்த் அறை கட்டப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தளம் உயர்த்தப்பட்டு மார்போனைட் போடப்பட்டது.
ஆலயத்திற்கு இருபுறமும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வீடும் பின்புறத்தில் ஆர்.சி.துவக்கப்பள்ளியும் உள்ளது. தற்போது இங்கு 30 கத்தோலிக்க குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மாதத்தில் 2வது மற்றும் 4வது புதன்கிழமை திருப்பலியும் 5வது ஞாயிறு வரும்போது திருப்பலிகளும் நடைபெறுகின்றன.