1700 ம் வருடம் இங்கு புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது. இவ்வாலயம் ஓலைக்கூரையால் கட்டப்பட்டது. பின்பு ஒருநாள் இது தீப்பிடித்ததால் 1945ம் ஆண்டு ஒருநாள் மாலையில் புது ஆலயம் கட்ட அடித்தளம் இடப்பட்டது. அன்றைய தினம் காலையில்தான் சிங்கம்பாறையிலும் புதிய ஆலயம் கட்ட அடித்தளம் இடப்பட்டது.
1946-ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதைய பங்குத்தந்தை இருந்தவர் அருட்தந்தை.விசுவாசநாதர் ஆவார். அப்போது 100 கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன. இதே ஆண்டு அந்தோணியார் குருசடி கட்டப்பட்டது.

கிறிஸ்து அரசர் ஆலயம் :
பின்பு இது கிறிஸ்து அரசர் ஆலயமாக மாற்றப்பட்டது. அப்பொழுது முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி ஞாயிறு திருவிழா கொண்டாடப்பட்டது. அதன்பின் திருச்சபை இவ்விழாவை நவம்பரில் மாற்றிய பொழுது திருவிழாவும் மாற்றப்பட்டது. ஊர் மக்கள் வசதிக்காக இப்போது மே மாதத்தில் விண்ணேற்பு பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அருட்தந்தை ஜோக்கிம் காலத்தில் ஓடு போடப்பட்டிருந்த ஆலயத்திற்கு ஆஸ்பெஸ்டால் கூரை போடப்பட்டது. இப்போது 25 குடும்பங்கள் உள்ளன.

மேலும் ஆலய சுற்றுச்சுவர் 2010-ல் ஆரம்பிக்கப்பட்டு 2011-ல் முடிவு பெற்றது.

தற்போது மாதம் 2ம் ஞாயிறு திருப்பலியும், மேலும் தேவைப்படுகிறபோது திருப்பலிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.