ஆலய வரலாறு:
ஒடைமறிச்சான் கிராமத்தில் முதல் R.C.கிறிஸ்தவர் முத்துசாமி என்ற சவரிமுத்து என்பர் தி்ருமணத்தின் போது பெண் வீட்டாரின் வேண்டுதல் இணங்க R.C.கிறிஸ்தவர் ஆனார். இப்போழுது 5 வது தலைமுறை நட ந்துக் கொண்டு இருக்கிறது.
புனித மிக்கேல் அதிதூதரின் பெயரால் இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. முதன் முதலில் சாதாரண மாட்டுத் தொழுவத்தில் வைத்து வழிபாடு நடந்தது. பிறகு காசி நாடார் என்பவரது முயற்சியால் குடிசை ஆலயமாக மாறியது. பின்னர் இறைமக்களின் ஆசையால் 1965ம் ஆண்டு புது ஆலயமாக புதுபிக்கப்பட்டது. இந்நாள் மட்டும் குடும்பத்தினர் ஆலயமாக விளங்குகிறது.
ஆலய வழிபாடு மற்றும் கிறிஸ்து பிறப்பு புது வருட வழிபாடு நடந்து கொண்டிருந்த இந்த ஆலயத்தில் புனித மிக்கேல் அதிதூதரின் திருவிழா 1999ம் ஆண்டு அருட்திரு.தந்தை அன்னாசாமி அவர்களால் தொடங்கப்பட்டு வருடந்தோரும் சிறப்பாக செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. நவநாள் திருப்பலியுடன் புனிதரின் தேர்பவனி நடைபெறும்.
புனித மிக்கேல் அதிதூதர் இவ்வூரிற்கு பாதுகாவலராக இருந்து ஆசி வழங்குகிறார்.
1999 முதல் 2010 வரை ஆலய பொறுபாளராக மை.பவுல் சிங் மற்றும் அ.ராயப்பன் அவர்கள் இருந்து வந்தனர். தலைவராக மை.அல்போன்ஸ் மற்றும் S.அந்தோணி அவர்கள் இருந்து வந்தன்ர்.
2011 முதல் ஆலய பொறுப்பாளராக மை.அல்போன்ஸ் மற்றும் மா. அந்தோணி முத்து இருந்து வருகின்றனர். ஊர் தலைவராக மா.அந்தோணி அவர்கள் உள்ளார். உபதேசியளராக A.டேவிட் சர்ச்சில் பணிபுரி ந்து வருகிறார்.
அன்பியம் :
புனித மிக்கேல் அதிதூதர் அன்பியம். வழிகாட்டியாக மை.ஜேசையா அவர்களும் நடத்துனராக பவுல் சிங் அவர்களும் உள்ளனர். இவ்வன்பியம் மூலமாக பல நபர்கள் தங்கள் வேண்டும் காரியங்கள் மிக்கேல் அதிதூதர் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்தவரிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். இதன் மூலம் நடக்கும் அற செயல்கள்,
- குடும்ப ஜெபம்
- ஏழை எளிய மக்களுக்கு உதவுதல்
- திக்கற்றவர்களுக்கா ஜெபித்தல்.
- பிற சபையினருக்காக ஜெபித்தல்.
ஊர் வரலாறு:
இவ்வூர் சிங்கப்பாறை திருத்தலத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. ஆலங்குளத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரின் தொழிலாக விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழில் உள்ளது. இங்கு இந்து சபை, தென் இந்திய திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபை உள்ளது. நம் சபையில் மொத்தம் 30 குடும்பங்கள் உள்ளன.