செபஸ்தியார்புரம் ஆலயம் மற்றும் ஊரின் வரலாறு சிங்கம்பாறை பங்கு முக்கூடலுக்கு மேற்கு புறமாக அமைந்திருக்கும் இலட்சுமிபுரம் என்ற கிராமத்தில் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதி செபஸ்தியார்புரமாக திகழ்கிறது. 18ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் முதலில் சிறுகுடிசை கோயிலாகவும் பின் 18ம் நூற்றாண்டின் இறுதிகாலங்களில் பிரெஞ்சுக் கட்டிட கலையின் சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டது. தற்பொதைய புனித அந்தோணியார் ஆலயம் முன்னோர்களின் சேமிப்புகளாலும் உடல் உழைப்பினாலும் உருவான எழில் மிகு ஆழயமாகும்.
இயேசுவை அதிகமாக நேசித்தவரும், நன்னாருக்கு அழியாத நற்றவருமான புனித அந்தோணியார் செபஸ்தியார்புரத்தின் பாதுகாவலராக திகழ்கிறார். இருந்த போதிலும் நோயற்றவரை தாயுள்ளத்தில் காக்கும் வரம் பெற்ற தூயராம் செபஸ்தியாரையும் எம்மக்கள் ஒவ்வொரு வருடமும் திருவிழாவில் நினைவு கூர்ந்து கொண்டாடி வருகிறார்கள். இரு புனிதர்களும் எங்களை இறை வழியில் நடத்து ஞான குருக்களாக விளங்குகிறார்கள். 40 வருடங்களுக்கு முன்புவரை ஏழு சப்பர பவனியுடன் திருவிழா கண்ட சீர்மிகு சிற்றூர் என்ற பெருமையும் எங்கள் ஊருக்கு உண்டு. 80 குடும்பங்கள் வரை எழுச்சியுடன், இறை நம்பிக்கையுடனும் வாழ் ந்த எம்முன்னோர்கள் கொண்டாடிய திருவிழா நாட்களில் அக்கம்பக்கத்து ஊர் மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். 20 வருடங்களுக்கு முன்பு வரை அருட்திரு அம்புரோஸ் அடிகளார் அவர்களால் ஆலயத்தின் வெளிச்சுவர் சிமெண்ட் பூசப்பட்டது. அதன்பிறகு அருட்தந்தை ஜான்பிரிட்டோ அவர்கள் உதவியுடன், எங்களால் இயன்ற அளவு நிதி திரட்டி ஆலய மேற்கூறை ஒழுகியது சரி செய்யப்பட்டது. தற்போது பங்கு த ந்தையாக இருக்கும் அருட்தந்தை அலோசியஸ் துரைராஜ் அவர்களால் திருப்பலி மற்றும் திருவருட்சாதனங்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது.