18ம் நூற்றாண்டில் மைலபுரம் மற்றும் சுற்று சுகாதார மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் இணைந்ததாக அறியப்படுகிறது.அக்காலத்தில் கீழ கடற்கரை பகுதிகளில் புனித பிரான்சிஸ் சவேரியார் கிறிஸ்தவ மதத்தை பரப்பினார். அந்நாட்களில் மைலபுரம் கிராம மக்களோடு சிங்கம்பாறை, தாளார்குளம் மற்றும் சிற்றூர்களில் உள்ள மக்களும் இணைந்து சிறு குடிசை கோவிலை உருவாக்கினர். 309 ஆண்டுகளுக்கு முன் புதிய ஆலயம் மிக வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டது. இந்த ஆலயத்திலிருந்து புனித சின்னப்பர் சுருபத்தை சிங்கம்பாறை மக்கள் எடுத்து சென்று, சிங்கம்பாறையில் புனித சின்னப்பர் ஆலயத்தை எழுப்பினார்கள். கிறிஸ்தவர்கள் அதிகமாக சிங்கம்பாறையில் வாழ்ந்ததால் திருச்சி மறைமாவட்ட காலத்தில் சிங்கம்பாறை பங்காக்கப்பட்டது.
அத்துடன் தொடக்கப்பள்ளியும், 29.06.1999ல் அருட்த ந்தை ஜோக்கிம் அடிகளார் காலத்தில் புதிய ஆலயம் கட்ட பாளை மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு. இருதயராஜ் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 28.06.2001ல் அருட்தந்தை ஜான் பிரிட்டோவால் கட்டி முடிக்கப்பட்டு, புதிய ஆயர் மேதகு, ஜீடு பால்ராஜ் ஆண்டகை அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. பின்னர் 13.05.2006ல் புனித லூர்து அன்னையின் கெபியானது கட்டி முடிக்கப்பட்டு அருட்தந்தை. வியான்னிராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
புனிதர்களின் வரலாறு
புனித இராயப்பர், சின்னப்பர் இவர்களின் சிறப்பு விழா ஜீன் 29ல் கொண்டாடப்படுகிறது. இராயப்பரின் இயற்பெயர் சிமான். இவர் கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவர். மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்தது. அப்போஸ்தலர் ஆகும்படி தன் சகோதரன் பிலவேந்தரருடன் அழைக்கப்பட்டார். இவரது பெயரை இராயப்பர் என்று இயேசு மாற்றி இவரை தமது திருச்சபை கட்டப்பட இருந்த பாறையாக்கினார். இவர் அப்போஸ்தலர்களின் தலைவர். முதல் பாப்பாண்டவர். தொடக்கத்தில் இவர் அந்தியோக்கியாவில் திருச்சபையை ஆண்டு வந்தார். பின்னர் தலைமை ஸ்தானத்தை ரோமையில் நிறுவினார். நீரோ மன்னர் ஆட்சியில் 29.06.67ல் இவர் இயேசுவுக்கு சாட்சியாக கொல்லப்பட்டார்.
ஜெபம் :
திருச்சபையின் முதல் பாப்பரசரான புனித இராயப்பரே! விண்ணகத்தின் திறவுகோளால் எங்களுக்கு இயேசுவின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கும் பாக்கியத்தை பெற்றுத்தாரும்.
புனித சின்னப்பரே! உமது போதனையை நாங்கள் கடைப்பிடித்து எம்மில் வாழ்வது கிறிஸ்துவாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும்.